ஆளுநரின் 8 அஸ்திரம்.. நேரடியாக களமிறங்கிய "ஸ்டாலின்".. முழு "ஸ்விங்கில்" பதிலடி.. ஒன்னு கூடிட்டாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவிக்கு பதிலடி கொடுக்க ஆளும் திமுக அரசு தயாராகி வருவதாக அறிவாலய தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் ரவி - தமிழ்நாடு திமுக அரசு இடையிலான மோதல் மீண்டும் எழும்ப தொடங்கி உள்ளது. நீட் மசோதாவை டெல்லிக்கு அனுப்பிய ஆளுநர் ரவி - திமுக அரசு இடையிலான மோதல் கொஞ்சம் குறைந்தது.

ஆனால் சமீப காலமாக ஆளுநரின் சில பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக ஆளும் திமுக தரப்பு கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு ஆளுநரை முழு ஸ்விங்கில் எதிர்க்க ஆளும் திமுக முடிவு செய்துள்ளதாகவும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோதல்

மோதல்

ஆளுநர் ரவி - திமுக இடையே மோதல் ஏற்பட முக்கியமான சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக ஆளுநரின் 8 நடவடிக்கைகள் திமுகவை கோபப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அஸ்திரம் 1 - ஆளுநர் ரவி மேடைக்கு மேடை சனாதன தர்மம் பற்றி பேசி வருகிறார். திராவிட கொள்கை, பெரியார் கொள்கை ஆட்சி செய்யும் மாநிலத்தில் ஆளுநர் இப்படி தன்னிச்சையாக செயல்படுவது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

அஸ்திரம் 2 - ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தியது. இதற்கு இணை வேந்தர் அமைச்சர் பொன்முடியை அழைக்காதது சர்ச்சையானது.

பல்வேறு அஸ்திரங்கள்

பல்வேறு அஸ்திரங்கள்

அஸ்திரம் 3 - ஜீயர்கள் மற்றும் ஆதீனங்களுடன் ஆளுநர் நெருக்கமாக இருப்பது. இதனால் ஆதீனங்கள் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது.

அஸ்திரம் 4 - தேசிய கல்விக்கொள்கை குறித்து மீண்டும் மீண்டும் மேடைகளில் ஆளுநர் பேசுவது.

அஸ்திரம் 5 - சிலப்பதிகாரத்தில் இந்துத்துவா கொள்கை இருந்தது என்பது உட்பட தமிழர் நாகரீகம், இந்துத்துவா நாகரீகத்தை ஒப்பிட்டு பேசுவது.

 ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அஸ்திரம் 6 - கோவை பயணம், தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு ஈரோட்டிற்கு சென்றது போன்ற கொங்கு ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது.

அஸ்திரம் 7 - பெரும்பாலான மசோதாக்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

அஸ்திரம் 8 - கடைசியாக ரஜினிகாந்தை சந்தித்து அரசியல் பேசியது. இப்படி 8 விஷயங்கள் ஆளுநர் தரப்பிற்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் மோதலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பதிலடி

பதிலடி

இதற்குத்தான் பதிலடி கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஆளுநருக்கு பதிலடி தரும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் மாநாடு நடக்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடி அறிவித்துள்ளார். வருகிற 17-ந் தேதி பல்கலைக்கழக துணை வேந்தர்களின் மாநாடு சென்னையில் நடக்க உள்ளது. இதில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளது.

லகான்

லகான்

கடந்த மே மாதம் ஊட்டியில் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை நடத்தினார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த தனிப்பட்ட மாநாட்டை விரும்பவில்லை. இதையடுத்து ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை அறிவிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த மசோதாவிற்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் இப்பவும் ஆளுநர்தான் பல்கலைக்கழக வேந்தராக இருந்து வருகிறார்.

வேந்தர்

வேந்தர்

ஆனால் வேந்தரான ஆளுநரை அழைக்காமல் முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். ஆளுநரின் செயல்பாடுகளுக்கு பதிலடி தரும் விதமாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களமிறங்கி உள்ளார். இது மட்டுமின்றி ஆளுநரை ரஜினி சந்தித்து ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியதை ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் பலவும் எதிர்த்து உள்ளனர். விசிக, சிபிஎம் உள்ளுற்ற கட்சிகள் ஆளுநரை கடுமையாக விமர்சித்து உள்ளனர். ஆளுநருக்கு எதிராக இப்படி ஆளும் கூட்டணிகள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவிப்பதும் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+