பாம்பும் கீரியுமாக மாறிய எடப்பாடி -அண்ணாமலை.. நேராக போனை போட்டே விசாரித்த இபிஎஸ்.. என்ன நடந்தது?
சென்னை: எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் பாம்பும் கீரியும் போல இருக்கிறார்கள். அண்ணாமலை ஜெயிக்கக் கூடாது ? டெபாசிட் போக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார், இது தொடர்பாக நிர்வாகிகளுக்கு போன் செய்து தீவிரமாக எடப்பாடி பழனிசாமி விசாரித்து வருகிறாராம்.
எடப்பாடி பழனிசாமியை பார்க்க சமீபத்தில் கடலூர் நிர்வாகிள் சேலம் சென்றுள்ளனர். அவரிடம் அனுமதி வாங்கியே கடலூர் நிர்வாகிகள் சேலம் சென்றுள்ளனர்.

சேலம் சென்ற பின் எடப்பாடி பிஏவிற்கு கால் செய்துள்ளனர். ஆனால் எடப்பாடி பிஏ.. அண்ணன் இங்கே இல்லை. அவரை பார்க்க முடியாது. இப்போதைக்கு பார்க்க முடியாது. சேலத்தில் காத்திருக்க வேண்டாம். இங்கே இருக்க வேண்டாம். அவர் உங்களை தேவைப்படும் சமயத்தில் அழைப்பார் என்று கூறியுள்ளனர்.
எடப்பாடி எங்கே; இதையடுத்து கடலூர் நிர்வாகிகள் வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு போன் செய்து எடப்பாடி எங்கே .. எடப்பாடி எங்கே போனார் என்று குழப்பமாக பேசி உள்ளனர். எடப்பாடி எங்கே கிளம்பினார் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
வீடியோ கால்; இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வீடியோ கால் செய்துள்ளார். அந்த வீடியோ காலில்.. என்னை பின்னர் பார்க்கலாம். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் அவசர வேலையாக வெளியில் உள்ளேன் என்று கூறியுள்ளாராம். இந்த நிலையில்தான் எடப்பாடி கேரளாவில் உள்ள வயநாட்டிற்கு சென்றதாக நிர்வாகிகளுக்கு தகவல் சென்றது. தனக்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அவர் வயநாட்டிற்கு சென்று இருந்தார்.
நிர்வாகிகள் விசாரிப்பு: கடந்த வாரம் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி விட்ட எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புகொண்டு அதிமுகவினர் நலம் விசாரித்தபடி இருக்கிறார்கள். கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர், ''ஆயுர் வேத சிகிச்சைக்குப் பிறகு கால் வலி எப்படிண்ணே இருக்கு ? இனியாவது அதிக நேரம் நிற்காதீர்கள். தேவையான அளவுக்கு ஓய்வு எடுங்கள் அண்ணே'' என்று அக்கறையுடன் சொல்லியிருக்கிறார்கள். அப்போது, பல்வேறு விசயங்களை அவர்களுடன் விவாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
குறிப்பாக, கோவை தொகுதி ரிசல்ட் எப்படி ? என்று மீண்டும் ஒருமுறை வேலுமணியிடம் கேட்டிருக்கிறார். ஏற்கனவே இத்தொகுதி குறித்து வேலுமணியிடம் எடப்பாடி விவாதித்துவிட்டாலும், கேரளாவில் சிகிச்சையில் இருந்த போது அவருக்கு கிடைத்த சில தகவல்களால் தான் மீண்டும் வேலுமணியிடம் விசாரித்திருக்கிறார்.

எடப்பாடியும் அண்ணாமலையும் பாம்பும் கீரியும் போல இருக்கிறார்கள். அண்ணாமலை ஜெயிக்கக் கூடாது ? டெபாசிட் போக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். இதே சிந்தனையில்தான் திமுக தலைமையும் இருக்கிறது. அதாவது, ஸ்டாலினும் சரி, எடப்பாடியும் சரி, கோவையில் திமுக ஜெயிக்கணும் அல்லது அதிமுக ஜெயிக்கணும். அண்ணாமலை ஜெயிக்கக்கூடாது என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
ஆனால், அதிமுகவில் சிலரின் உள்குத்து காரணமாக, பாஜக இரண்டாவது இடத்துக்கு வருவதாக கிடைத்த தகவலால் தான் எடப்பாடி கோபத்தில் உள்ளதாக கூறுகிறார்கள் விபரமறிந்த அதிமுகவினர். இந்த நிலையில், கோவை தொகுதியின் பகுதி வாரியாக பதிவான வாக்குகள், அதில் அதிமுகவின் வாக்குகள், திமுகவுக்கான வாக்குகள், பாஜக வாக்குகள் எப்படியெல்லாம் விழுந்திருக்கும் என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார் வேலுமணி. ஜூன் 4 வரை, இப்படிப்பட்ட ஜூரம் பிரதான கட்சிகளிடம் பரவியபடிதான் இருக்கும்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications