கிசுகிசு மன்னன்.. காயத்ரி பொங்கியது ஏன்? அண்ணாமலை சொன்ன அந்த வார்த்தை! உடனே காதுக்கு போயிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அண்ணாமலையை, 'கிசுகிசு மன்னன்' என காயத்ரி ரகுராம் மறைமுகமாக விமர்சித்ததற்குக் காரணம், பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் காயத்ரி பற்றி அண்ணாமலை பேசியதுதானாம்.

காயத்ரி ரகுராமை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்த நிலையில், தொடர்ந்து ட்விட்டரில் அண்ணாமலையை பூடகமாக விமர்சித்து வருகிறார் காயத்ரி.

இந்நிலையில், சமீபத்தில் கமலாலயத்தில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் காயத்ரி பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். இது காயத்ரிக்கு தெரியவந்ததும் சீறியுள்ளார்.

காயத்ரி ரகுராம் அப்செட்

காயத்ரி ரகுராம் அப்செட்

திருச்சி சூர்யா சிவா - டெய்சி சரண் ஆடியோ விவகாரம் பற்றி ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராமை ஆறு மாதங்கள் கட்சியை விட்டு நீக்கம் செய்தார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. தான் வகித்த வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் பொறுப்பு 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தனக்கு வரும் என்று எதிர்பார்த்து இருந்தார் காயத்ரி. ஆனால் அந்த பொறுப்பை இசையமைப்பாளர் தினாவுக்கு வழங்கிவிட்டார் அண்ணாமலை. இது காயத்ரியை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையை விமர்சிக்கும் வகையில் தொடர்ந்து ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

அண்ணாமலை - காயத்ரி உரசல்

அண்ணாமலை - காயத்ரி உரசல்

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே, காயத்ரி ரகுராம் - அண்ணாமலை இடையே உரசல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. முன்னர் கலை கலாச்சார பிரிவு தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மீது புகார் தெரிவித்ததால், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, அண்டை மாநில மற்றும் வெளிநாட்டு தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் பொறுப்பு காயத்ரிக்கு வழங்கப்பட்டது. அப்போது முதலே அண்ணாமலை மீது கடுப்பில் இருந்து வந்தார் காயத்ரி.

வார் ரூம் அட்டாக்

வார் ரூம் அட்டாக்

அண்மையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு காயத்ரி ரகுராம் அழைக்கப்படாதது அவரது ஆதங்கத்தை இன்னும் பெரிதாக்கியது. தான், சிலரால் புறக்கணிக்கப்படுவதாக ட்விட்டரில் வெளிப்படையாகவே தனது குமுறலைக் கொட்டி வந்தார். தனக்கு எதிராக அண்ணாமலையின் வார் ரூம் கும்பல் செயல்பட்டு வருவதாகவும், தன்னை விமர்சிப்பதே அவர்களுக்கு வேலை என்றும் கூறி அதிர்ச்சியைக் கிளப்பி இருந்தார் காயத்ரி. பாஜக நிர்வாகி ஒருவரின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டே குற்றம்சாட்டி இருந்தார்.

கிசுகிசு மன்னன்

கிசுகிசு மன்னன்

இதையடுத்து, காயத்ரி ரகுராமை அண்ணாமலை 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்த நிலையில்,கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அண்ணாமலையை மறைமுகமாக அட்டாக் செய்து வருகிறார் காயத்ரி. சமீபத்தில், "ஒரு பெண்ணின் முன் பேசுவதற்கு தைரியம் இல்லை, ஆனால் 150 பேர் முன்னிலையில் ஒரு பெண்ணைப் பற்றி மோசமாகப் பேசுவது ஒரு மோசமான தரம். அவர் ஆண் அழகு என்று அழைக்கப்படுவதில்லை, கிசுகிசு மன்னன் என்று அழைக்கப்படுகிறார். 'குரங்கு கையில பூ மாலை'. மோசமான நிலை" என்று விமர்சித்திருந்தார் காயத்ரி.

காதுக்குச் சென்றது

காதுக்குச் சென்றது

காயத்ரி ரகுராம் பதிவிட்ட இந்த ட்வீட்டால் பலரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டனர். காயத்ரி என்ன சொல்ல வருகிறார்? அண்ணாமலையை விமர்சிக்கிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. இதுபற்றி விசாரித்ததில், பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியது, சிலர் மூலம் காயத்ரி ரகுராம் காதுக்குச் சென்றுள்ளது. அண்ணாமலை தன்னைப் பற்றி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஷயத்தை விமர்சித்தே காயத்ரி ட்வீட் போட்டாராம்.

அண்ணாமலை எச்சரிக்கை

அண்ணாமலை எச்சரிக்கை

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டார் அப்போது நிர்வாகிகளுக்கு அண்ணாமலை பல்வேறு ஆலோசனைகள் கூறியதோடு, திமுகவினருடன் பழகக்கூடாது, திமுகவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது, திமுகவினர் தான் நமக்கு எப்போதும் பிரதான எதிரி அதனால் யாரும் அவர்களோடு தொடர்பு வைத்திருக்கக் கூடாது என அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயத்ரி ரகுராம் பற்றி

காயத்ரி ரகுராம் பற்றி

மேலும், காயத்ரி ரகுராம் பற்றி மறைமுகமாகப் பேசிய அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் எனக்கு எதிராகவும் ட்வீட் போடும் பெண்மணி ஒருவர் துபாய்க்கு எதற்காக போனார்? எங்கு தங்கினார்? யாரை சந்தித்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றும் அண்ணாமலை அந்தக் கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

150 பேர் முன்னிலையில்

150 பேர் முன்னிலையில்

இது அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் மூலம் காயத்ரியின் காதுக்குச் சென்றுள்ளது. அதனால் தான், "ஒரு பெண்ணின் முன் பேசுவதற்கு தைரியம் இல்லை, ஆனால் 150 பேர் முன்னிலையில் ஒரு பெண்ணைப் பற்றி மோசமாகப் பேசுகிறார். இது தரக்குறைவான செயல். அவர் கிசுகிசு மன்னன்" என்கிற ரீதியில் காயத்ரி ரகுராம் பதிவிட்டார் எனத் தெரிகிறது. அதோடு விடாமல் நாள்தோறும், அண்ணாமலையை சீண்டும் விதமாக தொடர்ந்து ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் காயத்ரி.

எல்.முருகன் ஆதரவாளர்

எல்.முருகன் ஆதரவாளர்

அதற்கு பதிலடியாக அண்ணாமலையின் ஆதரவாளர்களும் காயத்ரி ரகுராமை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலையின் ஆதரவாளரான திருச்சி சூர்யா, எல்.முருகனின் ஆதரவாளரான காயத்ரி ரகுராம், அண்ணாமலையை டார்கெட் செய்து வருகிறார், எல்.முருகன் யோசனைப்படியே காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+