அதே சம்பவம்.. திமுக இளைஞரணி மாநாட்டுக்கு காரணமே விஜய் தானா? 2007ல் என்ன நடந்தது? ஆஹா!
சென்னை: 16 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இளைஞரணி மாநாடு வரும் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. 2007ல் இளைஞரணி மாநாடு நடைபெற்றதற்கு சொல்லப்பட்ட காரணம் போலவே, இப்போதும் ஒரு விஷயம் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் திட்டமே உதயநிதியின் மாநாட்டுக்கு காரணம் என்கிறார்கள்.
திமுக இளைஞரணி 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றிலேயே முன்னோடியாக தனக்கான இளைஞர் அணியை உருவாக்கிய அரசியல் இயக்கம் திமுக. அதன் முதல் அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின். இளைஞரணி தொடங்கப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2007ல் தான் திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

இளைஞரணியின் முதல் மாநாடு: 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15,16 ஆகிய தேதிகளில் நெல்லையில் திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. நெல்லை முழுவதும் அலங்கார வளைவுகளும், வரவேற்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு பிரமாண்டமான முறையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. கருணாநிதி, முக ஸ்டாலின், அழகிரி போன்றோரின் பிரமாண்ட படங்கள் திரும்பும் திசையெல்லாம் இடம்பெற்றிருந்தன.
இளைஞரணி மாநாட்டையொட்டி முக ஸ்டாலின் தலைமையில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இருந்து பேரணி நடைபெற்றது. முக ஸ்டாலின் இளைஞரணியின் வெள்ளைச் சீருடை அணிந்து, திறந்த ஜீப்பில் அணி வகுத்துச் சென்றார். அவருக்கு முன்பு ஸ்டாலினின் அப்போதைய வயதை குறிக்கும் வகையில் 56 குதிரைகளில் இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையுடன் குதிரைப்படை அணி வகுப்பு நடத்தினர். ஸ்டாலினுக்குப் பின்னால் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞரணியினர் அணிவகுத்துச் சென்றனர்.
மாநாடு நடத்த காரணம்: இந்த மாநாட்டிற்கான முக்கிய காரணமாக, தமிழ்நாட்டில் திசை மாறிச் செல்லும் இளைஞர்களை ஒருநிலைப்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நெல்லையில் மாநில இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளதாக அப்போது, இளைஞரணி பொறுப்பாளராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்த மு.க.ஸ்டாலின் கூறினார்.
அப்போது அரசியலில் புதிதாக களமிறங்கி இருந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், இளைஞர்கள் மற்றும் பெண்களை வெகுவாக ஈர்த்து வந்தார். அதேபோல, நடிகர் சரத்குமாரும் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இன்னொரு பக்கம் நடிகர் கார்த்திக், ஃபார்வர்டு பிளாக் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நடிகர்களின் அரசியல் பிரவேசத்தால் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர்.
இளைஞர்களை ஈர்க்க: குறிப்பாக விஜயகாந்த்தின் தேமுதிகவில் ஏராளமான இளைஞர்கள் இணைந்தனர். இது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்போதைய திமுக தலைவரும், அப்போதைய இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின், நடிகர்களின் அரசியல் கட்சிகளில் இளைஞர்கள் சேர்கிறார்கள், புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது எனப் பேசிவந்தார்.
முதல்வர் ஸ்டாலின், கருணாநிதிக்குப் பிறகு அரசியலில் கோலோச்ச ஆயத்தமான சூழலில், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோருக்கு இளைஞர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பே, நெல்லையில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற காரணமாக இருந்தது. இளைஞர்களை திமுகவை நோக்கி இழுத்து வர வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடத்தப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு: இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் திமுக இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்பிறகு டார்கெட் நிர்ணயிக்கப்பட்டு, இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை செம வேகமாக நடைபெற்றது. சில மாதங்களாக இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாநாட்டுக்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகள் தீவிரமாக எழுந்து வருகின்றன. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நலப் பணிகளில் விஜய் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். விஜய் உத்தரவின் பேரில் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைத்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
காரணம் நடிகர் விஜய்: இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலில் இறங்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது அவரது அரசியல் பிரவேசம் இருக்கலாம் என்ற பேச்சுகள் நிலவுகின்றன. விஜய் அரசியல் பிரவேசம், ஏராளமான இளைஞர்களை ஈர்க்கக்கூடும் எனக் கருதப்படுவதால், திமுக இளைஞரணி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யவே டிசம்பரில் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அன்று விஜயகாந்த் - சரத்குமார் ஆகியோருக்கு எதிராக இளைஞரணி மாநாட்டை மு.க.ஸ்டாலின் நடத்தியது போல, இன்று விஜய்க்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் மாநாட்டை நடத்தவுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த மாநாடு மைலேஜ் கொடுக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள்.
-
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
உதயநிதி கேட்டதில் என்ன தப்பு? - எடப்பாடியை விமர்சித்த சசிகலா.. பழிக்குப் பழியா இது? -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
Mylapore: அக்கா தமிழிசையை ஆளுநராக்குவோம்! இது சட்டசபை தேர்தல்தானே! உதயநிதி ஏன் இப்படி சொல்கிறார்? -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications