சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ் "ஸ்கெட்ச்".. அதிமுகவில் இனி என்ன நடக்கும்? 4 ஆக பிரியும்? சீக்ரெட் உடைத்த ரவீந்திரன் துரைசாமி

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் கட்சிக்குள் அடுத்து என்ன நடக்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியல் சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று நடக்க உள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொதுக்குழு மூலம் இவர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட உள்ளது.

Recommended Video

    EPS தலைமையை அங்கீகரித்து விட்டதா பாஜக? | Politics Today With Jailany | 5.12.2022 | Oneindia Arasiyal

    இந்த நிலையில் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு,

    5 பேர் குறி.. அதிமுகவில் இன்னொரு பிளவு! டெல்லி போடும் 'ஷிண்டே’ கணக்கு.. எடப்பாடிக்கு 'ரெட்’ அலெர்ட்! 5 பேர் குறி.. அதிமுகவில் இன்னொரு பிளவு! டெல்லி போடும் 'ஷிண்டே’ கணக்கு.. எடப்பாடிக்கு 'ரெட்’ அலெர்ட்!

    கோவை செல்வராஜ்

    கோவை செல்வராஜ்

    கேள்வி: கோவை செல்வராஜ் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியது ஏன்?

    பதில்: ஓ பன்னீர்செல்வம் கோவை செல்வராஜை போக விட்டு இருக்க கூடாது என்று நினைக்கிறேன். கோவை செல்வராஜ் குறும்ப கவுண்டர் பிரிவை சேர்ந்தவர் அவர். வெள்ளாள கவுண்டர்கள் இல்லாத கவுண்டர்கள் பிரிவினரை இணைக்க கோவை செல்வராஜ் முயன்று கொண்டு இருந்தார். ஆனால் வைத்தியலிங்கம் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இவர்கள் பிரிந்ததாக கூறப்படுகிறது. அமைப்பு ரீதியாக இவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட காரணத்தால் பிரிந்துவிட்டார். ஏற்கனவே அவருக்கும் எடப்பாடிக்கும் கடும் மோதல் உள்ளது. இதன் காரணமாக கோவை செல்வராஜ் திமுகவில் இணைவார் என்று நினைக்கிறேன். அது திமுகவிற்கு ப்ளஸ்தான். அவர் நன்றாக வேலை பார்ப்பார். அவர் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளது.

    பலம் இல்லையா?

    பலம் இல்லையா?

    கேள்வி: ஓ பன்னீர்செல்வம் அணியின் பலம் குறைந்துவிட்டதா? அவர் அணியில் இருந்து ஆட்கள் வெளியேறிக்கொண்டு இருக்கிறார்களா? அவர் எடப்பாடியை ஏற்றுக்கொள்வாரா?

    பதில்: நிச்சயமாக இல்லை. 2024ல்தான் தெரியும். நிறைய நிர்வாகிகள் கொங்கு மண்டலத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். வெள்ளாள கவுண்டர்கள் தவிர்த்து மற்ற பிரிவினரை சேர்ந்தவர்களை இணைக்க ஓ பன்னீர்செல்வம் முயன்று கொண்டு இருக்கிறார். மற்ற சமூகத்தினரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். எடப்பாடி, வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, தம்பிதுரை, எம் ஆர் விஜயபாஸ்கர் என்று எல்லோரும் வெள்ளாள கவுண்டர்கள். இதனால் கொங்கு நாடார்கள், அருந்ததியர்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாயுடுகள், குறும்புக கவுண்டர்கள் போன்ற ஜாதிகளுக்கு ஓ பன்னீர்செல்வம் ஆதரவு கொடுக்கிறார். இவர்களுக்கு பதவி கொடுக்கிறார். இது ஓ பன்னீர்செல்வத்தின் தனி ஸ்ட்ராட்டஜி. எடப்பாடியின் அரசியல் சமூக நீதியை சூறையாடும் அரசியலாக உள்ளது. அவர் ஸ்டாலினை மட்டுமே எதிர்க்கிறார்.

     என்ன பிளான்?

    என்ன பிளான்?

    இதை பயன்படுத்தி பன்னீர்செல்வம் கொங்கு வேளாளர் அல்லாதவர்களை தன் பக்கம் இழுக்கிறார். கோவைக்கு செல்வராஜ் போனது நஷ்டம்தான். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திடம் இதற்கு எதிராக கட்டமைப்பு இருக்கிறது. 2024ல் இது தெரியும். கொங்கு வேளாளர் அல்லாதவர்கள் மத்தியில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒரு பெயர், மதிப்பு இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர், ஜெயலலிதாவின் வாரிசு என்ற பெயர் அவருக்கு இருக்கிறது. கொங்கு நாடார்கள், அருந்ததியர்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாயுடுகள், குறும்புக கவுண்டர்கள் போன்ற ஜாதிகளுக்கு ஓ பன்னீர்செல்வம் ஆதரவு கொடுப்பது ஒரு விதமான அரசியல் ஸ்ட்ராடஜி. பண்ட்ருட்டி ராமசந்திரன் உள்ளிட்டோர் கொடுத்த ஆலோசனையாக இது இருக்கலாம். கோவை செல்வராஜ் போனது நஷ்டம் என்றாலும் ஓ பன்னீர்செல்வத்திடம் வியூகங்கள் இருக்கிறது.

    அதிருப்தி

    அதிருப்தி

    கேள்வி; நிர்வாகிகள் வெளியே போவதால் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே அதிருப்தி ஏற்படாதா?

    ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அறிமுகம் செய்யப்பட்டவர். பொதுக்குழுவில் தர்ம சங்கடமான நேரத்திலும் அவர் தர்மத்துடன் இருந்தார் என்ற பெயர் உள்ளது. அதோடு முக்குலத்தோர் ஆதரவு அவருக்கு உள்ளது. எடப்பாடி மீது இவர்களுக்கு கோபம் இருக்கிறது. பன்னீர்செல்வம் களத்தில் நிற்கவா, மாட்டாரா என்பதுதான் கேள்வியாக இருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து களத்தில் நிற்கிறார். எடப்பாடியை எதிர்க்கிறார். சட்ட போராட்டம் நடத்துகிறார். பன்னீர்செல்வத்திற்கும் அதிமுகவில் ஒரு வாக்கு வங்கி உள்ளது. அதிமுக உட்கட்சி மோதலால் அதிமுகவின் வாக்குகள் 4 ஆக பிரியும். நாம் தமிழர், பாஜக ஆகியோர் அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார்கள். அதிமுகவில் உள்ள தமிழ் தேசிய வாக்குகளை சீமானும், இந்துத்துவா வாக்குகளை பாஜகவும் பிரிக்கும். அதிமுக வாக்கு வங்கியின் ஒரு பகுதி ஓ பன்னீர்செல்வத்திற்கு செல்லும். அவருக்கு முக்குலத்தோர் சப்போர்ட் உள்ளது. இன்னொரு பங்கு எடப்பாடிக்கு செல்லும். வாக்குகள் 4 ஆக பிரிவதால் பன்னீர்செல்வம் இல்லாமல் 2026ல் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி எதிர்க்க முடியாது.

    அதிமுக வாக்கு வங்கி

    அதிமுக வாக்கு வங்கி

    கேள்வி: எடப்பாடி தானே அதிமுகவின் முகமாக இருக்கிறார்? பின்னர் எப்படி வாக்கு வங்கி பிரியும் என்கிறீர்கள்?

    எடப்பாடியிடம் ஒரு பதற்றம் இருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் நிதானமாக இருக்கிறார். ஆனால் அதற்காக ஓ பன்னீர்செல்வத்திற்குத்தான் அதிக வாக்கு வாங்கி வரும் என்று சொல்ல மாட்டேன். எடப்பாடிக்குத்தான் இப்போது அதிக வாக்கு வாங்கி உள்ளது. ஆனால் ஓ பன்னீர்செல்வமும் கணிசமான வாக்குகளை வைத்துள்ளார். முக்குலத்தோர் வாக்குகள், வெள்ளாள கவுண்டர் அல்லாதோர் அல்லாதோர் வாக்குகள், பெண்கள் வாக்குகள் என்று ஓ பன்னீர்செல்வத்திற்கும் வாக்கு வங்கி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் இல்லாத பட்சத்தில் அதிமுக வெல்வது கடினம். அமைப்பு ரீதியாக அதிமுக எடப்பாடியிடம் இருக்கலாம். ஆனால் அவரால் அதிமுகவின் வாக்கு வங்கியில் பாதியைத்தான் எடுக்க முடியும். எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரும் சமமான தலைவர்கள். இவர்கள் பிரிந்தால் வாக்குகள் பிரியும். இதைத்தான் மற்ற கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் தெரிவிக்கிறார்கள். எந்த வகையில் பார்த்தாலும் "பன்னீர்செல்வம் ஐஸ் ஏ போர்ஸ்" என்றுதான் சொல்லுவேன்!

    English summary
    Why O Panneerselvam is still a force in AIADMK against Edappadi Palanisamy? Raveendran Duraisamy interview to Oneindia Arasiyal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X