"டார்கெட் 2024".. என்ன நடக்குது பாருங்க! ஆசை ஆசையாக பேசிய எடப்பாடி.. "சான்ஸே இல்லை" குஷியில் திமுக
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலோடு தமிழ்நாடு சட்டசபை தேர்தலும் நடக்கும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மேடைக்கு மேடை பேசி வருகிறார். திமுக ஆட்சி இன்னும் 2 வருடம்தான் இருக்கும் என்று அவர் மேடைக்கு மேடை பேசி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்க உள்ளது. நேற்று மாலையோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்தன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்று பார்த்தால் அது குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழக்கும் திட்டம்.
அதோடு மத மாற்ற தடை சட்டம் குறித்தும் பாஜக உறுப்பினர்கள் பேசி வந்தனர். இன்னொரு பக்கம் அதிமுக தலைவர்கள் ஒரு நாடு ஒரு தேர்தல் பற்றி கடுமையாக பேசி வந்தனர்.

ஒரு நாடு ஒரு தேர்தல்
ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மத்திய பாஜக அரசின் திட்டம் ஆகும். சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும், ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கின்றன. இதற்கு பதிலாக மொத்தமாக எல்லா தேர்தலையும் நடத்தினால் செலவு மிச்சம் ஆகும். திட்டங்களை முறையாக செயல்படுத்தலாம் என்று பாஜக வாதம் வைத்து வருகிறது.

பல மாநிலம் எதிர்ப்பு
இதை பல மாநிலங்கள் எதிர்த்து வருகிறது. இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் போகிற இடங்களில் எல்லாம் எடப்பாடி பழனிசாமி ஒரு நாடு ஒரு தேர்தல் பற்றி பேசினார். 2024 சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலோடு நடக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொங்கு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சார மேடைகளில் எடப்பாடி பழனிச்சாமி இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதேபோல் ஓபிஎஸ் மற்றும் சில முன்னாள் அமைச்சர்களும் இதே பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

அண்ணாமலை
ஏன் பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழ்நாட்டில் ஆட்சி நடப்பதை பொறுத்த ஒரு நாடு ஒரு தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழ்நாட்டில் இதே போல் ஆட்சி நடந்தால் ஒரு நாடு ஒரு தேர்தலை 2024ல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று அண்ணாமலை கூறினார். திமுகவிற்கு இது கடுமையான அழுத்தத்தை கொடுக்கும், ஒரு வித அச்சத்தை கொடுக்கும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி இந்த டார்கெட் 2024 அஸ்திரத்தை கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் சிக்கல்
ஆனால் கண்டிப்பாக 2024ல் ஒரு நாடு ஒரு தேர்தல் வர வாய்ப்பே இல்லை என்றுதான் தேசிய அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 2024ல் மீண்டும் பாஜக தேசிய அளவில் வெற்றிபெற்றால் வேண்டுமானால் அதன்பின் ஒரு நாடு ஒரு தேர்தல் பற்றி முடிவு எடுக்கப்படும். ஆனால் இன்னும் 2 வருடங்களில் அதற்கு சாத்தியமே இல்லை. இந்த திட்டத்திற்காக பல மாநில அரசுகளை முன் கூட்டியே கலைக்க வேண்டும். சில மாநில அரசுகளின் பதவிக்காலத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடம் நீட்டிக்க வேண்டும்.

5 மாநில தேர்தல்
உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இப்போதுதான் தேர்தல் நடக்கிறது. அதற்கு 2 வருடத்தில் அங்கு ஆட்சியை கலைக்க முடியாது. இதனால் இப்போதைக்கு கணக்குப்படி ஒரு நாடு ஒரு தேர்தலை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை. அப்படியே செய்தாலும் அதற்கு மாநில அரசுகளின் அனுமதி தேவை. பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும். மேலும் இடையில் ஒரு மாநில அரசு திடீரென கவிழ்ந்தால் என்ன செய்வது என்பது உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

சாத்தியம் இல்லை
இதனால் இப்போதைக்கு ஒரு நாடு ஒரு தேர்தல் வாய்ப்பே இல்லை என்றுதான் தேசிய அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும். 2024ல் முழு பெரும்பான்மையோடு பாஜக வெற்றிபெற்றால் வேண்டுமானால் அதன்பின் இதற்கான திட்டத்தில் பாஜக இறங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக வட்டாரத்தில் இதை பற்றி விசாரித்ததில், ஒரு நாடு ஒரு தேர்தல் வாய்ப்பு இல்லை. பல மாநிலங்கள் இதை ஏற்கவில்லை. சில பாஜக ஆளும் மாநிலங்கள் கூட இதை ஏற்காது.
Recommended Video

பாஜக
இதை அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆதரித்தார். ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது தன்னுடைய ஆட்சிக்கு சிக்கல் வர கூடாது என்பதால் எடப்பாடி பழனிசாமிதான் இதே சட்டத்தை எதிர்த்தார். இப்போது அவரே இந்த சட்டத்தை வைத்து எங்களை மிரட்டுகிறார். இப்போதைக்கு இந்த சட்டம் எல்லாம் வர வாய்ப்பு இல்லை. எங்களுக்கு எதிராக ஏதாவது பயமுறுத்தும் வகையில் பேச வேண்டும் என்பதற்காக அதிமுக இப்படி பேசி வருகிறது. மற்றபடி வேறு எதுவும் இல்லை என்றே கூறப்படுகிறது. திமுக தரப்பு இதை பெரிதாக சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் குஷியாக இருப்பதாகவே அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications