"ஆபத்து.." உலகில் இருக்கவே கூடாத நாய் இனம் "இதுதான்.." சர்வதேச ஆய்வாளர்கள் கடும் எச்சரிக்கை!
சென்னை: சமீப காலங்களாகவே நாய்க் கடி சிக்கல் தொடர்பான செய்திகளை நாம் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறோம். நாய்க் கடி பிரச்சினை காரணமாகக் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். இதைத் தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது ஒரு பக்கம் இருக்க.. இந்த உலகிலேயே இருக்கவே கூடாத நாய் என ஒரு இனம் இருக்கிறது தெரியுமா.. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
சில ஆண்டுகளாகவே, குறிப்பாகக் கொரோனாவுக்குப் பிறகு நாய்க்கடி பிரச்சினை பெரிதாக வெடித்துவிட்டது. கொரோனா காலகட்டத்தில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நிர்வாகம் தவறியதாலேயே நாய்கள் அதிகரித்துவிட்டன. இப்போது நாய்கள் அதிகரித்துவிட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இருக்கவே கூடாத நாய்
இது ஒரு பக்கம் இருக்க.. வீடுகளில் நாய்களை வளர்ப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவீன வாழ்க்கையில் தனிமை உள்ளிட்ட காரணங்களால் பலரும் நாய்களை வளர்த்து வருகிறார்கள். ஆனாலும், அப்படி நாம் வீடுகளில் வளர்க்கும் ஒரு வகை நாய், உலகில் இருக்க இருக்கவே கூடாது என வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
"உலகத்தில் இருக்கவே கூடாத நாய்" என்று வல்லுநர்கள் சொல்லும் நாய் என்றால், அது பக் (Pug) தான். வோடபோன் விளம்பரங்களில் வந்து நம்மை சிரிக்க வைத்த இந்த நாயைத் தான் பலரும் இருக்கவே கூடாத நாய் என்கிறார்கள். ராட்வீலர், பிட்புல் தான் ஆக்ரோஷமாக இருக்கும்.. பக் கடிக்கக் கூடச் செய்யாது.. இது இருக்கவே கூடாத நாயா என நீங்கள் கேட்கலாம்.. அதற்கான காரணத்தை நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பக் நாய்கள்
இந்த பக் வகை நாயை மிகவும் "பாவப்பட்ட நாய் இனம்" என்று கூடச் சொல்கிறார்கள். அதற்குக் காரணம் இதனுடைய தோற்றம் தான்.. பக் இன நாய்கள் இதுபோல குட்டியாகவும் க்யூட்டாகவும் வேண்டும் என்பதற்காக மனிதர்கள் பல நூறு ஆண்டுகளாக இதை selective breeding செய்தனர். அதுவே அதன் பிரச்சினையாகவும் மாறிவிட்டது.
18ம் நூற்றாண்டிலேயே பக் இன நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளன. வில்லியம் ஹாகர்ட்டின் புகழ்பெற்ற தி பெயிண்டர் அண்ட் ஹிஸ் பக் என்ற ஓவியத்தில் கூட அந்த வகை நாய் இருக்கும். ஆனால், இது இப்போது இருக்கும் பக் போல இருக்காது. நார்மலான நாய் சைஸில் தான் இருக்கும். அடுத்து 19ம் நூற்றாண்டில் ராணி விக்டோரியா வளர்த்த பக் நாய்களின் போட்டோவிலும் அதன் முகம் மற்ற நாய் இனங்களைப் போல நீண்டு தான் இருக்கும்.
காரணம்
அதாவது அந்தக் காலகட்டத்தில் மற்ற நாய்களைப் போலவே பக் வகை நாய்களுக்கும் நீளமான மூக்கு, உயரம், தெளிவான முக அமைப்புடன் இருந்தது. இதனால் அவை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால், நமக்கு க்யூட்டாக குட்டியான நாய் இனம் வேண்டும் என்பதால் அதன் இயற்கையான உடலமைப்பையே மாற்றும் வகையில் மனிதர்கள் பிரீடிங் செய்தனர்.
இதன் காரணமாக இப்போது அந்த பக் நாய்களின் முகம் சுருங்கிவிட்டது. மேலும், சப்பையான மூக்கு, முகத்தின் அளவோடு ஒப்பிடுகையில் கண்கள் பெரிதாக இருக்கிறது. உடல் அமைப்பும் கூட குறுகிவிட்டது. இப்படி உடலமைப்பு மாறிவிட்டதால்.. நாய்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாகச் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறது. கொஞ்ச நேரம் விளையாடினாலோ அல்லது ஓடினாலோ கூட பக் இன நாய்களுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும்.
உடல்நிலை பிரச்சினைகள்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பக் நாய்கள் ஒரு காலத்தில் மற்ற நாய் இனங்களைப் போலவே நீண்ட மூக்குடனும், இயற்கையான உடல் அமைப்புடனும் ஆரோக்கியமாகவே இருந்தன. ஆனால் இன்று அதன் முகம் சுருங்கி, மூக்கு அழுத்தப்பட்டு, காட்சியளிக்கிறது. இந்த மாற்றம்தான் பக்களின் பரிதாப நிலைக்குக் காரணம். மேலும், தோல்களில் அதிக மடிப்பு இருப்பதால் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.. மேலும், இந்த உடலமைப்பால் வெப்பம் சீக்கிரமே அதிகரிக்கும். இதனால் ஹீட் ஸ்ட்ரோக் வரவும் கூட வாய்ப்பு இருக்கிறது.
இப்படி மனிதர்களின் ஆசையாலும் தலையீட்டால் ஏகப்பட்ட மாற்றத்தை எதிர்கொண்ட இன்று மிக மோசமான நிலையில் பக் நாய்கள் இருக்கிறது. அது சந்திக்கும் உடல்நிலை பாதிப்புகள் மோசமாக இருப்பதாலேயே அதைப் பாவப்பட்ட நாய் என்றும் இருக்கவே கூடாத நாய் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications