அடடா லிஸ்டுலயே இல்லையே! அவங்களையே போய் பார்த்த பிடிஆர்.. இதுமட்டும் நடந்தா தமிழ்நாடே மாறும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முக்கியமான மீட்டிங் ஒன்று மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடுகள் அதிக அளவில் குவிய தொடங்கி உள்ளன. கொரோனாவிற்கு பின் அதிக முதலீடுகளை பெற கூடிய மாநிலங்களில் முன்னிலையில் தமிழ்நாடு உள்ளது.

Why minister PTR Palanivel Thiagarajan meets Google India workers all of a sudden? What is the reason?

கடந்த வாரம்தான் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். அவரின் இந்த பயணத்தில் முக்கியமான சில நிர்வாகிகளும் உடன் சென்றுள்ளனர்.

முக்கியமாக டெமாசெக் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். அந்த நிறுவனம் சர்வதேச முதலீட்டு நிறுவனம் ஆகும். இது சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான கூட்டு நிறுவனமாகும். டிசம்பர் 2022 நிலவரப்படி அந்த நிறுவனத்தின் கீழ் மொத்தம் US$496.59 பில்லியன் சொத்துக்கள் உள்ளன டெமாசெக் நிறுவனத்தின் சிஇஓ, சிஓஓ அதிகாரிகள் உடன் ஸ்டாலின் இந்த சந்திப்பை நடத்தினார்.

டிஆர்பி ராஜா: முதல்வர் ஸ்டாலின் மற்றும் குழுவினர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் சிங்கப்பூர் மீட்டிங் ஒன்று கவனம் பெற்றுள்ளது.

அதன்படி தமிழக அரசின் பிரதிநிதிகள் குழு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் சிங்கப்பூரில் உள்ள கூகுளின் ஆசிய பசிபிக் தலைமையகத்திற்குச் சென்று ஆலோசனை செய்து வருகின்றனர். கூகுள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சாத்தியமான ஒப்பந்தங்கள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்தனர்.

தமிழ்நாட்டிற்கு கூகுள் நிறுவனத்தை கொண்டு வரும் விதமாக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஐடி அமைச்சர் பிடிஆர் : இந்த நிலையில்தான் தற்போது அதிரடி திருப்பமாக ஐடி துறை அமைச்சர் பிடிஆர் கூகுள் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் செய்துள்ள போஸ்டில், ருச்சிதா அகர்வால் மற்றும் அவரது குழுவினருடன் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. 2019 & 2021 பிரச்சாரங்களில் (திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளராக) அவர்களின் மிகப்பெரிய விளம்பரதாரர்களில் ஒருவராக நான் அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன்.

எனது புதிய அமைச்சரவை பதவியில் அவர்கள் என்னைச் செயலகத்தில் சந்தித்து, நாம் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை ஆராயுமாறு அழைத்தனர். தமிழ்நாட்டின் சிறந்த டிஜிட்டல் புரட்சியை அங்கீகரித்து, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை மாற்றுவதற்கான எங்கள் பார்வையை மையமாக வைத்து இந்த மீட்டிங் அமைந்தது.

கூகுள் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நாம் வேகமாக முன்னேற முடியும். புதுமைகளை வளர்ப்பதன் மூலமும், செழிப்பான வணிக சூழலை உருவாக்குவதன் மூலமும், அதை மிகவும் விருப்பமான தகவல் தொழில்நுட்ப முதலீட்டு இடமாக உயர்த்துவதன் மூலமும் தமிழ்நாட்டை முன்னுக்கு கொண்டு வர முடியும் என்று அமைச்சர் பிடிஆர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு கூகுள் போன்ற நிறுவனத்தை கொண்டு வர வேண்டும் என்பது பல கால கனவு. அது தற்போது நிறைவேறுவதற்கான சாத்திய கூறுகள் தெரிய தொடங்கி உள்ளன. தெற்கு ஆசியாவில் சீனாவிற்கு பதிலாக இந்தியா பக்கம் பார்வையை திருப்பும் கூகுளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் பட்சத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலம் மொத்தமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் குவியும் முதலீடு: இந்த மாதத்தில் மட்டும் ₹70,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்டு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செய்யாறு அருகே 60 ஏக்கர் பரப்பில் தனது முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கிறது. 2025ம் ஆண்டு முதல் இந்த புதிய ஆலையில் இருந்து வாகனங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த மிட்டுபிஷி ( MITSUBISHI ELECTRIC ) நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாட்டில் ரூபாய் 1,891 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இந்த மெகா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

சென்னையில் இவர்கள் தொழிற்சாலையை அமைக்க உள்ளனர். ஏர் கண்டிஷனர் & கம்ப்ரசர் தொழிற்சாலை தொழிற்சாலை 2 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. 10 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளனர்.

தென்கொரியாவை சேர்ந்த சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னையில் தனது முதலீட்டை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அவர்களின் கிளை நிறுவனமான கியா நிறுவனம் கடந்த முறை தமிழ்நாட்டில் ஒப்பந்தம் செய்ய இருந்தது.

ஆனால் அதை தெலுங்கானா அரசு உள்ளே புகுந்து ஒப்பந்தம் செய்தது. இதனால் கடந்த ஆட்சியில் கியா தொழிற்சாலை சென்னைக்கு கிடைக்காமல் போனது. இந்த நிலையில்தான் அவர்களின் Hyundai நிறுவனம் தற்போது சென்னையில் முதலீட்டை விரிவுபடுத்த உள்ளது.

பெரும்பாலும் வாகன உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலையை Hyundai நிறுவனம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 11ம் தேதி இந்த ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் சென்னையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இதற்காக முதலீடு செய்ய உள்ளது.

Why minister PTR Palanivel Thiagarajan meets Google India workers all of a sudden? What is the reason?

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இந்த உற்பத்தி ஆலை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்றும், தொடக்கத்தில் 1,200 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக் ராபின்ஸ் தெரிவித்துள்ளார்.இப்படி தமிழ்நாடு மிக பெரிய நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+