யாரும் பசியோடு இருக்க கூடாது! 2 வாரம்தான் டைம்.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு உத்தரவு! நெருங்கிய நேரம்
சென்னை: நாடு முழுக்க ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கும், அரசுகளுக்கும் முக்கியமான உத்தரவு
ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுக்க கேஒய்சி சரிபார்ப்பு நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நாடு முழுக்க உள்ள ரேஷன் கார்டு தொடர்பான முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய அரசு விடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரேஷன் கார்டுகள் தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுத்த கூடாது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பொறுமை இழந்துவிட்டதாக நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கூறியது.

நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா இந்த விவகாரத்தின் அவசரத்தை வலியுறுத்தி பேசுகையில், "பசியால் யாரும் காத்திருக்க கூடாது" என்று கூறினார். மேலும் ரேஷன் கார்டுகளை இன்னும் பெறாத தகுதியான நபர்களின் அடையாளத்தை விவரமாக பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் வேறு வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க இ-ஷ்ரம் போர்ட்டல் உள்ளது. இதில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் பல மாநிலங்கள் இந்த போர்ட்டலில் பதிவு செய்தவர்களுக்கும் ரேஷன் கார்டுகளை வழங்குவது இல்லை.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சரிபார்ப்பை முடித்த மாநிலங்களுக்கு உணவு தானியங்களை வழங்கவும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. காலதாமதம் "துரதிர்ஷ்டவசமானது" என்று கூறிய நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குறிப்பிட்ட காலத்திற்குள் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட செயலர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று கூறியது.
இதற்கு அக்டோபர் 31 வரை மட்டுமே டைம். இதை நீட்டிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் திட்டத்தில் இருக்கும் தகுதியற்றவர்கள் பெயர்கள் நீக்கப்பட உள்ளனர். இதற்கான சோதனைகள் நடந்து உள்ளன. இதற்கான ஆவணங்களை சோதனை செய்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த மாதம் வரை டைம்: இந்த மாத இறுதி வரை டைம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காலக்கெடு: பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கண்டித்து உள்ளது. நான்கு வாரங்களுக்குள் இந்த பணிகளை முடிக்க உத்தரவிட்டு உள்ளது. ஏன் நான்கு மாதங்களில் சரிபார்ப்பை முடிக்க முடியவில்லை. இது மிகவும் அதிகம். நான்கு மாதங்களுக்குப் பிறகும் நீங்கள் அதைச் செய்கிறீர்கள், மேலும் இரண்டு மாதங்கள் தேவை என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உள்ளது. முழு சரிபார்ப்பையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நாங்கள் இதன் மூலம் அறிவுறுத்துகிறோம்... கூடுதல் நேரம் கேட்க கூடாது., என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால் இந்த மாதமே பல லட்சம் பிற மாநில தொழிலாளர்களுக்கு தேவையான ரேஷன் கார்டுகள், ரேஷன் கார்டு வழியாக வழங்கப்படும் உணவுகள் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications