Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் அணு உலைகளில் போர் ஒத்திகை நடத்தப்படுவது ஏன்? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய போர் ஒத்திகையாக இது பார்க்கப்படுகிறது. இப்படிபட்ட நேரத்தில் ஏன் அணு உலைகளில் போர் ஒத்திகை நடத்தப்படுகிறது என்று இங்கே பார்க்கலாம்.

கடைசியாக 1971ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டபோது ஒத்திகை நடத்தப்பட்டது. அதன்பின் இப்போது மீண்டும் போர் ஒத்திகை நடத்தப்படுகிறது.

போர் ஒத்திகை

போர்ச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை ஒத்திகை நடத்த, பல மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. விமான தாக்குதல் அபாயச் சங்கு ஒலிக்க விடுவது, தாக்குதல் நடந்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை ஒத்திகை பார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Why is Indian army doing army drill in Nuclear Power Plants

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு பின்வரும் கடிதத்தை மத்திய அரசு எழுதி உள்ளது.

போர் ஒத்திகை பயிற்சியின் முக்கிய விவரங்கள்
தேதி: மே 7, 2025
இடம்: உங்கள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வகைப்படுத்தப்பட்ட அனைத்து சிவில் நகரங்கள்/மாவட்டங்கள்

ஒத்திகை பயிற்சியின் முதன்மை நோக்கங்கள் பின்வருமாறு

விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் தாக்கத்தை மதிப்பிடுதல். அவர் எப்படி இருக்கின்றன, சரியாக இயங்குகிறதா? விமானங்கள் வருவதை முறையாக அறிவிக்கிறதா என்பதை மதிப்பிடுவது. இந்திய விமானத்துடன் ஹாட்லைன்/ரேடியோ தொடர்பு இணைப்புகளை இயக்குதல். சோதனை செய்தல். படை கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டைச் சோதிப்பது.

எதிரி தாக்குதல் ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிவில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் போன்றோருக்கு பயிற்சி அளித்தல். விபத்து தடுப்பு நடவடிக்கைகளை வழங்குதல். முக்கியமான ஆலைகள்/நிறுவல்களை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடுளை செய்தல். அவசர சேவைகள், தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு சேவைகளின் செயல்பாடுகள் மற்றும் வேகத்தை கண்டுபிடித்தல்.

விபத்து தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல். பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வேகமாக செல்ல வெளியேற்றத் திட்டங்களை வகுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் எங்கே?

சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய நான்கு இடங்களில் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அணு உலைகள் ஏன்?

போர் நடக்கும் போது பாகிஸ்தான் போர் விமானம் உள்ளே வந்தால்.. உடனடியாக ரேடார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு ராக்கெட் மூலம் வீழ்த்தப்படும். இல்லையென்றால் உடனடியாக இந்திய போர் விமானங்கள் போய் பதில் அட்டாக் செய்யும்.

ஆனால் இது போன்ற நேரங்களில் 3 விஷயங்களை காக்க வேண்டும். 1. மிகப்பெரிய தொழிற்சாலைகள், கட்டிடங்கள். 2. அரசு கட்டிடங்கள், அமைச்சர்கள் போன்ற உயர் தரப்பினர் உள்ள இடங்கள். 3. கட்டமைப்பு தொடர்பான கட்டிடங்களான அணு உலை, அனல்மின் நிலையம், சுரங்கம் போன்ற கட்டிடங்கள்.

இதில் முதல் இரண்டு தாக்கப்பட்டால் கூட தப்பிக்கலாம். மீண்டும் கட்டலாம். ஆனால் அணு உலை அப்படி இல்லை. அணு உலையில் அணு பிளக்கப்பட்ட பின் அதை நிறுத்த முடியாது. இதை கட்டுப்படுத்த கண்ட்ரோல் ராட் இருக்கும். அதோடு நீர் பயன்படுத்தப்படும். ஒருவேளை ஏவுகணைகள், விமானங்கள் இதை தாக்கினால் அணு கசிவு உடனடியாக ஏற்படும்.

ஏனென்றால் கோர் பாதிக்கப்பட்டால் உடனே சரி செய்ய முடியாது. இது மறைமுகமான அணு ஆயுத அட்டாக் போன்றது. இதனால் கட்டமைப்பு தொடர்பான கட்டிடங்களான அணு உலை, அனல்மினால் நிலையம், சுரங்கம் போன்ற கட்டிடங்கள் எப்போதும் கூடுதலாக பாதுகாக்கப்படும். இதையடுத்தே நாளை மேற்கொள்ளப்படும் ஒத்திகை அணு உலைகளில் செய்யப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+