கோர்ட்டிற்கு போயும் விடாத எடப்பாடி! திமுகவை "மறைமுகமாக" இழுத்து பரபர வாதம்! அதிமுக வழக்கில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான உயர் நீதிமன்ற வழக்கில் இன்று திமுகவை மறைமுகமாக விமர்சித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது.

Recommended Video

    அதிமுக பொதுக்குழு தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

    அதிமுக பொதுக்குழு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி ஜெயசந்திரன் ஓ பன்னீர்செல்வம் மனுவை விசாரித்து வருகிறார். இதில் நீதிபதி 3 முக்கியமான கேள்விகளை கேட்டார்.

    1. பொதுக்குழு கூடியது எப்படி? இது சட்டப்படிதான் கூடியதா? 2. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? 3. ஆம் என்றால் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் காலாவதியாகவில்லையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    வாதம்

    வாதம்

    இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முக்கியமான வாதம் ஒன்றை இன்று வைத்துள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு என்பது பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கை காரணமாக நடத்தப்பட்டது. பொதுக்குழுவில் இருக்கும் 2432 உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். மெஜாரிட்டி உறுப்பினர்கள் வைத்த இந்த கோரிக்கையால் பொதுக்குழு நடத்தப்பட்டது. அதிமுகவில் எல்லாம் ஜனநாயக முறைப்படி நடக்கும்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பு

    எடப்பாடி பழனிசாமி தரப்பு

    அதிமுகவில் உட்கட்சி ஜனநாயக முறைப்படிதான் முடிவுகள் எடுக்கப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன. இந்த நிலையில் மீண்டும் பொதுக்குழுவை கூட்ட உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக இவர்களின் கோரிக்கையை ஏற்று பொதுக்குழுவை மீண்டும் கூட்ட மூத்த உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். சில கட்சிகளில் குடும்ப ஆதிக்கம் இருக்கும்.

    குடும்ப ஆட்சி

    குடும்ப ஆட்சி

    மற்ற கட்சிகள் குடும்பத்தால் நடத்தப்படுகின்றன. ஆனால் அதிமுகவில் எல்லாம் ஜனநாயக முறைப்படிதான் முடிவு செய்யப்படும். வேறு எந்த கட்சியிலும் இப்படி நடந்ததில்லை, என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்துள்ளது. திமுகவை குறிப்பிடாமல் குடும்ப கட்சி என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று சாடலாக வாதம் வைத்தது. ஏற்கனவே பழனியில் திமுகவை குடும்ப கட்சி, அதிமுகதான் ஜனநாயக கட்சி என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறிப்பிடத்தக்கது.

    நேற்று விசாரணை

    நேற்று விசாரணை

    நேற்று வழக்கு விசாரணையில் அதிமுக பொதுக்குழு சட்டப்படி நடக்கவில்லை என்று நேற்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கூறியது. இந்த நிலையில் பொதுக்குழு சட்டப்படிதான் நடந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி வாதம் வைத்துள்ளார். அதோடு பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் காலாவதியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார். அவரின் இந்த வாதம் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+