சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த பக்கம் ஸ்டாலினுக்கு திட்டு.. அந்த பக்கம் முதல்வருடன் சந்திப்பு.. சரத்துக்கு சீட் கிடைச்சிருமா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சரத்குமார் சந்தித்து பேச காரணம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர் சங்கத்தின் உறுப்பினராக கூட நான் இல்லை.. நடிகர் சரத்குமார் பேட்டி

    சென்னை: ஒரே நாளில் திமுக தலைவர் ஸ்டாலினையும் திட்டிவிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து விட்டு வந்துள்ளார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!!

    அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இதுவரை தன்னை எந்தக் கட்சியும் கூட்டணி குறித்துப் பேச அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுக அழைத்தால் அதனுடன் கூட்டணி சேரவும் அவர் தயாராக இருக்கலாம் எனத் தெரிகிறது.

    போன தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டது சமக. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, ஜெயலலிதா இவரை கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டார். பொறுத்து பொறுத்து பார்த்த சரத்குமார், அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.

    கறிவேப்பிலையா?

    கறிவேப்பிலையா?

    பிறகு மனசில் புழுங்கி கிடந்த எல்லா குறைகளையும் செய்தியாளர்களிடம் கொட்டி தீர்த்தார். சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 9 முறை அந்த இயக்கத்துக்காக நான் பிரசாரம் செய்து இருக்கிறேன். அதற்கு இந்த சரத்குமார் பயன்பட்டான். சாப்பாட்டில் போடக்கூடிய கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்தினர். அதை புரிவதற்கு எனக்கு காலதாமதம் ஆகிவிட்டது" என்று கதறிகொண்டு போனவர்தான், அதற்கு பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

    மக்கள் போராட்டங்கள்

    மக்கள் போராட்டங்கள்

    அது மட்டும் இல்லை, கட்சி இத்தனை வருடங்களில் சமத்துவ மக்கள் கட்சியின் செயல்பாடுகள் என்ன, பயன்பாடுகள் என்ன, வளர்ச்சி திட்டங்கள் என்ன, எத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டது, எத்தனை மக்கள் பிரச்சனைகளை இதுவரை கையாண்டது என்றே தெரியவில்லை.

    பட்டாசு விவகாரம்

    பட்டாசு விவகாரம்

    இப்போது திடீரென்று செய்தியாளர்கள் சந்திப்பு என்று ஆரம்பித்திருக்கிறார் சரத்குமார். நேற்று திடீரென முதல்வரை வந்து சந்தித்து விட்டு போனார். எதற்காக இந்த சந்திப்பு என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கஜா புயல் விவகாரம், பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினை பேசினேன் என்றார்.

    ஸ்டாலினுக்கு திட்டு

    ஸ்டாலினுக்கு திட்டு

    கஜா புயல் போய் 40 நாள் கழித்து டெல்டா மாவட்ட மக்களுக்காக பேசுவதாக சொல்வதை கூட ஒருவகையில் ஏற்றுக் கொண்டாலும், திடீரென ஸ்டாலினை திட்ட ஆரம்பித்துவிட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை.

    ஒதுங்கி இருக்கேன்

    ஒதுங்கி இருக்கேன்

    "திமுகவை எனக்குப் பிடிக்கவில்லை. பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று ஸ்டாலின் சொல்கிறாரே, கருணாநிதியை வந்து பார்த்தபோது மட்டும் மோடி அன்பானவராகத் தெரிந்தாரா? வார்த்தைகளை எப்போதுமே அளந்து பேச வேண்டும். நான் எப்போதுமே நாகரீக அரசியலை விரும்புபவன், நாகரீகத்துக்கு புறம்பாக இருப்பதால், நாளை என்னைக் கூட திட்டலாம் என்பதால் ஒதுங்கியிருப்பதே நல்லது" என்று தெரிவித்துள்ளார்.

    மீண்டும் அதிமுக?

    மீண்டும் அதிமுக?

    கஜாவை விடுங்க, கூட்டணி திமுகவுடன் இல்லை என்பதும், அதிமுகவுக்குள் மீண்டும் சரத்குமார் நுழைய முயற்சி இது என்றும் எடுத்து கொள்வதா என தெரியவில்லையே???

    English summary
    Why Sarathkumar met CM Edappadi Palanisamy? Will he join again in AIADMK?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X