ஒதுங்கியே இருந்த விஜயபாஸ்கர்.. வெளியே கூட வரலையே.. இப்போ பாருங்க திடீர்ன்னு ரெய்டு.. அலறிய அதிமுக
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த நிலையில் இந்த ரெய்டு நடக்கிறது.
அதிமுகவிற்கான லோக்சபா தேர்தல் கூட்டணி நேற்று இறுதி செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

அதன்படி,
1 ) வட சென்னை - ஆர்.மனோ
2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
3 ) காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
4 ) அரக்கோணம் - A.L.விஜயன்
5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
6 ) ஆரணி - கஜேந்திரன்
7 ) விழுப்புரம் (தனி) - J.பாக்யராஜ்
8 ) சேலம் - P.விக்னேஷ்
10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11 ) கரூர் - தங்கவேல்
12 ) சிதம்பரம் (தனி) - M.சந்திரகாசன்
13 ) நாகை - சுர்ஜித் சங்கர்
14 ) மதுரை - டாக்டர் P. சரவணன்
15 ) தேனி - V.T.நாராயணசாமி
16 ) ராமநாதபுரம் - பா. ஜெயபெருமாள்
இது போக தேமுதிகவுக்கு லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கூட்டணி முறிவு: அதிமுக - பாஜக கூட்டணி கண்டிப்பாக நடக்காது என்பது உறுதியாகி உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவும் பாமக உடன் கூட்டணியை இறுதி செய்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சியினரை குறி வைத்து பாஜக சார்பாக அமலாக்க துறையினர் மூலம் மிரட்டி வருகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள்தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையில்தான் விஜயபாஸ்கர் ரெய்டில் சிக்கி உள்ளார்.
ஒதுங்கி இருந்த விஜயபாஸ்கர்: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த நிலையில் இந்த ரெய்டு நடக்கிறது. விஜயபாஸ்கர் அதிமுக கூட்டணி தொடர்பான மீட்டிங் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
அதேபோல் கூட்டணி அறிவிப்பு தொடர்பான மீட்டிங்கிலும் கலந்து கொள்ளவில்லை. விஜயபாஸ்கர் தொடர்ந்து ஒதுங்கியே இருந்த நிலையில்தான் அவர் இப்போது ரெய்டில் சிக்கி உள்ளார்.
ரெய்டு: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு என்று 2022-ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அளித்த தகவலின் பேரில் தற்போது, அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications