இப்படியா நடக்குது? அதிமுகவில் ஜெயக்குமார் அடித்து சொன்னாரே! நிர்மல் குமார் வெளியேறியது ஏன்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு நேற்று ஒரே நாளில் இரு வேறு கட்சிகளில் இருந்து முக்கியமானவர்கள் இணைந்துள்ளனர். இவர்களில் ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவார் என்பது கடந்த சில தினங்களாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதிமுகவை சேர்ந்த நிர்மல் குமார் இணைந்ததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
பாஜகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருந்தவர் நிர்மல் குமார். இவருக்கும் அங்கு கட்சி தலைமைக்கு நெருக்கமானவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் அக்கட்சியில் இருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியேறி அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவிலும் நிர்மல் குமாருக்கு ஐடி பிரிவின் இணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. நிர்மல் குமாரை எப்போதும் சமூகவலைதளங்களை திறமையாக கையாள்வதில் சிறந்தவர். அது போல் சிறந்த வியூக வகுப்பாளராகவும் அறியப்பட்டவர்.
இதை அவர் எத்தனையோ தருணங்களில் நிரூபித்தும் உள்ளார். அது போல் எடப்பாடி பழனிசாமியின் குட் வில் புக்கிலும் இருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் நிர்மல் குமாரின் எக்ஸ் வலைதள பக்கத்தில் இரட்டை இலை சின்னம் நீக்கப்பட்டிருந்து. அத்துடன் அவரது பயோவில் அதிமுகவின் பொறுப்புகளும் நீக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து அவர் தவெகவில் இணைகிறார் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு நிர்மல் குமார் வந்திருந்தார். அங்கு அவரை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார்.
இதையடுத்து அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். ஏற்கெனவே பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த இவர் ஏன் தவெகவில் இணைந்தார் என்ற கேள்வி எழுந்தது. அதாவது ஐடி பிரிவின் புதிய தலைவராக வந்துள்ள கோவை சத்யனுடன், நிர்மல் குமாருக்கு ஒத்து போகவில்லை என கூறப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அவர் தவெகவில் இணைந்ததற்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நிர்மல் குமார், அதிமுகவில் இருந்து விலகியது ஏன் என்றால் அதிமுக- பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தப்பட்டு வருகிறது.
மறைமுகமாக நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முடிவு செய்துவிட்டன. இதை தெரிந்து கொண்ட நிர்மல் குமார், அப்படி ஒன்று நடந்தால் பாஜகவிலிருந்து யாருக்காக வெளியேறினோமோ அவருடனேயே மீண்டும் வேலை செய்யும் சூழல் வரும் என்பதால்தான் அவர் தவெகவில் இணைந்துவிட்டார் என பிரியன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!











Click it and Unblock the Notifications