ஆசையாய் டிரம்ப் கேட்ட நோபல் பரிசு.. ஆனால், இஸ்ரேல் அநியாயத்துக்கு வாயே திறக்கலயே: பெ. சண்முகம் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரேலை அவ்வளவு எளிதாக அமெரிக்கா சீண்டாது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பக்கப்பலமாக இருக்கிறது. அமெரிக்காவும் எப்போதுமே நல்ல நட்பு நாடாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இந்நிலையில், காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற 40க்கும் மேற்பட்ட கப்பல்களை இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் சிறைபிடித்திருக்கிறது. இஸ்ரேலின் இந்த செயல்பாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்..

இந்தியா பாகிஸ்தான் போர் உட்பட 7 போர்களை நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார்.

trump nobel prize shanmugam

மேலும், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய டிரம்ப், "எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத யாரோ ஒருவருக்கு அதை கொடுப்பார்கள். அமைதிக்கான நோபல் விருது எனக்கு தரப்படாவிட்டால் அது நம்முடைய நாட்டுக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும்.

நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்

எனக்கு அது வேண்டாம், நாடு அதைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம்முடைய நாட்டுக்கு அது கிடைக்க வேண்டும். யுத்தங்கள் எதுவும் முடியவே முடியாது என்று பலரும் சொன்னார்கள். அதற்கேற்றபடி 31 ஆண்டுகள் வரை சில போர்கள் நீடித்தன. ஒரு போர் 36 வருடங்கள் நீடித்தது. ஆனால் நான் 7 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியானவன்' என்று தெரிவித்தார்.

வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் யார் யாருக்கு வழங்கப்பட உள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த பேச்சு பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.

இதனிடையே, காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தி கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களை சிறைபிடித்துள்ளது.

காசா - இஸ்ரேல்

காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற 40க்கும் மேற்பட்ட கப்பல்களை இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் சிறைபிடித்திருக்கிறது.. மேலும், கப்பல்களில் இருந்த சமூக ஆர்வலர்கள் கிரேடா துன்பர்க், ரீமா ஹாசன், தியகோ அவிளா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது.. இஸ்ரேலிய அரசால் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, பாதுகாப்பான மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு அல்-மசாவி உட்பட காசா முழுவதும் நேற்றைய தினம் இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. காசாவில் நேற்று நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டுனர்.. இந்த செய்தி, உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் பெ.சண்முகம்

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இஸ்ரேலின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்..

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "காசாவில் பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு உலக சமூகம் அனுப்பிய உணவுப் பொருட்களை தடுக்கும் இஸ்ரேலின் கொடூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.

உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு தனக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பிதற்றி வரும் டிரம்ப் இஸ்ரேல் அரசின் இந்த அநியாயத்தை பார்த்து வாயை மூடிக்கொண்டு இருப்பதேன்?" என்று கேள்வி பெ.சண்முகம் எழுப்பியுள்ளார்.

நசுக்கப்படும் தொழிலாளர்கள்

ஏற்கனவே டிரம்பை கடுமையாக விமர்சித்து வருகிறார் பெ.சண்முகம்.. சமீபத்தில்கூட டிரம்ப் விதித்த வரி விதிப்பு குறித்து கருத்து செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், "டிரம்ப் என்ற தனி நபரின் விருப்பு வெறுப்பால் விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் வரியால் பல நாடுகளிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்..

இதனால் இந்தியாவும் பொருளாதார நெருக்கடி சந்தித்துள்ளது.. அதிலும் தமிழகத்தில் திருப்பூர் ஜவுளி உற்பத்தி நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..

அதேபோல திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களில் தோல் தொழில் முடங்கும் நிலைமை உள்ளது.. வருடத்துக்கு ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முந்திரி தொழிலில் உள்ள விவசாயிகள், தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாய் மூடியிருக்கும் டிரம்ப்

எனவே அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி அடையாமல், இடதுசாரிகள் உள்ளிட்ட பிற கட்சிகளோடு கலந்து பேசி மாற்றுக் கொள்கையை உருவாக்கி, இந்திய தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்..

இந்நிலையில், நோபல் பரிசு தனக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பிதற்றி வரும் டிரம்ப் இஸ்ரேல் அரசின் இந்த அநியாயத்தை பார்த்து வாயை மூடிக்கொண்டு இருப்பதேன்?" என்று காட்டமாக பெ.சண்முகம் கேள்வி எழுப்பியிருப்பது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+