எடப்பாடியாரும், ஸ்டாலினும் "ஓகே" சொன்னது எப்படி.. மதிமுக, விசிகவை ஏன் கூப்பிடலை.. பரபர பின்னணி!

அதிமுக, திமுகவும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்க என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 மாதம் மட்டும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று திமுகவும், அதிமுக உட்பட சேர்ந்து முடிவெடுத்துள்ளன.. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஒருசில தகவல்கள் கசிந்துள்ளன.

நேற்று அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடந்தது.. இறுதியில், ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு மட்டும் இயக்க அனுமதிக்கலாம் என்ற முடிவும் எட்டப்பட்டது. குறிப்பாக, எடப்பாடியார் இந்த முடிவுக்கு வர என்ன காரணம்? அதே முடிவுக்கு திமுகவும் உடன்பட என்ன காரணம்?

தற்போது காபந்து அரசு நடந்து கொண்டிருக்கிறது.. எந்த முக்கிய முடிவையும் முதல்வரால் எடுக்க முடியாது.. ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பது குறித்து மாநில அரசு கருத்து தர வேண்டும் என்று கோர்ட் சொன்னதுமே, தலைமை செயலக அதிகாரிகள், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் எடப்பாடியார் விவாதித்தாராம்..

சறுக்கல்

சறுக்கல்

இதே ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் ஆளும் அரசுக்கு ஏற்கனவே கெட்ட பெயர் இருக்கிறது.. மேலும் இந்த ஆலையை மூடியதே அதிமுக அரசுதான் என்பதால், மறுபடியும் எப்படி நாமளே திறப்பது? அதனால் மேலும் கெட்ட பெயரும், அதிருப்தியும் வராதா? தென்மண்டலத்தில் ஏற்கனவே அதிமுக சறுக்கலில் உள்ளபோது, இந்த ஆலையை திறப்பதால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடுமோ என்ற ஐயங்களும் எழுந்தனவாம். அதனால்தான், இந்த விஷயத்தில் நாமளே ஒரு முடிவு எடுத்தால்தானே தவறு.. அனைத்து கட்சிகளின் ஆலோசனையும் கேட்டு பெற்றால், அதன்படி முடிவெடுத்தால் அது நல்லதுதானே? என்ற ரீதியில் ஆலோசனை நடந்ததாம்.

 ஆலோசனை

ஆலோசனை

அதேபோல, திமுக தரப்பில், இது மக்களின் உயிர் பிரச்சனை, ஆக்ஸிஜன் விஷயத்தில் அரசியல் செய்தால், உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும்.. மேலும் ஆக்ஸிஜன் உற்பத்தி எதிர்க்கட்சிகள்தான் காரணமாக இருந்துவிட்டார்கள் என்று நாளை அதிமுக தரப்பே திமுக பக்கம் பழியை திருப்பி, காரணம் சொல்லிவிடுமோ? என்பது போன்ற ஆலோசனைகளை திமுகவும் நடத்தியதாம்..

 அதிருப்தி

அதிருப்தி

அதனாலயே வெறும் ஆக்ஸிஜன் தயாரிப்புக்கு மட்டும் என்ற நிபந்தனையுடன் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த முடிவினால், தென்மண்டல மக்களின் அதிருப்திகளை அதிமுக, திமுக இரு கட்சிகளுமே பெற வாய்ப்பிருக்காது என்றும் நம்பப்படுகிறது. இந்த முடிவு தற்காலிகமானதுதான்... திமுக ஆட்சி அமைந்த பிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்ற ஒரு உறுதியான அறிக்கையையும் ஸ்டாலின் விடுத்திருந்தார்.

 அழைப்பு இல்லை

அழைப்பு இல்லை

எனினும், இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தன... விசிக, மதிமுக கட்சிகளை காணோம்.. அதேபோல, நாம் தமிழர், மநீம கட்சிகளுக்கும் அழைப்பு இல்லை.. இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.. ஸ்டெர்லைட் விவகாரத்தை பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே போராடி வருவது இந்த கட்சிகள்தான் என்பது தமிழகம் அறிந்த உண்மை.. அப்படி இருந்தும் இவர்களை ஏன் அழைக்கவில்லை என தெரியவில்லை.

 பராமரிப்பு பணி

பராமரிப்பு பணி

அதேபோல, இந்த ஆலை திறப்பது குறித்த சில சந்தேகங்கள் பரவலாக மக்கள் மனசில் எழுந்து வருகின்றன.. 2 வருஷமாக ஆலை மூடிக்கிடக்கும்போது, அதன் பராமரிப்பு பணி செய்யவே எப்படியும் 2மாதம் ஆகிவிடுமே... எப்படி 4 மாதம் போதுமானதாக இருக்கும்? ஸ்டெர்லைட்டை தவிர, ஆக்ஸிஜன் தயாரிப்புக்கு மாற்று திட்டங்கள் எதுவும் கையில் இல்லை என்று கோர்ட்டில் ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை? அப்படி என்றால், மாற்று திட்டம் ஏதேனும் கையில் இருக்கிறதா?

 தென்மாவட்ட மக்கள்

தென்மாவட்ட மக்கள்

ஒருவேளை தேர்தல் நடந்து முடியாமல் இருந்திருந்தால், இப்படித்தான் கட்சிகள் அனுமதி தந்திருப்பார்களா? தென்மாவட்ட மக்கள்தான் முக்கியம் என்று ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டாம் என்றுதானே சொல்லி இருப்பார்கள்? இப்போதே கொரோனா குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலர் சொல்லி வருகிறார்.. ஒருவேளை வரும் மாதமே தொற்று குறைந்துவிட்டால், ஆலையை இழுத்து மூடிவிடுவார்களா? அல்லது அடுத்து வரும் ஆட்சி அதை அப்படியே தொடர்ந்து நடத்துமா?" என்பன போன்ற கேள்விகளும் நம்மிடம் தொத்தி நிற்கவே செய்கின்றன..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+