200 வருட பிளான்.. சூழ்ந்து நின்ற 27 டாக்டர்கள்.. தயவு செஞ்சு பணம் அனுப்பாதீங்க..நித்தியானந்தா பல்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கைலாஸாவில் இருக்கும் நித்தியானந்தா தனது ஆரோக்கியம் பற்றி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    Nithyananda உடல்நிலை கவலைக்கிடம் என வதந்தி! நித்தி கொடுத்த விளக்கம் | Oneindia Tamil

    கைலாஸாவில் இருக்கும் நித்தியானந்தா உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஒரு வாரமாக இணையம் முழுக்க இதுவே பேச்சாக இருக்கிறது.

    அவரின் உடல்நிலை மோசமாகிவிட்டதாக பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. அவர் இறந்துவிட்டதாகவும் கூட செய்திகள் வந்தன. ஆனால் நித்தியானந்தா இதை மறுத்து இருந்தார்.

    மருத்துவர்கள் 27 பேர்

    மருத்துவர்கள் 27 பேர்

    சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டவர் , நான் நல்ல உடல்நிலையில் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. உடலில் எந்த உறுப்பிலும் பாதிப்பு இல்லை. எனக்கு எந்த வைரஸ் பாதிப்பும் இல்லை. ஆனால் என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை. உணவை உட்கொள்ள முடியவில்லை. கஷ்டப்பட்டு சாப்பிட்டால் கூட வாந்தி எடுத்துவிடுகிறேன்., என்று குறிப்பிட்டார். அதோடு தனக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார்.

     இப்போதும் சரியில்லை

    இப்போதும் சரியில்லை

    அதாவது தனக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் உடல்நிலை சரியாகவில்லை. என்னால் பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியவில்லை. நான் சமாதி நிலையில் இருக்கிறேன் என்று கூறினார். இவருக்கு நெருக்கமான மட வட்டாரத்தில் விசாரித்ததில், நித்தியனானதா தியானத்தில் இருக்கிறார். இது நிர்வி கல்ப சமாதி நிலை என்று கூறப்படும். 1 மணி நேரம் மட்டுமே அவர் கண் விழித்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

    பணம் இல்லை

    பணம் இல்லை

    இவரின் கைலாஸாவில் பணம் இல்லை. இதனால் நிதி பெறுவதற்காக அவர் இந்த நாடகத்தை போட்டுள்ளார் என்று செய்திகள் வந்தன. ஆனால் தனக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று நித்தியானந்தா புதிய வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இவரிடம் பணம் இல்லை என்று செய்திகள் வந்த நிலையில், எனக்கு பணம் அனுப்பாதீர்கள். எனக்கு பணம் அனுப்பினால் உடல்நிலை சரியாகாது.

    பணம் அனுப்புகிறார்கள்

    பணம் அனுப்புகிறார்கள்

    பணத்தை கோடி கோடியாக கொட்ட வேண்டாம். இதனால் பயன் இல்லை. மாறாக குருவான அருணகிரி ஆலயத்தில் ஒரு விளக்கை ஏற்றி வைக்கவும். அதுதான் எனக்கு பயன் கொடுக்கும். அருணகிரிநாதர்தான் என்னை குணப்படுத்துவார். தயவு செய்து பணம் அனுப்புவதை நிறுத்துங்கள். நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று நித்தியானந்தா புதிய வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

    200 வருட பிளான்

    200 வருட பிளான்

    இந்த நிலையில்தான் சமீபத்தில் வீடியோ ஒன்றில் நித்தியானந்தா.. நான் அடுத்த 200 வருஷத்துக்கு வாழ போறேன் டா.. அந்த அளவிற்கு உடம்பை தயார் பண்ணி வச்சு இருக்கேன். நீ என்னை கிண்டல் பண்ணிட்டே இரு. நான் வளர்ந்துட்டே இருப்பேன் என்று கூறினார். இந்த நிலையில் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து விளக்கிய அவரின் சீடர்கள் சிலரோ.. அவர் கண்டிப்பாக குணமடைந்து வருவார். 200 வருடம் கூட அவர் வாழ்வார். அந்த அளவிற்கு அவர் உடலை நன்றாக பிளான் செய்து வைத்து இருக்கிறார். அவரை இந்த உடல் பாதிப்பு எல்லாம் எதுவும் செய்யாது என்று நம்பிக்கையாக தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+