சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நம்பர் 2".. முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்த ஓபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் பெரிய அளவில் கோஷ்டி மோதல் நிலவி வரும் நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதை பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இறங்கி வந்துள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டுள்ளதால், இனி கட்சிக்குள் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வருகின்றன.

Recommended Video

    என்ன நடந்தது? எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட OPS | Oneindia Tamil

    அதிமுகவில் தற்போது சசிகலா - எடப்பாடி பழனிச்சாமி- ஓ. பன்னீர்செல்வம் இடையே கடுமையான கோஷ்டி மோதல் நிலவுவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. தினமும் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவேன் என்று சவால்விட்டபடி அடுத்தடுத்து ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    கட்சியை விரைவில் மீட்பேன், தொண்டர்கள் பக்கம் நிற்பேன், எல்லாம் என்னுடைய கட்டுப்பாட்டிற்கு வரும் என்று சசிகலா தொடர்ந்து ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.

    சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. கொறடா பதவி கேட்பாரா ஓபிஎஸ்.. பரபரப்பு சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. கொறடா பதவி கேட்பாரா ஓபிஎஸ்.. பரபரப்பு

    மோதல்

    மோதல்

    சசிகலாவை நேரடியாக இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி எதிர்த்து வருகிறார். சசிகலா எல்லாம் கட்சி உறுப்பினரே கிடையாது. அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக சவால் விட்டு வருகிறார். இப்படி இரண்டும் தரப்பிற்கும் இடையில் மோதல் வந்துள்ள நிலையில், இதில் ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்பதுதான் கேள்வியாக இருந்தது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ் யாருக்கு ஆதரவாக இருக்க போகிறார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்தது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாருக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே கட்சியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் என்று முடிவு செய்யப்படும். ஓபிஎஸ் முடிவுதான் டை பிரேக்கர். ஓபிஎஸ் மட்டும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது கட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    தாக்கம்

    தாக்கம்

    இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று நடந்த அதிமுக கட்சி கூட்டத்தில் ஓபிஎஸ் எதிர்கட்சித் துணை தலைவராக ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. அதாவது எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத ஓபிஎஸ் நம்பர் 2வாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதிகாரபூர்வமாக முடிவு தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    அதிமுகவில் கடந்த சில வருடங்களாக ஓபிஎஸ்ஸுக்கு பெரிய வாய்ஸ் இல்லை என்று புகார் வைக்கப்படுகிறது. முக்கியமாக கூட்டணிக்கு இடம் ஒதுக்கியது, வேட்பாளர் தேர்வு, வன்னியர் இடஒதுக்கீடு, எதிர்கட்சித் தலைவர் தேர்வு என்று எதிலும் ஓபிஎஸ்ஸுக்கு வாய்ஸ் இல்லை என்று புகார்கள் உள்ளனர். இதனால் அவரின் ஆதரவாளர்களும் கூட அதிருப்தியில் உள்ளனர்.

    அதிருப்தி

    அதிருப்தி

    அப்படி இருக்கும் போது ஓபிஎஸ் மட்டும் சசிகலாவுக்கு ஆதரவாக சென்று இருந்தால், அவருக்கு என்று ஒரு வாய்ஸ் இருந்திருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்தனர். ஆனால் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுக்காமல் ஓபிஎஸ் சமாதானமாக சென்றுவிட்டதாக தகவல்கள் வருகின்றன. நல்ல சான்ஸ் கிடைத்தும் கூட, எதுவும் செய்யாமல் ஓபிஎஸ் துணை எதிர்கட்சித் தலைவர் பதவி போதும் என்று ஒதுங்கிவிட்டதாக கூறுகிறார்கள்.

    மோதல்

    மோதல்

    ஓபிஎஸ் அமைதியாக எதிர்கட்சித் துணை தலைவர் பதவிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். சசிகலா உடன் இணைந்து இபிஎஸ்ஸுக்கு எதிராக காய் நகர்த்துவார் என்று ஓபிஎஸ் குறித்து பேசப்பட்ட நிலையில், அவர் இப்படி திடீரென ஒதுங்குவது ஏன் என்ற கேள்வி எழுப்பி உள்ளது. சசிகலா மீண்டும் வருவதற்கு இபிஎஸ்ஸே இருக்கலாம் என்று ஓபிஎஸ் முடிவு எடுத்துவிட்டாரோ என்று கேள்விகளை இது எழுப்பி உள்ளது.

    மேலிடம்

    மேலிடம்

    இல்லை வேறு விதமான விஷயங்களை மனதில் வைத்து தற்போது அமைதியாக இருக்கிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் அதிகாரம் என்று வந்துவிட்டால் தொடர்ந்து ஓபிஎஸ்ஸுக்கு நம்பர் 2 பதவிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது மீண்டும் துணை எதிர்கட்சித் தலைவர் என்ற நம்பர் 2 பதவியை ஏற்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Why OPS is ready to take the Deputy opponent leader post amid rift with EPS in AIADMK party?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X