சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த ஒரு பேட்டிதான்.. அதுதான் கூட்டணி கதவை சாத்தியது.. தேமுதிக மீதான ஸ்டாலினின் கோபம்!

தேமுதிகவுடன் திமுக கண்டிப்பாக கூட்டணி வைக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக வா?.. திமுக வா?.. திகிலடிக்கும் தேமுதிக அரசியல்!- வீடியோ

    சென்னை: தேமுதிகவுடன் திமுக கண்டிப்பாக கூட்டணி வைக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார். இதற்கு பின் முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது.

    கடந்த இரண்டு வாரமாக தேமுதிக தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் லோக்சபா தேர்தலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக, திமுக ஆகிய முக்கிய கட்சிகளுடன் பேசியது.

    பலகட்ட தரப்பு ஆலோசனைகள் வரிசையாக தோல்வியில் முடிந்தது. எந்த கட்சியுடனும் தேமுதிக கூட்டணி உடன்படிக்கை ஏற்படவில்லை. தேமுதிகவுக்கு திமுகவுடனான கூட்டணி கதவுகளும் மூடப்பட்டு இருக்கிறது.

    தேமுதிக விருப்பம்.. சொல்லிப் பார்த்த துரைமுருகன்.. கதவை அடைத்த ஸ்டாலின் தேமுதிக விருப்பம்.. சொல்லிப் பார்த்த துரைமுருகன்.. கதவை அடைத்த ஸ்டாலின்

    முடியாது என்று கூறிவிட்டார்

    முடியாது என்று கூறிவிட்டார்

    தேமுதிகவுடன் கூட்டணி வைக்க முடியாது என்று நேற்றே திமுக பொருளாளர் துரைமுருகன் திட்டவட்டமாக கூறிவிட்டார். இன்று மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் அதையே கூறியுள்ளார். எங்கள் கூட்டணி இறுதியாகிவிட்டது. இதில் வேறு இடங்கள் எதுவும் இல்லை. அவ்வளவுதான் என்று கூறிவிட்டார்.

    ஆசையில் இருந்தது

    ஆசையில் இருந்தது

    ஆனால் கடந்த திங்கள் கிழமை வரை திமுக தேமுதிகவுடன் கூட்டணி வைக்கும் முடிவில்தான் இருந்தது. சில நாட்கள் முன்பு கூட ஸ்டாலின் நேரடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று கூட்டணி குறித்து பேசினார். ஆனால் அப்போது தேமுதிக சரியாக ஸ்டாலினிடம் பிடி கொடுத்து பேசவில்லை.

    உடல்நலம்

    உடல்நலம்

    இதையடுத்து வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். இது அரசியல் சந்திப்பு இல்லை என்றார். ஆனால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, இது அரசியல் சந்திப்புதான். அரசியல் பேசினோம். எங்கள் பலம் எங்களுக்கு தெரியும் என்று கூறி இருந்தார்.

    பிரச்சனை

    பிரச்சனை

    இந்த பேட்டி, தேமுதிக மீது ஸ்டாலினுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஒரு பேட்டிதான் இந்த பிரிவை உண்டாக்கி உள்ளது. இந்த பேட்டியை வைத்து ஸ்டாலினை பலர் இணையத்தில் கிண்டல் செய்தனர். மு.க அழகிரி தரப்பு கூட பிரேமலதா பேட்டியை வைத்து ஸ்டாலினை கிண்டல் செய்தனர். இது திமுக - தேமுதிக இடையே விரிசலை ஏற்படுத்தியது.

    மோசம்

    மோசம்

    அதேபோல் தேமுதிகவும் திமுகவை பெரிய அளவில் மதிக்காமல் அதிமுகவுடன் மட்டுமே பேசியது. அதிமுக எவ்வளவு இழுத்து பிடித்தாலும், மீண்டும் மீண்டும் அவர்களுடன்தான் பேச சென்றது தேமுதிக. இதை புரிந்து கொண்ட திமுக மொத்தமாக தேமுதிக கதவை அடைத்தது. இவர்கள் கூட்டணியே வேண்டாம் என்றது.

    ஏற்றுக்கொள்ளவில்லை

    ஏற்றுக்கொள்ளவில்லை

    இதனால்தான் தேமுதிக சுதீஷ் நேற்று பேசியதை கூட துரைமுருகன் பொதுவில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். பிரேமலதா செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பேசியது போல, நாமும் பேசுவோம். அப்போதுதான் அவர்களுக்கு அரசியல் புரியும் என்று துரைமுருகனிடம் ஸ்டாலின் கோபமாக கூறியதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

    English summary
    Here is the reason why M K Stalin abruptly closes the DMK alliance door for DMDK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X