அட்சய திருதியை.! தங்கம் விலை உச்சம் தொடுவது ஏன்! ஈஸியா விளக்கிய ஆனந்த் சீனிவாசன்! எப்போது குறையும்
சென்னை: அட்சய திருதியை நெருங்கும் நிலையில், அனைவரும் தங்கத்தை வாங்கத் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையே தங்கம் விலை ஏன் அதிகரிக்கிறது வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
அட்சய திருதியை என்றால் "வளர்க" என்று அர்த்தம். மேலும், அட்சய திருதியை அன்று நாம் செய்யும் செயல் மேலும் மேலும் வளரும் என்பதே நம்பிக்கை. அன்றைய தினம் வாங்கும் பொருட்களும் அதிகம் குவியும் என்பதும் நம்பிக்கை.

இதன் காரணமாகவே அட்சய திருதியை அன்று தங்கத்தை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அன்றைய தினம் தங்கம் வாங்கினால், மேலும் மேலும் தங்கம் குவியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஆனந்த் சீனிவாசன்: ஆண்டு முழுக்க காசு சேர்த்து அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவோரும் இருக்கவே செய்கின்றனர். இந்தாண்டு வரும் 22ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. ஆனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. சென்னையில் தங்கம் ஒரு கிராம் கிட்டதட்ட 6000 நெருங்கி வருகிறது. இதனிடையே தங்கத்தின் விலை உயர என்ன காரணம் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்
மிட்டில் கிளாஸ் மக்களுக்குத் தங்கம் மட்டுமே ஆபத்தான காலத்தில் உதவும் என்பதைத் தொடர்ந்து கூறி வருபவர் ஆனந்த் சீனிவாசன். அனைத்து குடும்பத்திற்கும் எமர்ஜென்சி என்றால் உதவக் குறைந்தது 400 கிராம் தங்கம் வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவர் இவர். ஆனந்த் சீனிவாசன் சொல்வதை போல ஒருவரிடம் 400 கிராம் தங்கம் இருந்தால், அது இன்று சந்தை மதிப்பில் சுமார் 22 லட்சம் ஆகும். அது சரி தங்கத்தின் விலை ஏன் உயர்கிறது என்பதை அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றில் விளக்கியிருந்தார்.
ஏன் உயர்கிறது: அதில் அவர், "அமெரிக்கச் சந்தையிலேயே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றமடைந்து வருகிறது. மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது. இந்திய கடந்த சில ஆண்டுகளாகவே 7, 8 டன் தங்கத்தை வாங்கி வருகிறது. அது மட்டுமின்றி ரஷ்யாவும் 32 டன் தங்கத்தை வாங்கி வருகிறது. சீனா 40 டன்னுக்கு மேல் தங்கத்தை வாங்கி வருகிறது. துருக்கியும் கடந்த ஆண்டு 32 டன் தங்கம் வாங்கியுள்ளது. சிங்கப்பூரும் தங்கத்தை வாங்க ஆரம்பித்துவிட்டன.
அதாவது இந்தியா, ரஷ்யா, சீனா, துருக்கி, சிங்கப்பூர் நாடுகள் தங்கத்தை வாங்கி சேர்க்கத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் அமெரிக்கா திடீரென ரஷ்யச் சொத்துகளைக் கைப்பற்றுவதாக அறிவித்தது.
நாளை எங்கு இதே நிலை தங்களுக்கும் ஏற்படுமோ என்று இந்த நாடுகள் அஞ்சுகின்றன. இதன் காரணமாகவே அவர்கள் டாலர் கையிருப்பைக் குறைத்துவிட்டு, தங்கத்தை அதிகம் வாங்கி குவித்து வருகின்றன.

இதுதான் காரணம்: இதில் ரஷ்யாவும் சீனாவும் தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் கையில் இருக்கும் டாலர்களை விற்றுத் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். இதில் இருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். சந்தையில் இப்போது டாலர் மதிப்பு அதன் உச்சத்தில் இருந்து 10% மட்டுமே குறைந்துள்ளது. ஆனாலும், தங்கம் விலை இந்தளவுக்கு ஏறுகிறது என்றால், இந்த நாடுகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கிக் குவிப்பதே இதற்குக் காரணம்.
அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் இணைந்து ஒவ்வொரு மாதமும் 100 டன் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் 100 டன் நிச்சயம் வாங்கியுள்ளன. இந்த 100 டன் என்பது மிகவும் முக்கியமானது. தங்கத்தை வெட்டியெடுப்பது என்பது ஏதோ ஸ்விட்ச் போட்டால் கிடைப்பது இல்லை. தங்கத்தை மார்கெட்டில் இருந்து தான் மெல்ல வாங்க வேண்டும். இந்த போட்டியில் தங்கத்தின் விலை ஏற தொடங்கும். அதன் காரணமாகவே தங்கத்தின் விலை இப்போது அதிகரிக்கிறது.
எப்போது குறைகிறது: உலக நாடுகள் எப்போதெல்லாம் தங்கத்தை வாங்குவதைக் குறைக்கிறதோ... அப்போதெல்லாம் தங்கம் விலை குறைகிறது. அவர்கள் அதிகம் வாங்கும் போது, தங்கம் விலை உயர்கிறது. அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இப்போது வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றனர். அந்த வட்டி விகிதம் உயர்வு தொடரும் வரை தங்கம் விலை குறைய வேண்டும். ஆனால், சீனாவும் ரஷ்யாவும் மார்கெட்டில் புகுந்து தங்கம் வாங்குவதாலேயே ஒரு தேவை ஏற்பட்டு தங்கம் விலை உயர்கிறது.
இப்போதே தங்கம் விலை செய் கூலி, சேதாரம், ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்துப் பார்த்தால் 6000ஐ தொட்டுவிடும் போலவே இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தாலோ அல்லது உயர்த்துவதை நிறுத்தினாலோ தங்கம் விலை வேகமாக உயரும். அமெரிக்கா இப்போது வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், நியாயப்படி தங்கம் குறைய உயரவே வேண்டும். ஆனால், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பதாலேயே தங்கம் விலை உயர்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
அட்சய திருதியை நெருங்கும் நிலையில், தங்கத்திற்கான தேவை உள்ளூரிலும் அதிகரிக்கும் சூழலில் விலை மேலும் உயரவே வாய்ப்பு இருக்கிறது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications