கலைஞர் மட்டும் இருந்திருந்தால்.. அருகில் சென்ற துரைமுருகன்.. டக்கென எழுந்த ஸ்டாலின்.. ஒரே நெகிழ்ச்சி
முதல்வர் ஸ்டாலினுக்கு துரைமுருகன் வாழ்த்து சொன்னார்
சென்னை: இன்று சட்டசபையில் சிறப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது.. திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் கண்ணீர்விட்டதனால், சபையில் இருந்த அனைவருமே நெகிழ்ந்து போனார்கள்.
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய உலக எக்ஸ்போ கண்காட்சி வரும் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் மார்ச் 25ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது..
இதையொட்டி, உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் செல்கிறார். 5 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது, 6 மாத காலங்களுக்கு நடக்கும்.. அதுமட்டுமல்ல, இந்த கண்காட்சியானது, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய (MEASA) பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி ஆகும்.

கண்காட்சி
தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ண காட்சிப்படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன... இப்படிப்பட்ட மாபெரும் கண்காட்சியை சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

வர்த்தகம்
அதேபோல, இந்த துபாய், அபுதாபி பயணத்தின் போது நம் தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பு போன்றவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன... முதல்வரின் இந்த பயணத்துக்குதான் அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து சொன்னார்.. இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தும் சொன்னார்.

உலக செய்தியே இதுதான்
பேரவையில் துரைமுருகன் பேசும்போது, "நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் இருக்கும் தொழிலதிபர்களை ஈர்ப்பதற்கு, முதல்வர் ஸ்டாலினே முன்வந்து துபாய் போகிறார்.. இங்கேயே ஆயிரம் வேலைகள் இருக்கும்போதும், அவரே அடியெடுத்து கடல்கடந்து துபாய்க்கு சென்று, பல்வேறு தொழிலதிபர்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட போகிறார். முதலமைச்சரே பலநாட்டு சர்வதேசர்கள் கூடுகின்ற துபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார் என்றால், அது தானே உலக செய்தி..!

முதல்வர் பயணம்
உலகின் பல பகுதிகளில் இருப்பவர்களையும் தமிழகம் ஈர்க்க போகிறது.. தமிழ்நாட்டிற்கு அனைவரும் வருவார்கள். இதன் மூலம் நம்மாநிலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தி, ஏழ்மையில் இருந்து விடுபடுவது, தொழில்துறையில் முன்னேற்றுவது என்று எல்லா துறையிலும் இந்த 10 மாத காலத்தில் 100 ஆண்டுகால அனுபவத்தை போல செய்து முடித்துள்ளார்.. அவரை நான் மனதார பாராட்டுகிறேன்..!

தலைவர் கலைஞர்
தலைவர் கலைஞர் மட்டும் இப்போது இருந்திருந்தால் முதல்வரின் பணியை பார்த்து கண்ணீரை வடித்திருப்பார். மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்பு அந்த கண்ணீரை துணியால் துடைக்கும் காட்சியை நான் நினைத்து பார்க்கிறேன்... இங்குள்ள அனைவரின் சார்பிலும் முதல்வரின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்... நீங்கள் இந்தியா மட்டுமல்ல, உலக புகழ்பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்" என்றார்.

துரைமுருகன்
பொதுவாக, துரைமுருகன் சட்டசபையில் இடம் பெற்றிருந்தால், அவையே கலகலப்பாக இருக்கும்... அவரது பேச்சை, கட்சிக்கும் அப்பாற்பட்டு தலைவர்கள் ரசிப்பார்கள்.. அனைத்து கட்சியிலுமே இவருக்கு ரசிகர்கள் உண்டு.. இருந்தாலும் சட்டென உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்பதால், அடிக்கடி கண்கலங்கியும் விடுவார்.. இப்படி பலமுறை பொதுவெளியிலேயே அழுதுள்ளார்..!

கண்ணீர்
குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே, அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் குறித்து விவரிக்கும்போதோ, பாராட்டும்போதோ, சட்டசபை, மேடை என்றும் பாராமல் கண்ணீர்விட்டு அழுதுவிடுவார்.. அப்படித்தான் இன்றும் துரைமுருகன் ஸ்டாலினை நினைத்து நெகிழ்ந்து போய் கண்ணீர் விட்டார்.. பொன்னாடையை எடுத்து கொண்டு, முதல்வர் அருகில் சென்றதுமே, எழுந்து நின்று அந்த பொன்னாடையை பெற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.. அவையில் இருந்தவர்கள் அப்படியே உருகி போய் இந்த காட்சியை பார்த்தனர்..!
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications