"இது" ஒன்னுதான் இடிக்குது.. தமிழகத்தை குறி வைக்கும் ராகுல்.. டெல்லிக்கு பறந்த "ஹாட் ரிப்போர்ட்"
தமிழகத்தில் ராகுல் போட்டியிட யோசித்து வருவதாக தெரிகிறது
சென்னை: தமிழகத்தை குறி வைத்து ராகுல்காந்தியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வதாக சொல்லப்படுகிறது.. ஆனால், அதற்குள் கடுமையாக கோபமும், டென்ஷனும் ராகுலுக்கு ஏற்பட்டுவிட்டதாம்.. என்ன காரணம்?!
நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்த நிலையில், பல்வேறு சிக்கல்களையும் எதிர்ப்புகளையும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் பற்றி பொறுப்பாளர் கௌரவ் கோகாய் கொடுத்த ரிப்போர்ட் ராகுல்காந்தியை கடுப்பாக்கியிருக்கிறதாம். 2024- நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடலாமா என ராகுல் காந்தி யோசித்து வைத்திருக்கிறார்.

திமுக கூட்டணி
அதற்கேற்ப, கட்சியை தமிழகத்தில் வலிமையாக வைத்துக்கொள்ள புதிய உறுப்பினர்களை சேர்க்கச் சொல்லி காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டிருந்தார். உறுப்பினர் படிவம் கொடுத்து உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதில் ராகுலுக்கு நம்பிக்கை இல்லை. காரணம், புதியவர்களை கட்சியில் சேர்க்கும் முயற்சியை எடுக்காமலே, வாக்காளர்கள் பட்டியலை பார்த்து பெயரை எழுதி பல லட்சம் உறுப்பினர்களை சேர்த்திருக்கிறோம் என கணக்குக் காட்டி தலைமையை நம்ப வைத்து விடுகிறார்கள் என்பதுதான்.

மெம்பர்ஷிப்
அதனால், இந்த முறை, உறுப்பினர் படிவங்களை விநியோகிக்காமல், டிஜிட்டல் மெம்பர்ஷிப்பை நடத்த உத்தரவிட்டிருந்தார். டிஜிட்டல் மெம்பர்ஷிப்பில் சேர்ப்பதில் நிறைய கண்டிசன்கள் உண்டு. அதனால், போலி உறுப்பினர்களை சேர்த்து தலைமையை ஏமாற்ற முடியாது என்பதாலேயே இதனை அறிமுகபப்டுத்தினார் ராகுல்காந்தி. அதன்படி, டிஜிட்டல் மெம்பர்ஷிப் தமிழக காங்கிரசில் கடந்த 3 மாதங்களாக நடந்து கொண்டிருந்தது.

சோனியா காந்தி
டிஜிட்டல் வழியாக உறுப்பினர்களை சேர்க்க மார்ச் 31 ந்தேதி கடைசி நாள். இந்த டிஜிட்டல் மெம்பர்ஷிப்பை கண்காணிக்கும் பொறுப்பாளராக அசாம் மாநிலத்தின் எம்.பி. கௌரவ் கோகாயை நியமித்திருந்தார் சோனியாகாந்தி. இவர் அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தருண் கோகாயின் மகன். டிஜிட்டல் மெம்பர்ஷிப் முடிய சில நாட்களே இருந்ததால் அதனை ஆய்வு செய்ய கடந்த 27-ந்தேதி மாலை 4 மணிக்கு சென்னை வந்தார் கௌரவ் கோகாய்.

அதிர்ச்சி
சத்தியமூர்த்திபவனில் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விவாதித்தார். அப்போது, மாவட்ட வாரியாக புதிய உறுப்பினர்களை சேர்த்த விபரங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டது. அந்த பட்டியலைப் பார்த்து அதிர்ந்து போனார் கௌரவ் கோகாய். இரட்டை இலக்கத்திலும் மூன்று இலக்கத்திலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பதுதான்.

மெம்பர்ஷிப்
அதாவது, 200, 300, 1000 என்ற அளவிலேயே உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார்கள். இதுதான் அவருக்கு கடும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. தனது அதிருப்தியை கூட்டத்திலேயே வெளிப்படுத்தினார் கௌரவ் கோகாய். சென்னையில் ஒரு நாள் தங்கியிருந்து நிறைய விசயங்களை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டிருந்த அவர், மெம்பர்ஷிப்பில் ஏற்பட்ட அதிருப்தியால் 27-ந்தேதி இரவே டெல்லிக்கு கிளம்பிவிட்டார் கௌரவ் கோகாய்.

தலைவர்கள்
டெல்லிக்கு சென்ற அவர், "தமிழகத்தில் காங்கிரசை வளர்க்கும் எந்த முயற்சியிலும் தலைவர்கள் இல்லை. புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் போதிய அக்கறை காட்டவில்லை. தனிப்பட்ட முறையில் தலைவர்களிடம் பேசிய போது, காங்கிரசில் உறுப்பினராக சேர யாரும் முன்வருவதில்லை என அலட்சியமாக சொல்கின்றனர். கோஷ்டிகள் அதிகமிருக்கிறது" என்றெல்லாம் ராகுல்காந்திக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறாராம். அதனை பார்த்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மீது ராகுல் கடுப்பாகியிருக்கிறார் என்று கிசுகிசுக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications