சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

15 "தாமரைகள்".. 2 தலைவர்களின் "வீக்னஸ்".. நயினார் வேற இப்படி சொல்லிட்டாரே.. "காவி"யாகிறதா தமிழகம்?

அமித்ஷா, இந்த முறை தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அமித்ஷா தமிழகத்துக்கு குறி வைத்துள்ளார்.. விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்றும் சூளுரைத்துள்ளது, மற்ற அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளன.

நேற்றைய தினம் தெலுங்கானாவில் நடந்த பாஜக மாநாட்டில், ஒட்டுமொத்த தலைவர்களும், பாஜக மாநில முதல்வர்களும் திரண்டிருந்தனர்.

நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3 நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3

2 நாள் நடைபெற்ற மாநாட்டில், 2 நாளுமே பிரதமர் மோடி உரையாற்றினார்.. ஆனால், நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சு மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கி உள்ளது.

 தமிழ்நாடு

தமிழ்நாடு

"அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜக-வின் சகாப்தமாக இருக்கும்... சர்வதேச அளவில் இந்தியா தலைமை வகிக்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பாஜக விரைவில் முடிவுகட்டும். அதுமட்டுமல்லாமல், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூடிய விரைவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்" என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 புது நம்பிக்கை

புது நம்பிக்கை

தமிழகத்தில் ஒவ்வொரு முறை தேர்தல் வந்தபோதும், காலூன்ற பாஜக முயலுவது வழக்கம்தான்.. ஆனால், இந்த முறை, அமித்ஷா பேசிய பேச்சில், புது நம்பிக்கை தென்பட்டுள்ளது.. தமிழகத்தில் ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு ஏதோ பலமான காரணமும் அவர்களுக்கு சிக்கி உள்ளதாக தெரிகிறது.. அநேகமாக, தமிழக அரசியல் கட்சிகளின் பலவீனங்களே இதற்கெல்லாம் பிரதான காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.. குறிப்பாக, கூட்டணியில் உள்ள அதிமுக.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கட்சிக்குள் பொதுச்செயலாளர் விவகாரம் வெடித்து கிளம்பியதில் இருந்தே, பாஜக கப்சிப் மோடுக்கு சென்றுவிட்டது. மரியாதை நிமித்தமாகவும், யதேச்சையாகவும் கூட எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் சந்தித்து கொள்ளாத சூழலை அறிந்தும், பாஜக தலையிடவில்லை.. இவர்களை சமாதானப்படுத்தவில்லை.. திரௌபதி சென்னை வருகையை ஒட்டி, இவர்கள் 2 பேரையும் ஒன்று சேர வைக்கும் முயற்சியையாவது பாஜக எடுத்திருக்கலாம் என்ற முணுமுணுப்பும் எழுந்தது...

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சம அளவிலேயே பாஜக கருதுவதாக தெரிகிறது.. அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே தங்களுக்கே வர வேண்டும் என்பதிலும், பாஜக இப்படி கவனமாக இருக்கலாம்.. ஓபிஎஸ் - எடப்பாடி இருவரில், ஒருவேளை ஆதரவு தருவதானால், இந்த முறையும் நிச்சயம் ஓபிஎஸ்ஸுக்கே ஆதரவு தரும் என்ற பேச்சும் வட்டமடித்து வருகிறது.. எனினும், இவர்களின் உட்கட்சி பூசலை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வருவதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது..

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

அன்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பிரதமர் சொன்னதாலேயே தான் சம்மதித்ததாக கூறியிருந்தார்.. மற்றொரு பக்கம் நயினார் நாகேந்திரன் பேட்டி தரும்போது, "எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பாஜகதான்" என்று கூறியிருந்தார்... ஆக, முதல்வர், துணை முதல்வர் என்ற இருவரின் பதவி விஷயத்தில் பாஜகவின் தலையீடு அப்பட்டமாக நமக்கு தெரியவந்துள்ளது..

 5 தாமரைகள் - 15 தாமரைகள்

5 தாமரைகள் - 15 தாமரைகள்

ஒருபக்கம் இவர்களை தன் பிடியில் வைத்துகொண்டு, மற்றொரு பக்கம் சுமூக சூழலுக்கும் முடிவு கட்டாமல், இந்த இடைப்பட்ட இடத்தை கெட்டியாக பிடித்து அரசியல் செய்கிறது என்கிறார்கள்.. அதாவது அதிமுகவின் பலவீனத்தை வைத்தே, பாஜகவின் பலத்தை பெருக்கிவிடலாம் என்பதே மேலிடத்தின் கணக்காம். ஏற்கனவே கடந்த மாதம் அமித்ஷா, சென்னை வந்திருந்தபோது, தமிழ்நாட்டில் இருந்து டபுள் டிஜிட்டில் எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பவேண்டும் என்று அண்ணாமலைக்கு அசைன்ட்மென்ட் தந்திருந்தாக தகவல்கள் வந்தன..

 15 தாமரைகள்

15 தாமரைகள்

இதற்கு பிறகு சமீபத்தில் அண்ணாமலை ஒரு மேடையில் பேசும்போது, 15 இடங்களில் பாஜக வெற்றி உறுதி.. மிச்சம் 25 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது பாஜகவின் ஒரே லட்சியம் என்றார்.. அதிமுகவின் பலவீனங்கள் பெருக பெருக, எம்பிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி குறி வைத்து வருகிறது பாஜக.

Recommended Video

    குறிப்பிட்ட கட்சிகள் மட்டும் தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்க சொல்வதற்கு என்ன காரணம்? *Politics
     அமித்ஷா கணக்கு

    அமித்ஷா கணக்கு

    இதுதான் நேற்றைய தினம் ஹைதராபாத் கூட்டத்தில் அமித்ஷாவின் மனதில் இருந்து வெளிப்பட்டதாகவே தெரிகிறது.. திராவிட கட்சிகள் இல்லாமல், தமிழ்நாட்டில் காலை கூட ஊன்ற முடியாத நிலையில், அதேசமயம் அதிமுகவையும் பகைத்து கொள்ளாமல், அதிமுக தலைவர்களையும் சமாதானப்படுத்தாமல், அதே அதிமுக தோளிலும் ஏறி சவாரி செய்ய ரெடியாகி வருகிறது பாஜக.. இவ்வளவும் செய்து வரும் நிலையில், 15 தாமரைகள் தமிழகத்தில் மலருமா? தெரியவில்லை பார்ப்போம்..!

    English summary
    Why is Amit Shah targeting Tamil Nadu and What are BJP's plans அமித்ஷா, இந்த முறை தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறியுள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X