டெல்லிக்கு வந்த உச்சகட்ட ‘கோபம்’.. வலையிலேயே சிக்காத ஸ்டாலின்.. எப்படி? - உடைத்துப் பேசும் மணி!
எதிர்க்கட்சிகளை மடக்க பாஜகவின் திட்டம் பற்றி விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
சென்னை : பாஜகவுக்கு எதிராகப் பேசும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை குறிவைக்கும் பாஜக அரசு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மட்டும் விட்டு வைத்திருப்பது ஏன் என்பது பற்றி தனது பார்வையைச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளுக்கு தொல்லை கொடுக்கும் பாஜக அரசு, திமுகவை கடந்த 2 ஆண்டுகளில் ரெய்டு என தொடவே இல்லை.
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்துள்ள பத்திரிகையாளர் மணி கூறுவது இனி..

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவு
கேள்வி : தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் இன்னும் சிக்கல் நிலவுகிறது. கேசிஆர் குடும்பத்தினர் மீது மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் வளையமிட்டுள்ளன. எனவே, கேசிஆர் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா?
மணி :
எந்த ஒரு கருமேகமும் அதனுடன் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றைக் கொண்டுவரும் என்று சொல்வார்கள். இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். மாறாக இதில் மனம் சோர்ந்து தொல்லைகளுக்கு அஞ்சி, திசைக்கு ஒருவராக திரும்பி நின்றால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. மீண்டும் மீண்டும் சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டுகள் நடந்தாலும், மனம் தளராமல் நின்று காட்ட வேண்டும். எதிர்க்கட்சிகள் சேராமல் இருப்பதற்கான எல்லா வேலைகளையும் மோடி செய்வார். அதைப் புரிந்துகொண்டு ஒன்று சேரவேண்டும். மார்ச் 1ஆம் தேதி சென்னையில் நடந்த கூட்டம் அதற்கு ஒரு சிறிய முன்னெடுப்பாக இருந்தது. அதற்கு விழுந்த அடிதான், 12 நாட்களாக லாலு பிரசாத் குடும்பத்தைப் பாடாய்ப் படுத்துகிறார்கள்.

விலை கொடுக்கும் லாலு
இந்திரா காந்தியை விட மோசமான சர்வாதிகாரத்தை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். இந்த மோசமான சூழலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே நிற்கிறது. மார்ச் 1ஆம் தேதி நடந்த கூட்டத்தில் முக்கியமான 3 எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல், பி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. ஆனால், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சென்னையில் ஒன்றாக பங்கேற்றது பாஜகவுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான விலையை லாலு பிரசாத் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

உளவியல் யுத்தம்
கேள்வி : எப்போதெல்லாம் விசாரணை அமைப்புகள் ஒரு தலைவரின் மீது தீவிரமாக இயங்கியதோ, அடுத்து வந்த தேர்தல்களில் அந்த தலைவர்களுக்கு ‘பூஸ்ட் அப்' கிடைத்துள்ளது. தொடர் தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு அனுதாபம் ஏற்படுத்துவதை பாஜக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையோ?
மணி : இன்றைய பிரதமர் மோடியின் மிகப்பெரிய பிளஸ், எதிர்க்கட்சிகளுக்கு தொடர் தோல்வியைக் கொடுத்தது அல்ல, தோல்வி மனப்பான்மையை பரிசாகக் கொடுத்ததுதான். மோடி உளவியலை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014 முதல் தற்போது வரை எத்தனையோ இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஜெயித்திருக்கின்றன. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பல இடங்களில் ஜெயித்திருந்தாலும், ஊடக பலத்தை வைத்து தாங்கள் வென்றுகொண்டே இருப்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்கிறது பாஜக. இதுதான் இதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல். உளவியல் யுத்தத்தை மோடி நடத்தும்போது அதற்கு ஏற்றவகையிலே செயல்பட வேண்டும்.

ஏற்பாடு செய்த ஸ்டாலினுக்கு?
கேள்வி : தேஜஸ்வி மீதான அமலாக்கத்துறை தாக்குதலுக்கு காரணம் மார்ச் 1 சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் தான் என்று சொல்கிறீர்கள். கூட்டத்தில் பேசியவர்களுக்கே இந்த கதி என்றால் அந்தப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த திமுகவை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறது?
மணி : இந்தியா முழுவதும் மோடியை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளால் வேட்டையாடப்படும்போது இங்கு திமுகவுக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்காமல் விட்டு வைத்திருப்பது ஏன் என்பது ஒரு நல்ல கேள்வி. காஷ்மீர் முதல் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளுக்கு தொல்லை கொடுக்கும் மோடி, திமுகவை கடந்த 2 ஆண்டுகளில் தொடவே இல்லை. இது புயலுக்கு முன் அமைதியாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது அரசியலாக இருக்கலாம். இந்தியாவிலேயே பாஜக வெறுப்புணர்வு அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இப்போது போய் ஸ்டாலின் மீது கை வைப்பதால் பாஜக மீதான கோபம் இன்னும் அதிகமாகும் என்பது ஒரு பாயிண்ட். ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படப்போவதில்லை.

எதிர்க்கட்சிகள் செய்யாத ஒன்றை
ஆனால், ஸ்டாலின் குடும்பத்தின் மீது கை வைப்பதால் பலன் அடையப்போவது எடப்பாடி பழனிசாமி. எனவே, அதனால் தங்களுக்கு லாபம் இல்லை என்பதால் அதனைச் செய்ய மாட்டார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்த ஸ்டாலின் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டால் நிலைமை மாறக்கூடும். அரவிந்த் கெஜ்ரிவால், கேசிஆர், மம்தா பானர்ஜி ஆகிய மூவரும் பாஜகவை எதிர்க்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் செய்யாத காரியத்தை மு.க.ஸ்டாலின் செய்கிறார். அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த நினைக்கிறார். ஆனாலும், ஒரு ரெய்டு கூட வரவில்லை, ஏன் வரவில்லை என்று உண்மையிலேயே தெரியவில்லை.
-
ராஜீவ் காந்தி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கனிமொழி.. திருச்சி மாநாட்டில் சம்பவம்! ஷாக்கில் உதயநிதி -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
ஒத்த சீட்டு வைகோ..கடுகடு கம்யூனிஸ்ட்கள்! விரக்தியில் விசிக திருமா! ஸ்டாலினுக்கு புது தலைவலி ஸ்டார்ட் -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்!











Click it and Unblock the Notifications