விசுவாசமாக இருந்த செந்தில் பாலாஜி.. விட்டுத்தராத ஸ்டாலின்.. அவ்வளவு முக்கியத்துவம் ஏன்? 6 காரணங்கள்
சென்னை: செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 15 மாதங்கள் சிறை வாசத்திற்கு பின் ஜாமீனில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
இன்று மாலை செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். பெரும்பாலும் அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நாசருக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் ராமச்சந்திரன் வசம் இருந்த சுற்றுலாத்துறை ஆர்.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை முனைவர் கோவி.செழியனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் முத்துச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக மது விலக்கு இருந்தது. தங்கம் தென்னரசுவிடம் மின்சாரம் இருந்தது. இரண்டும் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்படும்.
செந்தில் பாலாஜி முக்கியத்துவம்: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் சமீபத்தில்தான் வழங்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம் அவர் அமைச்சராவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இதனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் அமைச்சரவை மாற்றம் வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் சமீபகாலமாக கட்சி மூத்த நிர்வாகிகளிடம் சொல்லி வந்துள்ளார். அவரது ரிலீசுக்காகத்தான் அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உயர்வும் தள்ளிப்போனது. செந்தில் பாலாஜி வரட்டும். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை செய்யலாம் என்று தாமதம் செய்ததாக கூறப்பட்டது. செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். அவர் வருகைக்காகவே ஸ்டாலின் காத்து இருக்கிறார் என்று கூறப்பட்டது.
தற்போது, செந்தில் பாலாஜி வெளியே வந்திருப்பதால் கேபினெட் மாற்றம் நடக்கப்போகிறது. அதாவது ஒருவருக்காகக் அமைச்சரவை மாற்றமே காத்து இருக்கிறது. அவருக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
6 காரணங்கள்:
1. கொங்கு மண்டலத்தில் திமுகவின் எழுச்சிக்கு செந்தில் பாலாஜி பெரிய காரணம். அங்கே மற்ற பல தலைவர்கள் இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி அளவிற்கு கைதேர்ந்தவர்கள், வியூக அமைப்பாளர்கள் இல்லை.
2. கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி ஸ்டைல் பணிகள்.. அவர் தனது படைபலத்தை பயன்படுத்தும் விதம் திமுகவிற்கு ஒரு தேர்தல் மாடலாக மாறிவிட்டது.
3. செந்தில் பாலாஜி சிறப்பாக செயல்பட்டாலும்.. தலைமைக்கு தொடர்ந்து கட்டுப்பட்டு இருக்கிறார். எங்கேயும் லூஸ் டாக் இல்லை.
4. பல வழக்குகள் இருந்தும்.. 15 மாதங்கள் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி டெல்லி பிரஷருக்கு இறங்கி வரவில்லை. பல மாநிலங்களில் முக்கிய தலைவர்கள் கட்சி மாறியது போல செந்தில் பாலாஜி மாறவில்லை.
5. சிறையில் இருந்த போதெல்லாம்.. கடுமையான சூழலிலும் கூட செந்தில் பாலாஜி விசுவாசமாக இருந்தார். வெளியே வந்தும் தனது விசுவாசத்தை நேரடியாக கட்சிக்கு வெளிப்படுத்தினார்.
6. செந்தில் பாலாஜி மனஸ்தாபங்களை மனதில் வைத்துக்கொள்ளாதவர்.. முக்கியமாக கூட்டணி கட்சிகளுக்காக சிறையில் இருந்தும் கூட தேர்தல் சமயத்தில் கொங்கு மண்டலத்தில் பணிகளை செய்தார். லோக்சபா தேர்தலிலும் கூட சிறையில் இருந்தபடியே அவர் செய்த பணிகள் ஸ்டாலினை இம்ப்ரஸ் செய்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications