"ஸ்விட்ச் ஆப்".. 36 மணி நேரமாக என்ன நடக்குது? எங்கே போனார் ஜெயக்குமார்? சீக்ரெட்டை உடைத்த ஓபிஎஸ்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயன்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முதல்நாள் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதை பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகிகள் பலர் ஒற்றை தலைமை வேண்டும்.. எடப்பாடியைத்தான் அந்த பதவியில் அமர வைக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

ஜெயக்குமார் என்ன சொன்னார்?
இந்த நிலையில் நேற்று முதல்நாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் முதலில் அதை பற்றி பொதுவில் பேசியது என்னவோ ஜெயக்குமார்தான். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஒற்றை தலைமை யார் என்பதை எங்கள் கட்சி முடிவு செய்யும். நமக்கு ஒற்றை தலைமை தேவை. ஒற்றை தலைமையின் அவசியம் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் இதைத்தான் வலியுறுத்தினர் என்று வெளியில் பொதுவில் ஜெயக்குமார் போட்டுடைத்தார்.

மோதல்
இந்த நிலையில்தான் நேற்று ஜெயக்குமார் அதிமுக தீர்மானக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மீண்டும் ஒற்றை தலைமை குறித்து ஜெயக்குமார் பேசி இருக்கிறாராம். இந்த கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருவதற்கு முன் அங்கிருந்து அவசர அவசரமாக ஜெயக்குமார் காரில் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. வெளியே சென்ற ஜெயக்குமாரை வழி மறித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்தனர். ஜெயக்குமார் கார் மீது தாக்கி மோசமான வார்த்தைகளை பேசினர்.. ஹே ****** என்று கூறி அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளை குறிப்பிட்டு தாக்கி பேசினார்.

சீக்ரெட்டை உடைத்த ஓபிஎஸ்
இந்த நிலையில்தான் நேற்று இரவு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ பன்னீர்செல்வம் நேரடியாக ஜெயக்குமாரை அட்டாக் செய்யும் விதமாக சில சீக்ரெட்களை உடைத்து பேசினார். அதில், ஜெயக்குமார் அளித்த பேட்டிதான் பிரச்சனைக்கு காரணம். ஒற்றைத் தலைமை குறித்து ஜெயக்குமார் பேட்டி கொடுத்ததுதான் பூதாகரமாக போய் கொண்டிருக்கிறது. நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றைத் தலைமை குறித்து யாரிடமும் பேசியதே இல்லை

நேரடியாக தாக்கு
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது என தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு கொடுத்த பொதுச்செயலாளர் மரியாதையை காலாவதியாக்கினால் அது ஜெ.வுக்கான துரோகம். பொதுச்செயலாளர் பதவி தேவை என ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவர முடியாது. ஒற்றைத் தலைமை பிரச்சனை குறித்த பேட்டி அளித்ததை எடப்பாடியும் நானும் இணைந்து கண்டிக்க வேண்டும், என்று ஜெயக்குமாரை அட்டாக் செய்து ஓபிஎஸ் பேசினார்.

எங்கே போனார்?
இந்த நிலையில்தான் ஓபிஎஸ்ஸின் இந்த பேட்டிக்கு பின்பாக ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்து உள்ளார். கடந்த 36 மணி நேரமாக அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. பொதுவாக செய்தியாளர்களை அடிக்கடி சந்திக்கும் ஜெயக்குமார் இவ்வளவு பெரிய பிரச்சனை நடக்கும் போது ஆப்சென்ட் ஆகி உள்ளார். அதிமுக கூட்டங்கள் நடக்கும் பகுதியிலும் அவரை பார்க்க முடியவில்லை. அவர் 36 மணி நேரமாக வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறார்.

பேசவில்லை
செய்தியாளர்களுக்கு அவர் கொடுத்த நம்பரும் நேற்று ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஓபிஎஸ் நேரடியாக ஜெயக்குமார் மீது விமர்சனங்களை வைத்து இருந்தார். இந்த நிலையில்தான் அதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் ஜெயக்குமார் அமைதியாக இருக்கிறார். ஜெயக்குமார் ஏன் மௌனம் காக்கிறார்.. ஏன் வெளியே வருவது இல்லை என்று கேள்வியை அதிமுக நிர்வாகிகள் இடையே இது எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications