சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர்களுக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாது என்று முந்தைய திமுக ஆட்சியில் கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதிக்கு இடம் மறுக்கப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

Recommended Video

    சேலம்: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுத்தது ஏன்? உண்மையை சொன்ன முதல்வர் எடப்பாடி!

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணா நினைவிடத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த போது, வேறு இடத்தை தந்தார் முதல்வர். ஆனால் ஏற்க மறுதத ஸ்டாலின், உடனடியாக உயர்நீதிமன்றத்தை நாடி மெரினாவில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய இடம் பெற்றார்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

    இதுபற்றி பல்வேறு பிரச்சாரங்களில் பேசும் போது குறிப்பிட்டு வரும் திமுக தலைவர் முக ஸ்டாலின், என் தந்தை கலைஞருக்கு ஆறு அடி இடம் தர மறுததவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறி வந்தார்.

    ஜானகி அம்மாள்

    ஜானகி அம்மாள்

    இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உள்பட்ட வனவாசியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கருணாநிதி, மறைந்த முதலமைச்சர்களுக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது என்றார்,

    இடம் தரவில்லை

    இடம் தரவில்லை

    அத்துடன் ராமாவரம் தோட்டத்தில் அவருக்கு இடம் இருப்பதால் அங்கேயே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கோப்புகளின் வாயிலாக தெரிவித்தார். முதலமைச்சர் அதேபோல மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்த பொழுது மெரினாவில் அவரை அடக்கம் செய்ய முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். அதற்கும் கருணாநிதி, காமராஜர் தற்போது முதலமைச்சராக இல்லை, ஆகவே, முன்னாள் முதலமைச்சருக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாது என தெரிவித்தார்

    வழிவகை இல்லை

    வழிவகை இல்லை

    அந்த அடிப்படையில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க வழிவகை இல்லை என்று, தான் தெரிவித்தேன். அதேநேரம் கருணாநிதியை அடக்கம் செய்ய, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு எதிரே கொடுத்தேன். ஆனால் அதை பெற மறுத்து ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு சென்றதாகவும், நீதிமன்றத்தின் ஆணைப்படி மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளித்தோம்/

    நானும் அதே முடிவெடுத்தேன்

    நானும் அதே முடிவெடுத்தேன்

    கருணாநிதி முதல்வராக இருந்தபோது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மனைவி ஜானகி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோர் இறப்பின்போது என்ன முடிவு எடுத்தாரோ, அந்த முடிவை தான், நானும் பின்பற்றினேன். உண்மை இப்படி இருக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தமது தந்தைக்கு ஆறடி நிலம் கூட கொடுக்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறி பிரசாரம் செய்து வருகிறார்" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    English summary
    The previous DMK regime had said that the late former chief ministers could not be a place in the marina. Chief Minister Edappadi Palanisamy explained that Karunanidhi was denied a place to bury him in the marina on that basis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X