முல்லைப் பெரியாறு, ஜல்லிக்கட்டு தொடங்கி நீட் வரை.. 2011 முதல் தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டங்கள்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான புரட்சி உள்ளிட்ட சூழ்நிலைகளில் தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டங்கள் கூட்டப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை வரும் 20-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் திடீரென 10 நிலுவையில் இருந்த மசோதாக்களை தமிழ்நாடு சட்டசபைக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனையடுத்து தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டம் நாளை கூடி 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி திரும்பவும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது.
சட்டசபை விதி எண் 143-ன் கீழ், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மறுபரிசீலனைக்காக ஆளுநர் திருப்பி அனுப்பினால் அது குறித்து விவாதிக்க சட்டசபை சிறப்பு கூட்டத்தை சபாநாயகர் கூட்ட முடியும்.
இதன்படி 2011-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டம் பல்வேறு பிரச்சனைகளுக்காக கூட்டப்பட்டிருக்கிறது. இதுவரை நடைபெற்ற சில சட்டசபை சிறப்பு கூட்டங்கள் விவரம்:
2011-ம் ஆண்டு டிசம்பர் 15-ல் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரளாவை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2013-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேறியது.
2017-ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி ஜல்லிக்கட்டு புரட்சி நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் அவசர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
2018-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி மேகதாது அணையை கட்டக் கூடாது என கர்நாடகாவை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2022-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி, திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து மீண்டும் அனுப்ப உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications