திமுக, அதிமுக கோட்டையில்.. கால் வைக்கும் மோடி! ஆனா தமிழ்நாடு பக்கமே வராத ராகுல் காந்தி! என்ன ஆச்சு?
சென்னை: தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடுத்தடுத்து விசிட் அடித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்கள் இன்னும் தமிழ்நாட்டிற்கு வராதது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மெதுவாகத்தான் செயல்பட்டு வருகிறது. உதாரணமாக அமுக எல்லாம் வேட்பாளர்களை அறிவித்த பின்தான் கோஷ்டி மோதல் நிறைந்த காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அதிலும் முதலில் தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைத்தான் காங்கிரஸ் முதலில் வெளியிட்டது. திருவள்ளூர் தனி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியாது.
கடலூர் தொகுதியில் டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்பி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இரவோடு இரவாக அறிவிப்பு; இதையடுத்து மறுநாளே நெல்லை தொகுதியில் ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டாக்டர் தாரகை வேட்பாளராக அறிவிப்பு வெளியானது.
மயிலாடுதுறை ஏன் தாமதம்: மயிலாடுதுறை மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வேட்புமனு முடியும் நாளுக்கு முதல் நாள் பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர் சுதா என்பவர் அறிவிக்கப்பட்டு அவர் மறுநாளே அவசரமாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
மெத்தனம்; இப்படி வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கடுமையாக மெத்தனம் காட்டி வந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்திலும் சொதப்பி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடுத்தடுத்து விசிட் அடித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்கள் இன்னும் தமிழ்நாட்டிற்கு வராதது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் 2 வாரமே இருக்கிறது. அப்படி இருக்க ராகுல் காந்தி இந்நேரம் தமிழ்நாட்டில் 1 பொதுக்கூட்டமாவது நடத்தி இருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 1 மாதத்தில் ஒரு முறை கூட ராகுல் காந்தி தமிழ்நாடு வரவில்லை. சோனியா காந்தியும் வரவில்லை. ஆனால் மோடி அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு விசிட் அடித்துக்கொண்டே இருக்கிறார். உதாரணமாக தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி ஏப்., 9ம் தேதி தமிழகம் வருகை புரிகிறார். திமுக, அதிமுகவின் கோட்டயான தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற வைக்க மோடி தீவிரமாக முயன்று வருகிறார்.
தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார். இவர்களின் அறிமுக கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். பல கூட்டங்களில் அவர் இங்கே பேச உள்ளார். முக்கியமாக சென்னை பாண்டி பஜார் பகுதியில் வாகன பேரணியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
ஏற்கனவே தேர்தல் அறிவிப்பிற்கு முன் 5 முறை அவர் தமிழ்நாடு வந்தார். கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே மோடி கூட்டங்களில் கலந்து கொண்டார் .
உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வரும் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. .தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடுத்தடுத்து விசிட் அடித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்கள் இன்னும் தமிழ்நாட்டிற்கு வராதது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications