அறிவே இல்லாதவன்! வார்த்தையை விட்ட பெண்.. கண்ணசைத்த அன்புமணி.. மைக்கை பிடுங்கிய மூர்த்தி.. ஒரே கூத்து
சென்னை: செங்கல்பட்டில் பாமக கூட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
செங்கல்பட்டு அருகே தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செங்கல்பட்டு மத்திய மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் ஜிகே மணி மற்றும் முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

செல்வி கிருஷ்ணமூர்த்தி
நிர்வாகிகள் பலர் மேடையில் அமர்ந்து இருந்தனர். அப்போது மாவட்ட பொருளாளர் செல்வி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசுவதற்காக மைக் கொடுக்கப்பட்டது. செல்வி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்.. நிறைய பேர் இங்கே வந்து இருக்கிறார்கள். எதிர்பார்க்கவே இல்லை. இவ்வளவு கூட்டத்தை பார்க்கும் போது செம மகிழ்ச்சியாக இருக்கிறது. செம ஜாலியாக இருக்கிறது.

முதல்வராக வேண்டும்
நம்ம சின்ன ஐயாவை முதல்வராக்க வேண்டும். அந்த சந்தோசத்தை அவருக்கு கொடுக்க வேண்டும். நாம் இதற்காக உழைக்க வேண்டும். நம்ம சின்ன ஐயாவை அழகிலோ, அறிவிலோ அடித்துக்கொள்ள முடியாதவர் முதல்வராக இருக்கிறார். அவரை முதல்வராக்க நாம் தவம் இருக்க வேண்டும். தமிழ்நாடே பெருமை கொள்ளும் வகையில் அவர் முதல்வராக இருப்பார்.

அறிவே இல்லை
அறிவே இல்லாதவர் முதல்வர்.. என்று கூறிய செல்வி கிருஷ்ணமூர்த்தி, அதன்பின் முதல்வர் ஸ்டாலின் பற்றி சில கடுமையான விமர்சனங்களை வைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும் விமர்சனங்களை வைத்தார். செல்வி கிருஷ்ணமூர்த்தி ஆரவாரமாக மேடையில் பேச.. அன்புமணி நெளிய ஆரம்பித்தார். இவர் என்ன இப்படி பேசுகிறாரே என்பது போல நெளிந்தார். மற்ற பாமக நிர்வாகிகள் சிலரும் என்னங்க பேசுறாங்க மைக்க வாங்குங்க என்று சைகை செய்தனர்.

அன்புமணி சிக்னல்
இதனால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. அன்புமணி சைலண்ட்டாக கண்ணடிக்க ஏகே மூர்த்தி ஓடி வந்து மைக்கை புடுங்க வந்தார். பேசியது போதும் என்று அமைதியாக அந்த பெண்ணிடம் கூறினார். உடனே பெண் சுதாரித்து நன்றி என்று கூறி கொண்டு அங்கிருந்து கிளம்பினார். மேடையில் அரங்கேறிய இந்த சம்பவம் அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications