ட்விஸ்ட்.. "சாமி"யையே வெலவெலக்க வைத்த பாஜக.. தனித்து போட்டியா?.. என்ன நடக்கிறது புதுச்சேரியில்?
புதுச்சேரியில் பாஜக தனித்து போட்டியிடுகிறது
சென்னை: அடுத்த லெவலுக்கு முன்னேறி வருகிறது பாஜக..!புதுச்சேரி பாஜகதான் தற்போதைய அரசியல் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது..
புதுச்சேரியை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. ஆட்சி ஆரம்பித்ததில் இருந்தே இரு தரப்பிலும் அதிருப்திகள் உள்ளன.. பிரச்சனைகள் உள்ளன..
தொகுதிப் பங்கீடு, நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் உட்பட பல விஷயங்களில் இந்த பாஜகவுக்கும் ரங்கசாமிக்கும் பூசல்கள் உள்ளன.. இந்த பிரச்சனையால், மக்களை சரியாக கவனிக்க முடியாத சூழலும் உள்ளது..

டெல்லி
ஆட்சியில் அமர்ந்து இத்தனை மாத காலமாகியும் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.. டெல்லிக்கு சென்று நிதியை பெற்று வாருங்கள் என்று வலியுறுத்தல்கள் உள்ளன.. ஆனாலும், ரங்கசாமி தொற்றை காரணம் காட்டி, டெல்லி செல்ல தயக்கம் காட்டி வந்ததாகவே கூறப்பட்டது.. அப்படிப்பட்ட சூழலில்தான் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தார் ரங்கசாமி. விஜய்யுடன் சந்தித்தபோது மட்டும், தொற்று பரவல் இல்லாமல் போய்விட்டதா? என்று ரங்கசாமியை கேள்விகளாலும் துளைத்தெடுத்தனர்.

வாய்ப்பில்லை
அப்படியானால் ரங்கசாமி பாஜகவை கழட்டி விடப்போகிறாரா? என்ற சந்தேகங்கள் எழுந்தன. ரங்கசாமியை பொறுத்தவரை, அரசியலில் மூத்த தலைவர்.. அன்று 2011-ல் ஜெயலலிதாவையே அசைத்து பார்த்தவர்.. அவருக்கே ஒரு ஜெர்க் தந்தவர்.. அதேசமயம், யாருக்கும் கட்டுப்படாதவர்.. இதுபோன்ற கூட்டணி ஆட்சி அமைப்பதில் அவருக்கு உடன்பாடு இருக்க வாய்ப்பே இல்லை.. தனக்கு ஆதரவான கட்சிகளை வைத்து, ஆட்சியை நடத்துவாரே தவிர, பலம்பொருந்திய கட்சியுடன் கூட்டணி வைத்து, அவர்களுடன் மல்லுக்கட்ட ரங்கசாமி என்றுமே விரும்ப மாட்டார்..

பிளான்
பாஜகவுடன் இணக்கமான போக்கை கையாள முடியாமல் போவதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்... எனவே, விஜய்யை வைத்து பாஜகவை கழட்டிவிட பிளான் செய்கிறாரா ரங்கசாமி என்ற சந்தேகமும் புதுச்சேரியில் எழுந்தது.. பாஜகவுக்கு 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர்.. 6 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர்.. ஒருவேளை விஜய்யை கட்சி ஆரம்பிக்க செய்து, சுயேச்சைகளை உள்ளே நியமித்து, பாஜகவை கழட்டிவிட பிளான் இருக்கலாம் என்றார்கள் அரசியல் நோக்கர்கள்..

புதுச்சேரி
ஆனால், இது அவ்வளவு சாத்தியமா? பாஜக லேசில் விட்டுவிடுமா? என்பதெல்லாம் தெரியவில்லை.. இந்நிலையில், ரங்கசாமியை பாஜக கழட்டிவிட்டுள்ளது.. காரணம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.. இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டு, பாஜக தனித்து களம் காண போவதாக செய்திகள் அடிபடுகின்றன..

பச்சைக்கொடி
இந்த முடிவை புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் சேர்ந்து எடுத்ததாகவும், இவர்களின் முடிவுக்கு பாஜக மேலிடம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் சுரானா தெரிவித்துள்ளார்.. எனவே, மறுபடியும் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு நடக்க போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன் இதற்கு விளக்கம் தந்துள்ளார்..

விளக்கம்
பாஜக நன்றாகவே வளர்ச்சியடைந்துள்ளது... அதனால்தான் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளோம்... அதே நேரத்தில் 5 வருடங்கள் கூட்டணி ஆட்சி நிச்சயம் தொடரும். உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே கூட்டணி பொருந்தாது என்று விளக்கமளித்துள்ளார்...எப்படி இங்கு அதிமுகவில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டதோ, அதுபோலவே புதுச்சேரியிலும் பாஜகபோட்டியிட தயாராகி உள்ளது..!












Click it and Unblock the Notifications