சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 நாட்கள்.. ஒருத்தரையும் அனுப்பாத ஓபிஎஸ்.. டெல்லியில் எதிர்பார்க்காத "அமைதி".. கவனிச்சீங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் ஆட்களை குவித்து வருகிறார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் ஏனோ டெல்லிக்கு இன்னும் பெரிதாக தனது நிர்வாகிகள் யாரையும் அனுப்பாமல் இருக்கிறார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு அதிமுக உட்கட்சி மோதலை முடிவிற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டது சட்ட ரீதியில் சரியானதா இல்லையா என்ற தீர்ப்பு வந்துவிட்டால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியும் சட்ட ரீதியாக சரியானதா, இல்லையா என்பது தெரிந்துவிடும்.

இடைத்தேர்தல் வேட்பாளர்.. கோரிக்கை வைத்த முக்கிய நிர்வாகிகள்.. 'ஓகே’ சொன்ன ஓபிஎஸ்.. என்ன நடந்தது? இடைத்தேர்தல் வேட்பாளர்.. கோரிக்கை வைத்த முக்கிய நிர்வாகிகள்.. 'ஓகே’ சொன்ன ஓபிஎஸ்.. என்ன நடந்தது?

 தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

இந்த பொறுத்து தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவும் மாறும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது வரை அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. அதேபோல் அந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இப்போதைக்கு சட்டப்படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். இந்த தீர்ப்பை பொறுத்து தேர்தல் ஆணையம் பொதுக்குழுவை அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும். சமயங்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கூட தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு வழக்கில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே வாதம் முடிந்துவிட்டது. கடந்த வாரம் இந்த வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்களையும் இரண்டு தரப்பும் தாக்கல் செய்துவிட்டது. தற்போது வழக்கு தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இன்னும் நாட்களுக்கு வழக்கில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தேர்தல் நேரத்தில் பிரச்சனை வேண்டாம் என்று சின்னத்தை முடக்கிவிட்டு, தேர்தலுக்கு பின் முடிவு எடுக்கவே வாய்ப்பு உள்ளது.

 லீகல் அணி

லீகல் அணி

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் லீகல் அணியை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். 25ம் தேதி இவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நேரம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் சின்னம் மற்றும் அதன் பெயரை பயன்படுத்தும் உரிமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை முறையிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி டெல்லிக்கு டீம் அனுப்பி இருந்தாலும் இன்னும் ஓ பன்னீர்செல்வம் சார்பாக எந்த டீமும் டெல்லிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

எடப்பாடி டீம்

எடப்பாடி டீம்

தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து இன்னும் நேரம் கேட்கப்படவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கும்படி எடப்பாடி தரப்பு அணுக உள்ளதாம். இன்று அல்லது நாளை நீதிபதி தினேஷ் மகேஸ்வரியை சந்தித்து இந்த கோரிக்கையை எடப்பாடி தரப்பு வைக்க உள்ளதாம். ஆனால் உச்ச நீதிமன்றத்திலும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இது வரை எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பு சின்னத்தை கைப்பற்ற தீவிரமாக முயன்று கொண்டு இருக்கும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு திடீரென சைலெண்டாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Why does O Paneerselvam not send anyone to Delhi amid Edappadi Palanisamy move ahead of Erode East By-Election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X