Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாளில்.. சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. 45 ஐபிஎஸ் ஆபிஸர்ஸ் தூக்கியடிப்பு! பின்னணியில் அந்த காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு புத்தாண்டு நாளில் இன்று முக்கியமான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்னொரு பக்கம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி

அதன்படி

தமிழ்நாட்டில் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் பணியில் சேர்ந்த வருடம், அவர்கள் பணியாற்றிய துறைகளின் அனுபவம் ஆகியவற்றை வைத்து இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. 2010-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேருக்கு selection grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 2014-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தரப்பட்டு உள்ளது. இவர்களுக்கு junior administrative grade அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

மூத்த அதிகாரிகள்

மூத்த அதிகாரிகள்

மூத்த அதிகாரிகளான 1999-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் ஐஏஎஸ், இணை அரசு செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. மேலும் திருச்சி ஆட்சியர் பிரதீப் இணை அரசு செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் த நந்தகுமார் ஐஏஎஸ் அரசு செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இது போக இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

 இடமாற்றம்

இடமாற்றம்

மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருச்சி, கோவை, மதுரைக்கு புதிய ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 5 ஐஜிக்களுக்கு ஏடிஜிபிக்களாகவும், 5 டிஐஜிக்களுக்கு ஐஜிக்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 25 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 16 எஸ்.பி.க்களுக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பகலவன், மயில்வாகனன் ஆகியோருக்கு பதவி உயர்வும், அதிவீரபாண்டியன், விக்ரமன், சரோஜ்குமார் தாக்கூர், அரவிந்தன், பிரவீன்குமார், அபிநபு, மோகன்ராஜ், கல்பனா நாயகர், வன்னிய பெருமாள், மகேஷ்குமார், க ஷியாமளா தேவி, ராஜேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மாற்றம் ஏன்?

மாற்றம் ஏன்?

இந்த மாற்றத்திற்கு பின் 3 காரணங்கள் இருக்கின்றன. அதன்படி முதலாவதாக.. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதன் பொருட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட கடந்த வருடம் பதற்றமாக இருந்த பகுதிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதிகாரிகளின் செயல்பாடு, மாவட்ட பாதுகாப்பு தொடர்பாக உளவுத்துறை ரிப்போர்ட் ஆகியவற்றை வைத்து இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டாவது விஷயமாக.. துறை ரீதியாக கடந்த சில நாட்களாகவே இந்த மாற்றம் செய்யப்பட இருந்தது. பொதுவாக புத்தாண்டு சமயத்தில் புதிய பதவி உயர்வு பற்றி அறிவிக்கப்படும்.

 பதவி உயர்வு

பதவி உயர்வு

இந்த பதவி உயர்வின் போதே பணியிட மாற்றமும் செய்யலாம் என்று முடிவு எடுத்து இந்த மாற்றத்தை செய்துள்ளனர். மூன்றாவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு சில அதிகாரிகள் பற்றி தகவல் சென்றுள்ளது. சில அதிகாரிகள் பற்றி புகார் சென்றுள்ளது. முக்கியமாக அமைச்சர்கள் சிலரிடம் இருந்து சில ஐபிஎஸ்கள் பற்றி புகார்கள் சென்றுள்ளது. இவர்களையும் முக்கியமான மாவட்டங்களில் இருந்து மாற்றி சிறிய மாவட்டங்களுக்கு போஸ்டிங் போட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். இதுதான் இன்று நடந்த மாற்றங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+