66 ப்ளஸ் 63.. துள்ளி குதிக்கும் எடப்பாடி.. டெல்லியிலிருந்து திரும்பியதும்.. இன்றே அடுத்த மெகா மூவ்!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று மீண்டும் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் இருந்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் செல்கிறார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டவர் அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. மாஜி அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.
ஆளும் திமுக அமைச்சர்கள் குறித்த புகார் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வாசித்ததாக கூறப்படுகிறது.

புகார் பட்டியல்
அதன்படி ஆளும் கட்சியில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீது உள்ள புகார்கள். அவர்கள் எடுத்த டெண்டர்கள், அவர் செய்த ஒப்பந்தங்கள் குறித்து புகார் பட்டியலை வாசித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ஆக்சன் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் எடப்பாடி. அதோடு இதற்கான லிஸ்ட் ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்தாக கூறப்படுகிறது. இது போக ஓ பன்னீர்செல்வம் பற்றியும் அவர் புகார் சொல்லி இருக்கிறார்.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம் திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார். அதிமுகவிற்கு எதிராக செயல்படுகிறார். மாஜி அமைச்சர்கள் பற்றி ஸ்டாலினுக்கு தகவல் கொடுப்பதே ஓ பன்னீர்செல்வம்தான் என்று எடப்பாடி பழனிசாமி புகார் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் டெல்லியில் இருந்து திரும்பி வந்த எடப்பாடி பழனிசாமி மிகவும் உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் அமித் ஷா இவரிடம் சொன்ன சில விஷயங்கள் காரணமாக எடப்பாடி உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சாதகமான பதில்
முக்கியமாக அமித் ஷா, எடப்பாடிக்கு ஆதரவாக சில விஷயங்களை பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு காரணமாக சந்தோஷத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று மீண்டும் செல்கிறார். டெல்லியில் இருந்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் செல்கிறார். கடந்த 8ம் தேதி அவர் இடைக்கால பொதுச்செயலாளராக அதிமுக அலுவலகம் சென்றார். அவரை வரவேற்க அதிமுக அலுவலகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன,. முன்னதாக ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அதற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி தரப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

வெற்றி
இந்த வழக்கில் எடப்பாடி தரப்பே வென்றது. இதன்பின் எடப்பாடி அதிமுக அலுவலகம் வந்த போது, இந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். எம்எல்ஏக்கள் 63 பேர் இருந்தனர். இன்னொரு பக்கம் மாவட்ட செயலாளர்கள் 66 பேர் இருந்தனர். இதன் மூலம் தனக்கு முழு எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது என்பதை எடப்பாடி நிரூபித்து இருக்கிறார். இந்த நிலையில் இன்று மீண்டும் எடப்பாடி அதிமுக அலுவலகம் வருகிறார். அதிமுக அலுவலகத்தில் இன்று முக்கியமான ஆலோசனைகளை எடப்பாடி செய்ய உள்ளார். சில எம்எல்ஏக்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் அலுவலகத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட உள்ளார்.
-
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்?












Click it and Unblock the Notifications