எளிமைதான் இவங்க சொத்து.. பிரக்ஞானந்தா செஸ் போர்டில் ராணியாக நகரும் "அம்மா".. வியந்த உலக நாடுகள்
சென்னை: செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள நிலையில்.. அவரின் அம்மா நாகலட்சுமி தற்போது உலக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறார்.
நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்தில் வரக்கூடிய வசனம் ஒன்றில்.. அண்ணன் செத்து 15வது நாள் அவன் தம்பி வந்துட்டாண்டா ஆர்மிக்கு என்று கூறுவார். அந்த வசனம் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ கண்டிப்பாக தமிழ்நாட்டின் செஸ் வரலாற்றிற்கு பொருந்தும்.

செஸ் உலகில் முடி சூடா மன்னனாக இருந்த தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்தனை சிறிய பையனாக இருந்த போது நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வந்து வீழ்த்தினார். விஸ்வநாதன் வீழ்ந்த அந்த நொடியை தமிழ்நாட்டில் யாரும் மறக்க மாட்டார்கள். மேக்னஸ் கார்ல்சனின் கோணிய முகமும், சிரிப்பே இல்லாத "ஆல்பா" தோற்றமும் விஸ்வநாதனை அச்சறுத்தியதோ இல்லையோ தமிழர்களை வெகுவாக அச்சுறுத்தியது.
ஆனால் அதன்பின் விஸ்வநாதன் பார்ம் அவுட் ஆனதால்.. செஸ் ரசிகர்கள் பலரும்.. தமிழர்களும் சேர்த்து கார்ல்சனை ரசிக்க தொடங்கிவிட்டனர். போட்டிக்கு லேட்டாக வருவது, எதிரணி வீரரின் முகத்தை கூட பார்க்காமல் இருப்பது, பொறுமையாக நேரத்தை பற்றி கவலைப்படாமல் மைண்ட் கேம் ஆடுவது என்று கார்சல் போர்டுக்கு வெளியேவும் செஸ் ஆடிக்கொண்டு இருந்தார் என்றுதான் கூற வேண்டும்.
அறிவியலில் ஹெய்சன்பெர்க்கின் "நிலையில்லா கோட்பாடு" என்ற ஒன்று உள்ளது. மாபெரும் அந்த கோட்பாட்டில் ஒரு அனுவின் துல்லியமான இடத்தையும் அதன் சரியான நகர்வையும் நம்மால் மிக துல்லியமாக கூற முடியாது என்பார்கள்.. இந்த உலகமே அப்படிதான் இயங்கிக்கொண்டு இருக்கிறது ... எதுவுமே.. எந்த இடத்திலும் நிலையாக இருக்க முடியாது.. செஸ் உலகில் நிலையான சாம்பியனாக இருந்த விஸ்வநாதனை வீழ்த்த கார்சல் வந்தார்.. இப்போது அதே கார்ல்சனை வீழ்த்த.. அவரின் நிலையான இடத்தை பிடிக்க பிரக்ஞானந்தா வந்திருக்கிறார்.
அவன் தம்பி வந்துட்டாண்டா ஆர்மிக்கு என்று சொன்னது போல தமிழரை வீழ்த்திய கார்ல்சனை வீழ்த்த இன்னொரு தமிழர்.. பிரக்ஞானந்தா வந்துவிட்டார். கடந்த வாரம்தான் செஸ் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.
இறுதிபோட்டி: சக இந்திய வீரரான அர்ஜுனை டை ப்ரேக்கர் சுற்றில் வீழ்த்தி அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றார். அரையிறுதியில் நடந்த ஆட்டத்தில் முதலில் தோல்வியின் விளிம்பில் இருந்த பிரக்ஞானந்தா அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஆட்டத்தை டிரா செய்வது போல வந்தார்.
கடைசி கட்டத்தில் எதிர்பார்க்காத மூவ்களை செய்த பிரக்ஞானந்தா கடைசியில் திரில் வெற்றி பெற்றார். டை பிரேக்கர் வரை சென்று பிரக்ஞானந்தா இந்த ஆட்டத்தில் வென்றார். இதன் மூலம் அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா சென்றார்.
அரையிறுதியில் அசர்பைஜான் வீரர் நிஜாத்தை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. இதில் அரையிறுதியின் இரு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இரு சுற்றுகளிலும் ஃபேபியானோ கருவானாவே ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், பிரக்ஞானந்தா போராடி டிரா செய்தார்.
இந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான டை பிரேக்கர் ஆட்டம் நடைபெற்றது. இதுவும் காலிறுதி ஆட்டத்தை போலவே ரேபிட் முறையில் நடத்தப்பட்டது. இதில் முதல் ஆட்டம் டிராவில் முடிவடைய, இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. கடைசியில் மூன்றாவது ரேபிட் சுற்றில் பிரக்ஞானந்தா வென்று பைனல்ஸ் சென்றார். ரேபிட் சுற்றில் வல்லவரான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டியில் வெல்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
டிரெண்டாகும் அம்மா: செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்கா வீரர் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள நிலையில்.. அவரின் அம்மா நாகலட்சுமி தற்போது உலக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறார்.
பிரக்ஞானந்தா ஆடும் போது அவரின் அம்மா அங்கே தனியாக அமர்ந்து இருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மிகவும் எளிமையான தோற்றத்தில், சாதாரண புடவை கட்டி, நெற்றியில் குங்குமம், விபூதி வைத்து இவர் நிற்கும் தோற்றம் உலக அரங்கையே கவனிக்க வைத்துள்ளது. கண்ணை மூடிக்கொண்டு தமிழ்நாடு வீடுகளில் இருக்கும் அம்மா ஒருவரின் முகத்தை யோசித்து பாருங்கள் என்று சொன்னால் உங்கள் நினைப்பில் என்ன முகம் வருமோ அந்த முகம்தான் நாகலட்சுமியின் முகம்.
He said "Your photo on Twitter was huge!"
— PhotoChess (@photochess) August 21, 2023
I said, "It is because you ARE huge!" @rpragchess and his lovely mum are IN THE #FIDEWorldCup2023 FINAL ♥️ pic.twitter.com/2bJP21yBGN
கசங்கிய பூனம் சாரியில் அவர் தனது மகனுக்கு உறுதுணையாக எல்லா மேடைகளிலும் நிற்பது தமிழர்களை, இந்தியர்களை மட்டுமின்றி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதே தொடருக்கு வந்து இருக்கும் சக வெளிநாட்டு வீரர்களை கூட நாகலட்சுமி திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இவருக்கு அப்பாவும், பயிற்சியாளர் குழுவும் உறுதுணையாக இருந்தாலும் கூட அம்மா நாகலட்சுமிதான் தொடர்ந்து அருகிலேயே இருந்து ஆதரவு அளித்து வந்துள்ளார். முக்கியமாக காலிறுதிக்கும் அரையிறுதிக்கும் இடையில் பெரிய காலவேறுபாடு இல்லாத நேரத்தில்.. ஓய்வு எடுக்க நேரம் இல்லாத போதும் கூட பிரக்ஞானந்தா இந்த போட்டியில் வெல்ல அம்மா நாகலட்சுமி கொடுத்த உத்வேகம் மிகப்பெரிய துணையாக பிரக்ஞானந்தாவிற்கு இருந்துள்ளது.
THIS 🥹#FIDEWorldCup2023 pic.twitter.com/UgXwlWMeN1
— PhotoChess (@photochess) August 17, 2023
எவ்வளவு மேலே சென்றாலும்.. சிலர் எளிமையை கைவிட மாட்டார்கள். ஏ. ஆர் ரகுமான் தொடங்கி பலர் இதற்கு உதாரணம். அந்த லிஸ்டில் பிரக்ஞானந்தாவும்..அவரின் அம்மா நாகலட்சுமியும் இடம் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டு வீடுகளில் பெரிய விஷயங்கள் செய்யும் முன், ஒரு போட்டிக்கு போகும் முன், வெளிநாடு செல்லும் முன் கடவுளை வணங்கி அம்மாக்கள் மகன், மகளுக்கு ஆசீர்வாதம் செய்வார்கள் (எந்த மதமாக இருந்தாலும்).. அப்படித்தான் நாகலட்சுமியும் தனது மகன் பிரக்ஞானந்தாவிற்கு விபூதி வைத்துவிடுகிறார்.. என்ன ஒன்று அவர் வைக்கும் விபூதி மொத்த இந்தியாவிற்கும் ஆசீர்வாதமாக அமைந்து விடுகிறது!
THIS 🥹#FIDEWorldCup2023 pic.twitter.com/UgXwlWMeN1
— PhotoChess (@photochess) August 17, 2023
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications