சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரையும் பணம்.. கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்துறீங்களா? அதிர்ச்சி ஆய்வு.. இதை படிங்க

Google Oneindia Tamil News

சென்னை: யுபிஐ பேமெண்ட் மூலம் பணம் செலுத்தும் நபர்கள் குறித்த சுவாரசிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

இப்போதெல்லாம் நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் அதிகம் ஆகிவிட்டது. முக்கியமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவது அதிகம் ஆகிவிட்டது.

சாதாரணமாக டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை பின்பற்றுகிறார்கள்.

யுபிஐ-123 பே..பட்டன் போன்களில் பணப்பரிமாற்றம் - இன்டர்நெட் வசதி தேவையில்லை யுபிஐ-123 பே..பட்டன் போன்களில் பணப்பரிமாற்றம் - இன்டர்நெட் வசதி தேவையில்லை

யுபிஐ

யுபிஐ

இதன் காரணமாக நேர விரயம் குறைகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் சார்ஜ் இல்லை. அதோடு உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. கையில் எப்போதும் பணத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் யுபிஐ பேமெண்ட் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது.

பேமெண்ட்

பேமெண்ட்

இந்த நிலையில்தான் யுபிஐ பேமெண்ட் மூலம் பணம் செலுத்தும் நபர்கள் குறித்த சுவாரசிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. வாஷிங்டனில் இருக்கும் University of Puget Sound மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 21,457 பேரிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. யுபிஐ மூலம் அவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள் என்று இந்த ஆய்வில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

ஆய்வு

ஆய்வு

அதன்படி 21,457 பேரில் 37 சதவிகிதம் பேர் தாங்கள் அடிக்கடி யுபிஐ பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். மீதம் உள்ள 63 சதவிகிதம் பேர் எப்போதாவது யுபிஐ பயன்படுத்துவோம் அல்லது யுபிஐ பயன்படுத்தவே மாட்டோம் என்று தெரிவித்து உள்ளனர். இந்த 37 சதவிகிதான் பேர்தான் அதிக அளவில் பணம் செலவு செய்வதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

என்ன சொல்கிறது

என்ன சொல்கிறது

யுபிஐ பயன்படுத்தாத நபர்களை விட இவர்கள் 34 சதவிகிதம் அதிகம் செலவு செய்வதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களின் அத்தியவாசிய தேவைகளில் துண்டு விழுவதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யுபிஐ நபர்கள் மிக அதிக அளவில், கூடுதல் செலவுகளை தேவையின்றி செய்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவர்களால் பணத்தை சரிவர நிர்வகிக்க முடியவில்லை. இவர்களின் வங்கி கணக்கில் பணம் வேகமாக கரைகிறது.

 சரியாக பயன்படுத்த முடியாது

சரியாக பயன்படுத்த முடியாது

பணத்தை சரியாக பயன்படுத்த முடியவில்லை என்ற புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. யுபிஐ வைத்து இருப்பவர்கள் இப்படி அதிக பணம் செல்வது செய்வதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனாலும் பணம் செலுத்தும் போது ஏற்படும் அந்த உணர்வு யுபிஐ மூலம் வருவது இல்லை. தாங்கள் செலவு செய்கிறோம் என்ற எண்ணம் வரவில்லை. இதனால் மக்கள் அதிக அளவில் யுபிஐ மூலம் செலவு செய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

English summary
Why Phonepe, Google pay like UPI apps users spending more money than others? What research says? யுபிஐ பேமெண்ட் மூலம் பணம் செலுத்தும் நபர்கள் குறித்த சுவாரசிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X