மெசேஜை படித்த விஜய்.. கைக்கு போன முக்கிய தகவல்.. புஸ்ஸி ஆனந்தா இப்படி செஞ்சது? நீக்க வேண்டுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் உள்ளே புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக பெரிய அளவில் கலகக்குரல் வெடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று புஸ்ஸி ஆனந்த் காலில் கரூர் வழக்கில் ஜாமீன் பெற்ற கரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் விழுந்து கும்பிட்ட வீடியோ வெளியானது. அவருக்கு மரியாதை செலுத்தி, அவரிடம் ஆசிர்வாதம் பெறும் வீடியோ பெரிய சர்ச்சையானது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், உறுப்பினர்கள் பலர் புஸ்ஸி ஆனந்தை தாக்கி பேசி வருகின்றனர். விஜய் புஸ்ஸி ஆனந்தை நீக்க வேண்டும்.. கட்சியில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

TVK Vijay

பல்வேறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் ஐடிக்கள், பின்வரும் போஸ்டுகளை செய்து வருகின்றன. அதில், கட்சி தொடங்கி 2 வருடங்கள் ஆகப்போகும் நிலையில் கட்சியின் மிக முக்கிய கட்டமைப்புக்கு தேவையான,

மாநில இளைஞர் அணி எங்கே?
தொண்டர் படை எங்கே?
மகளிர் அணி எங்கே?
மீனவர் அணி எங்கே?
விவசாயிகள் அணி எங்கே?
தொழிலாளர்கள் அணி எங்கே?
அதுபோக

திருநங்கைகள் அணி
மாற்றுத்திறனாளிகள் அணி
இளம் பெண்கள் அணி
குழந்தைகள் அணி
பணியாளர் அணி
வர்த்தகர்கள் அணி
நெசவாளர்கள் அணி
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி
தொழில்முனைவோர் அணி
இந்தியாவில் வசிக்காத அணி
கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அணி
தன்னார்வலர்கள் அணி
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

புஸ்ஸி ஆனந்த் சந்திப்பு

இப்படி கட்சியின் மிக முக்கிய கட்டமைப்புக்களை கூட செய்யமுடியாத கையாளாகாத பொ.செ பதவியில் அமர்த்தி உங்களை நம்பி இருக்கும் கோடான கோடி தோழர்களை வஞ்சிப்பது ஏன்?? புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சிக்காக மட்டுமே கட்டமைக்கப்படுகிறதா இக்கட்சி? தமிழ்நாட்டு மக்களுக்கான ஆக்கப்பூர்வ அரசியலை நோக்கியே உங்கள் பயணத்தில் சில முக்கிய முடிவுகளை விரைந்து எடுங்கள் அண்ணா உங்களோடு உங்களுக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி பயணிக்கிறோம் உங்களை மட்டுமே நம்பியுள்ளோம், என்று நேற்று புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக பல போஸ்டுகள் செய்யப்பட்டன.

TVK Vijay

விஜய் கைக்கு போன மெசேஜ்

இந்த போஸ்டுகள் விஜய்க்கு அனுப்பப்பட்டதாகவும். அதை படித்த விஜய் ஆக்சன் எடுக்க போவதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

புஸ்ஸி ஆனந்த் 17 நாட்களுக்கு பிறகு நேற்று முதல்நாள்தான் பனையூரில் தவெக கட்சி அலுவலகத்துக்கு வந்தார். முகத்தில் தாடி வளர்த்திருந்தார். ஆனால் சிரித்தபடி புகைப்படம் எடுத்தார். அவரை நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். நேற்று புஸ்ஸி ஆனந்த் யாருக்கும் அஞ்சலி செலுத்தவில்லை. மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலை கூட போடவில்லை.

TVK Vijay

ஆனால் கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டார். அலுவலகத்துக்குள் புஸ்ஸி ஆனந்த் நுழைந்ததும் கதவு மூடப்பட்டது. அதன்பிறகு அவர் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் உள்ளே புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக பெரிய அளவில் கலகக்குரல் வெடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

TVK Vijay

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் மாயமாகிவிட்டார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும் கிட்டத்தட்ட தலைமறைவாகி இருந்தனர். விஜய் மட்டும் இருக்கிறார். ஆனால் அவரும் கூட பனையூர் வீட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார். கட்சியின் முகமாக இருப்பவர் தலைவருக்கு அடுத்து பொதுச்செயலாளர்தான். ஆனால் அப்படிப்பட்ட புஸ்ஸி ஆனந்தே 2 வாரங்கள் தலைமறைவாக இருந்தார்.

TVK Vijay

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. விஜய்.. ஏன் புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியை அம்போ என்று விட்டுவிட்டு சென்ற அவர் மீது விஜய் ஏன் ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. விஜய் அவரிடம் சிக்கிக்கொண்டது போல செயல்படுகிறார். அவரை இனியும் ஏன் நம்புகிறார். ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் இப்படி விட்டு இருப்பார்களா? விஜய் அவர்களை போல ஆக ஆசைப்படுகிறார்.. ஆனால் அப்படி ஆக்சன் எடுக்க வில்லை என்று கட்சிக்கு உள்ளே புகார் எழுந்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+