வேண்டாம்ன்னா வேண்டாம்! அமித் ஷாவை எதிர்க்கும் எடப்பாடி! அப்போ தவெக கூட்டணி கன்பார்ம்? கிரீன் சிக்னல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் கூட்டணி ஆட்சி குறித்து இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பேச்சு அரசியல் உலகில் பல வியூகங்கள் ஏற்பட வழி வகுத்து உள்ளது.

கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு இடையே கூட்டணி ஆட்சி தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, இதற்கு அதிமுகதான் தலைமை என்று அமித் ஷா குறிப்பிட்டு இருந்தார். அதாவது அதிமுகதான் தலைமை என்றாலும்.. ஆட்சி தனித்த ஆட்சி அல்ல.. அதிமுக - பாஜகவின் கூட்டு ஆட்சிதான், அதாவது ஆட்சியில் பங்கு எடுப்போம் என்று கூறி இருந்தார். பல ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்.. ஆட்சியில் பங்கு எடுப்போம் என்று கூறினார்.

vijay tamilaga vetri kazhagam

அண்ணாமலை பதிலடி

அமித் ஷா கூட்டணி ஆட்சி நடக்கும் என்று கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பல இடங்களில் தனிப்பெரும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பதிலில், என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம்.

கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன், என்று கூறி உள்ளார்.

எடப்பாடி பதிலடி

இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலை, அமித் ஷாவிற்கு நேற்று திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க அதிமுக ஒன்றும் ஏமாளி அல்ல.. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்.. வேண்டாம் என்றால் வேண்டாம்.. அதைப்பற்றி கவலையில்லை என்று நேரடியாகக் கூறியுள்ளார். அதாவது பாஜக என்ன கேட்டாலும் கூட்டணியில் இடம் கிடையாது என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறி உள்ளார்.

அமித்ஷாவை எதிர்க்கும் எடப்பாடி

அமித் ஷாவின் ஸ்டேட்மெண்டை எதிர்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எங்கே அதிமுக - தமிழக வெற்றிக் கழக கூட்டணி உருவாகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் ஏற்கனவே அதிமுக கூட்டணிக்குள் விஜயை கொண்டு வருவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவிட்டதாக செய்திகள் உலவ தொடங்கி உள்ளன. விஜயை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயல்வதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சி ஒன்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.

அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி பழனிசாமி விஜய் கூட்டணி

அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சி ஒன்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜயைத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.அதிமுகவில் இளைஞர்கள் இல்லை. அதிமுக தலைவர்கள் பெரும்பாலும் சீனியர்கள். இதனால் இளைஞர்களும் பெரும்பாலும் அதிமுகவை கண்டுகொள்வது இல்லை. இதன் காரணமாக இளைஞர்கள் ஆதரவு கொண்ட கட்சி கூட்டணி தேவை.

தமிழக வெற்றிக் கழகத்திடம் பெரிய இளைஞர் பட்டாளம் உள்ளது. முக்கியமாக முதல் தலைமுறை வாக்காளர்கள் நிறைய பேர் விஜய் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. இவர்களை பிடித்தால் திமுகவிற்கு செக் வைக்க முடியும். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தை இழுக்க எடப்பாடி திட்டமிடுவதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்திடம் உத்தேசமாக 10-12 சதவிகிதம் வரை வாக்குகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் எளிதாக அதிமுக ஆட்சி அமைக்க முடியும் . இதன் காரணமாகவே விஜயை இழுக்க எடப்பாடி நினைப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+