சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பானி பூரி".. ஆளுனரை வச்சுக்கிட்டே.. டெல்லியை புரட்டி போட்ட பொன்முடி பேச்சு.. கொதித்த வடஇந்தியர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி திணிப்பிற்கு எதிராக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன் முடி பேசியது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

Recommended Video

    கோவை: ஹிந்தி மொழியை திணிக்க வேண்டாம்: ஆளுநரிடம் அமைச்சர் கோரிக்கை!

    தமிழ்நாடு எப்போதுமே இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வந்து இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே இந்தியை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து வந்து இருக்கிறது.

    முன்பு தமிழ்நாட்டில் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த இந்த எதிர்ப்பு தற்போது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் என்ற மற்ற இந்தி அல்லாத மாநிலங்களிலும் கேட்க தொடங்கி உள்ளன.

    புதிய கல்விக் கொள்கையிலுள்ள நல்ல விஷயங்களை ஏற்க ரெடி.. ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு!புதிய கல்விக் கொள்கையிலுள்ள நல்ல விஷயங்களை ஏற்க ரெடி.. ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு!

    இந்தி திணிப்பு

    இந்தி திணிப்பு

    இந்த நிலையில்தான் கோவை பாரதியார் பல்கலை, பட்டமளிப்பு விழாவில் இந்தி திணிப்பிற்கு எதிராக இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன் முடி பேசினார். இந்தி திணிப்பிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அவர் வைத்தார். அவர் தனது பேச்சில், நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. எந்த ஒரு மொழிக்கும் எதிராக நாங்கள் இல்லை. இந்தி படிக்க விரும்பினால்.. அதை வெளியே படிக்கலாம்.

    அரசே திணிக்க கூடாது

    அரசே திணிக்க கூடாது

    அரசே படிக்க வேண்டும் என்று சொல்ல கூடாது. இது கட்டாயமாக படிக்கப்பட வேண்டும் என்று சொல்ல கூடாது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படித்தவர்கள்தான் பானி பூரி விற்கிறார்கள். யாரும் யார் மீதும் மொழியை திணிக்க கூடாது. தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழ் படிக்கப்படுகிறது. சர்வதேச மொழி ஆங்கிலம் படிக்கப்படுகிறது என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டு இருந்தார்.

    அமைச்சர் பொன்முடி

    அமைச்சர் பொன்முடி

    அமைச்சர் பொன்முடி இப்படி இந்திக்கு எதிராக பேசும்போது மேடையிலேயே ஆளுநர் ஆர். என் ரவி இருந்தார். அவரை மேடையில் வைத்துக்கொண்டுதான் பொன்முடி இப்படி பேசினார். பொன்முடி இப்படி பானிபூரி விற்பவர்கள் இந்தி படித்தவர்கள் என்று கூறியதுதான் வடஇந்தியா முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடஇந்தியர்கள் பலர் பொன்முடியின் கருத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

    வடஇந்தியர்கள்

    வடஇந்தியர்கள்

    தமிழ்நாட்டில் வேறு வடஇந்தியர்களே இல்லையா. ஐடி நிறுவனங்களில் இருக்கும் வடஇந்தியர்கள் யார்? பானி பூரி மட்டும்தான் விற்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி கடுமையான விமர்சனங்களை பொன்முடிக்கு எதிராக நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர். அதேபோல் நேற்று சில வடஇந்திய ஊடகங்களும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து இந்தியை பொன்முடி அவமதித்துவிட்டார் என்று கூறி கடுமையான விமர்சனங்களை வைத்தன.

    விவாதம்

    விவாதம்

    டைம்ஸ் நவ் விவாதத்தில் பொன்முடியின் கருத்து குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் சரவணன், இந்தியை திணிக்க கூடாது என்று மட்டும்தான் நாங்கள் சொல்கிறேன். இந்தியை நாங்கள் அவமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் இந்தி படித்தவர்கள் ஐடி நிறுவனங்களில் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியால ஐடி நிறுவனங்களுக்கு வரவில்லை. ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப கல்வியால்தான் வந்தனர் என்று விளக்கம் கொடுத்தார்.

    விளக்கம்

    விளக்கம்

    டெல்லியும், மொத்த வடஇந்தியாவையும் பொன் முடி பேச்சு புரட்டி போட்டுள்ளது. இந்த நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமைச்சர், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பல வேலை தேடி வருகிறார்கள். அங்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற பொருள்படும்படிதான் நான் கூறினேன். என்று விளக்கம் அளித்தார்.

    English summary
    Why does Ponmudi comment about Paani Poori and his speech against Hindi Imposition create debates? இந்தி திணிப்பிற்கு எதிராக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன் முடி பேசியது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X