விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்காதது ஏன்? பரபரப்பு தகவல்கள்!
சென்னை: தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருமாறு கேட்டிருந்த நிலையிலும் ஆளுநர், விஜய்யை அழைக்காதது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 4 அன்று வெளியாகின. இதில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் பெற்றுள்ளன.

ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், த.வெ.க. சில சவால்களைச் சந்தித்து வருகிறது.
த.வெ.க. பலம்: 108 இடங்கள்.
பெறப்பட்ட ஆதரவு: காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் தங்களது ஆதரவுக் கடிதத்தை விஜய்யிடம் வழங்கியுள்ளனர்.
எதிர்பார்க்கப்படும் ஆதரவு: வி.சி.க. (2) மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் (4) ஆதரவைப் பெறப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சிக்கல்: இந்த ஆதரவுகள் அனைத்தும் கிடைத்தாலும், மொத்த எண்ணிக்கை 117 மட்டுமே வரும் (விஜய் தொகுதி ராஜினாமா மற்றும் சபாநாயகர் வாக்குரிமை தவிர்ப்பு ஆகியவற்றைக் கணக்கிடும்போது). பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் ஒரு எம்.எல்.ஏ-வின் ஆதரவு த.வெ.க-விற்கு அவசியமாகிறது.
ஆளுநர் சந்திப்பும் அடுத்தகட்ட நகர்வுகளும்
காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் விஜய் நேற்று பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இருப்பினும், போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆளுநர் அவரை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. போதிய ஆதரவைத் திரட்டிய பின் வருமாறு அறிவுறுத்திய ஆளுநர், இன்று கேரளா செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க - தி.மு.க வியூகம்?
மறுபுறம், தமிழக அரசியலில் அதிரடி மாற்றமாக, தி.மு.க-வின் வெளியிலிருந்து கிடைக்கும் ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சியமைக்கத் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.
குதிரை பேரத்தைத் தவிர்க்க அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். த.வெ.க-விற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்பதில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது.
தனிப்பெரும் கட்சியாக த.வெ.க வென்றாலும், 'மேஜிக் நம்பரான' 118-ஐ எட்டுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வின் வியூகங்களால் தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்டப் பரபரப்பில் உள்ளது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், அதிக அளவிலான தொகுதிகளில் வென்றதால் அவருக்கு கடந்த 3 நாட்களாக பாதுகாப்புக்காக கான்வாய் வாகனங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று ஆளுநரை சந்தித்து விட்டு பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு விஜய் வந்த போது அங்கு ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைகளை முடித்துக் கொண்டு விஜய் பட்டினம்பாக்கம் இல்லத்திலிருந்து நீலாங்கரை வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்பே அங்கிருந்த 4 கான்வாய் வாகனங்கள் தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டது. காவல் துறையினர் மட்டுமே அங்கிருந்தனர்.
அதாவது முதல்வருக்கு வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்பு வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதனால் கான்வாய் இல்லாமல் விஜய் நீலாங்கரைக்கு சென்றுவிட்டார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications