ஆட்டமே வேற மாதிரி இருக்கும்.. 3 ரூட்களில் டெல்லி பிரஷர்! பார்முலாவை மாற்றிய ஸ்டாலின்! பார்த்தீங்களா?
சென்னை: ஆளுநருக்கு எதிராக அரசியல் செய்யும் விதத்தில் திமுக புதிய முறையை கையில் எடுத்து உள்ளது.
ஆளுநர் ஆர். என் ரவியை திரும்ப பெற வேண்டும் என்று ஆளும் திமுக தரப்பு கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி நியமனத்தில் இருந்தே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் லேசான உரசல் இருந்தது.
முதலில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய போது அது பெரிய சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தை புறக்கணித்தது.
குடியரசுத் தினம் அன்று கொடுக்கப்பட்ட தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது.

புறக்கணிப்பு
ஆனால் அதன்பின் இரண்டாவது முறை நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நன்றி சொன்னார். இதன்பின் ஆளுநர் ஆர். என் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தியது சர்ச்சனையாது. இதற்கு பதிலடியாக முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை சட்டசபையில் திமுக நிறைவேற்றியது. இந்த விவகாரத்திலும் திமுக - ஆளுநர் ரவி இடையே உரசல் வந்தது.

உரசல்
அதன்பின் பல்வேறு இடங்களில் ஆளுநர் ஆர். என் ரவி அரசியல் ரீதியாக பேசியது சர்ச்சையானது. சானதானம் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவர் பேசியது கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் இந்த விவகாரங்களில் எல்லாம் திமுக நேரடியாக தலையிட்டுக்கொள்ளாமல் கொஞ்சம் அமைதியாக காய் நகர்த்தியது. திமுக எம்பி ஆ ராசா மட்டுமே ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வந்தார். மற்றபடி பெரிதாக திமுக நிர்வாகிகள் இதை கண்டுகொள்ளவில்லை.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் ஆளுநர் பேசியது பெரிய சர்ச்சையானது. என்.ஐ.ஏ. விசாரணைக்கு 4 நாட்கள் தாமதமாக தமிழக அரசு பரிந்துரைத்தது ஏன்? இந்த தாமதத்தால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று ஆளுநர் ரவி தாக்கி பேசினார். ஆளுநர் ஒருவர் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் குறித்து இப்படி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அண்ணாமலை வைத்த புகார்களை போலவே இவரும் பேசியது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

பொறுத்தது போதும்
இந்த நிலையில்தான் ஆளுநருக்கு எதிராக திமுக தற்போது அதிரடியாக களமிறங்கி உள்ளது. இதுவரை பூ பாதையில் சென்று கொண்டு இருந்த திமுக தற்போது சிங்கப்பாதையை எடுத்து உள்ளதாம். இது தொடர்பாக கோட்டையில் உள்ள சில உடன் பிறப்புகளிடம் பேசிய போது அவர்கள் சொன்ன விஷயம், மாநில அரசுகளுக்கு 3 விதங்களில் பாஜக பிரஷர் தருகிறது. ஒன்று நேரடியாக சிபிஐ, அமலாத்துறையை ரெய்டுக்கு அனுப்புகிறது. இல்லை ஆளுநரை வைத்து பிரஷர் கொடுக்கிறது. அதுவும் இல்லை என்றால் எம்எல்ஏக்களை வாங்கி ஆபரேஷன் கமலா நடத்துகிறது.

ஆளுநர்
தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்துதான் பிரஷர் கொடுக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் ஆளுநராக இருந்த போது அங்கு முதல்வர் மம்தா கடும் அழுத்தத்திற்கு உள்ளானார். கேரளாவில் ஆளுநர் ஆரிப் கான் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடும் பிரஷர் தருகிறார். அமைச்சரை எல்லாம் நீக்க சொல்கிறார். அங்கு எல்லாம் நிலைமை கைமீறி போய் உள்ளது.

மோசமான நிலைமை
தற்போது தமிழ்நாட்டில் அந்த அளவிற்கு நிலைமை இல்லை. இருந்தாலும் ஆளுநர் இப்படி போலீசை எல்லாம் விமர்சனம் செய்வது தவறு. முதல்வர் ஒரு diginity யை கடைபிடிக்கிறார். அதை ஆளுநரும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்வது இல்லை. தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளா போல நிலைமை மோசமாகிவிட கூடாது என்றுதான் திமுக புதிய ஆட்டத்தை கையில் எடுத்து உள்ளது. நேரடியாக ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்துள்ளது.

திமுக பிளான்
திமுகவின் செயல்பாடுகள் இனி வேறு மாதிரி இருக்கும் என்கிறார்கள் உடன் பிறப்புகள். அதாவது ஆளுநர் தொடர்ந்து இப்படியே பேசிக்கொண்டே சென்றால் நமக்கு அழுத்தம் அதிகரிக்கும். 2024 தேர்தலுக்கு முன்பாக இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆளுநர் ஆர். என் ரவியை திரும்ப பெற வேண்டும் என்று ஆளும் திமுக தரப்பு கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து உள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து 40 எம்பிக்களின் கையெழுத்தை திமுக பெற்றுள்ளது. இதையடுத்து குடியரசுத் தலைவரை திமுக எம்பிக்கள் குழு திமுக எம்பி டிஆர் பாலு தலைமையில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. எம்பிக்கள் கையெழுத்து போட்ட கடிதத்தை அவர்கள் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications