கார்பொரேட்களை விட அதிக வரி செலுத்தும் சாமானியர்கள்! அதிர்ச்சி டேட்டா! அப்படியும் சலுகை தரவில்லை
சென்னை: மத்திய அரசின் 2024 பட்ஜெட் மாத சம்பளதாரர், மத்திய வர்க்கத்தினர் மீதான போர் என்று சொல்லும் அளவிற்கு மிக மோசமான அறிவிப்பாக மாறி உள்ளது. கார்ப்ரேட் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பிஸ்னஸ்மேன்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் பல மாத சம்பளதாரர், மத்திய வர்க்கத்தினருக்கு மறுக்கப்பட்டு உள்ளது.
மத்தியதர வர்க்கம், வரி செலுத்தும் மிடில் கிளாஸ் மக்கள், ஒவ்வொரு முறையும் பட்ஜெட் நாள் நெருங்கும் போது அரசாங்கத்தின் முக்கியமான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்ப்பில் இருப்பார்கள். இந்தியாவின் பொருளாதாரத்தில் அதிகம் பங்களிப்பது இவர்கள்தான்.

இவர்கள்தான் தங்களின் வருமானத்திற்கு வருமான வரி மற்றும் செலவுக்கு ஜிஎஸ்டி வரி ஆகிய இரண்டையும் செலுத்துகிறார்கள். வாங்கும் சம்பளத்திற்கு வரி, அதை வைத்து வாங்கும் பொருட்களுக்கு எல்லாம் வரி, அதில் வாங்கும் சொத்துக்கும் வரி என்று வரி மீது வரி இவர்கள்தான். ஆனால் இவர்களுக்கு என்று எந்த பட்ஜெட்டிலும் பெரிதாக எந்த அறிவிப்பும் வருவதே இல்லை.
வருமான வரி பூதம்: வருமான வரி (வருமான வரி) மற்றும் கார்ப்பரேட் வரி என இரண்டு கூறுகளைக் கொண்ட நேரடி வரிகளில் இந்தியா தொடர்ந்து உயர்வை கண்டு வருகிறது. இதில் கவலை அளிக்கும் விஷயம் 2022-2023ல் கார்ப்பரேட் வரிகளை முந்தி உள்ளது தனிநபர் வருமான வரி. கார்ப்பரேட் நிறுவனங்களை விட, பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், வரிகளில் அதிக பங்களிப்பு செய்கின்றனர்.
அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். நீங்கள் வரி செலுத்துவீர்கள். உங்கள் நிறுவனம் வரி செலுத்தும். உதாரணமாக உங்களின் வருமானம் 2 லட்சத்திற்கு நீங்கள் செலுத்தும் வரியை விட.. உங்கள் நிறுவனம் செலுத்தும் வரி குறைவாக இருக்கும். வரி அடிப்படை அதிகமாக இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கார்ப்பரேட் வரியை விட வருமான வரி குறைவு. அமெரிக்காவில் 43% மக்கள் வரி செலுத்துகிறார்கள், இந்தியாவில் 2% பேர் வரி செலுத்துகிறார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம், ஆனால் வரி குறைப்பு: 2012 இல் 19,000 ல் இருந்து 2024ல் கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம் பங்கு சந்தை மதிப்பு 80,000 ஆக உயர்ந்துள்ள நிலையில் கூட அவர்களின் வரி உயர்த்தப்படவில்லை. கார்ப்பரேட் வரிகளை மிஞ்சும் வகையில் வருமான வரி வரவுகள் அதிகரித்துள்ளன.
"கடந்த 12 ஆண்டுகளில், பங்குச் சந்தைகள் நான்கு மடங்கு உயர்ந்துள்ளன, இது லாபம் உயர்ந்துள்ளது என்பதைக் குறிக்கிறது. ஆனால் மொத்த வரவுகளின் சதவீதமாக கார்ப்பரேட் வரிகள் குறைந்துள்ளன," என்கிறார் திவாரி.
"இந்தியாவின் மக்கள்தொகையில் 2% பேர் செலுத்தும் வருமானத்தின் மீதான வரி, கார்ப்பரேட் வரியை விட அதிகம். இது நீண்ட காலத்திற்கு ஏற்றது அல்ல," என்கிறார் திவாரி.
2019-ல் கார்ப்பரேட் வரியை அரசாங்கம் குறைத்துள்ளது, இதனால் ஆண்டுக்கு ரூ. 1.44 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. 2020 முதல் 2023 நிதியாண்டு வரை, கார்ப்பரேட் லாபம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ம் ஆண்டு கார்ப்ரேட் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், 2023-24ம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.922,675 கோடி கார்ப்ரேட் வரியாகவும், ரூ.1,022,325 கோடி தனி நபர் வருமான வரியாகவும் கிடைத்தது. மக்கள் தொகையில் 2% உள்ள வருமான வரி செலுத்துவோர், கார்ப்ரேட்களை விட அதிக வரியை செலுத்துகிறார்கள்.
தனிநபர் வருமான வரி (30%) கார்ப்பரேட் வரியை (27%) விட அதிகமாகவும், ஜிஎஸ்டியை விட (28%) அதிகமாகவும் உள்ளது.

பட்ஜெட் ஷாக்; மத்திய அரசின் 2024 பட்ஜெட் மாத சம்பளதாரர், மத்திய வர்க்கத்தினர் மீதான போர் என்று சொல்லும் அளவிற்கு மிக மோசமான அறிவிப்பாக மாறி உள்ளது. கார்ப்ரேட் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பிஸ்னஸ்மேன்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் பல மாத சம்பளதாரர், மத்திய வர்க்கத்தினருக்கு மறுக்கப்பட்டு உள்ளது. தனி நபர் வருமான வரியிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
நேற்று பஜெட்டில் செய்யப்பட்டுள்ள வருமான வரி மாற்றம் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மாத ஊதியம் பெறுவோருக்கு நிரந்தர கழிவு ரூ50,000-ல் இருந்து ரூ75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் - ரூ7 லட்சம் பெறுவோருக்கு 5% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் - ரூ10 லட்சம் பெறுவோருக்கு 10% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் - ரூ12 லட்சம் பெறுவோருக்கு 15% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் - ரூ15லட்சம் பெறுவோருக்கு 20% வரி விதிக்கப்படும், என்று சிறிய அளவிலான மாற்றங்களே செய்யப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications