India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவ்வளவு விக்கெட் எடுத்தாரா! இந்திய அணியில் "ஓரம்கட்டப்பட்ட" நடராஜன்.. அதுதான் காரணமாம்! பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் மீண்டும் நடராஜனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பல புதிய வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் சீனியர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? - 'சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்'எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? - 'சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்'

 அணி விவரம்

அணி விவரம்

முன்னதாக இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் இந்தியா இரண்டிலும், இங்கிலாந்து ஒன்றிலும் வென்றது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த தொடரை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்தில் எட்க்பாஸ்டன் மைதானத்தில் ஜூலை 1 - 5ம் தேதி வரை இந்த போட்டி நடக்க உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்) ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சேதேஷ்வர் புஜாரா, ரிஷப் பந்த் (வி.கே.), கே.எஸ்.பாரத் (வி.கே.), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டி 20 தொடர்

டி 20 தொடர்

அதே சமயம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில், கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (துணை கேப்டன்)(Wk), தினேஷ் கார்த்திக் (Wk), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நடராஜன்

நடராஜன்

ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன் இந்த முறை அணியில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 2020ல் இவர் சிறப்பாக ஆடினார். ஆனால் அதன்பின் காயம் காரணமாக இவர் அணியில் எடுக்கப்படவில்லை. பின்னர் மீண்டும் இந்த சீசன் ஐபிஎல்லில் சிறப்பான தொடக்கம் கொடுத்தார் 14 போட்டியில் 18 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த அணியில் முன்னணி பவுலர்களில் இவரும் ஒருவர்.

ஏன் இல்லை

ஏன் இல்லை

ஆனால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சீசனில் அவர் நன்றாக விக்கெட்டுகளை எடுத்தாலும் கடைசி சில போட்டிகளில் அவர் ரிதம் மிஸ்ஸாகிவிட்டது. அதிலும் மும்பைக்கு எதிரான போட்டியில் 60 ரன்களை ஒரு விக்கெட் கூட எடுக்காமல் கொடுத்தார். யார்க்கர் போட முடியாமல் லோ புல் டாஸ் போட்டார். இது அவருக்கே எதிராக திரும்பி உள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு இப்போது வாய்ப்பு தரப்படவில்லை.

உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக்

அதே சமயம் டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக பல வீரர்களை சோதனை செய்து பார்க்க டிராவிட் விரும்புகிறார். இதனால் தற்போது உம்ரான் மாலிக் போன்றவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதோடு அணியில் ஏற்கனவே அவேஷ்வரக்கூடிய மற்ற போட்டிகளில் நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படலாம், மொத்தமாக பலரை ரொட்டேஷனில் இறக்கி, அதில் சிறப்பான பவுலர்களை அணி நிர்வாகம் தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

பலருக்கு வாய்ப்பு

பலருக்கு வாய்ப்பு

அதாவது பலருக்கு வாய்ப்பு கொடுத்து அதில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்து கடைசியில் டி 20 உலகக் கோப்பை அணிக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. நடராஜனுக்கு தொடையிலும் லேசான காயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் அவரை அணியில் சேர்க்காமல் போனதற்கு காரணம் என்கிறார்கள். விரைவில் அவருக்கு ரிதம் கிடைக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புகள் உள்ளன.

English summary
Why is Natarajan not included in the Team India squad against South Africa series? தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் மீண்டும் நடராஜனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X