பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் மாலை 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளது. 80% வரை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வாக்குப்பதிவு சரிந்துள்ளது.

நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று தேர்தல் நடந்தது.

Why Tamil Nadu did not record bigger voter percentage in Lok Sabha Elections 2024

மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு (39), அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என இன்று வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் மாலை 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளது. 80% வரை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வாக்குப்பதிவு சரிந்துள்ளது. காலையிலேயே 11 மணிக்கு பல இடங்களில் 30 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியும் கூட மாலை வரை 60-70 வரை மட்டுமே வாக்குகள் சராசரியாக பதிவாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி 75.67%;தருமபுரி 75.44%; சிதம்பரம் 74.87%; பெரம்பலூர் 74.46%; நாமக்கல் 74.29%; கரூர்- 74.05%; அரக்கோணம் 73.92%; ஆரணி 73.77%; சேலம் 73.55%; விழுப்புரம் 73.49%; திருவண்ணாமலை 73.35% வாக்குப்பதிவு நடந்தது.

வேலூர் 73.04%; காஞ்சிபுரம் 72.99%; கிருஷ்ணகிரி 72.96%; கடலூர் 72.40%; விருதுநகர் 72.29%; பொள்ளாச்சி 72.22%; நாகப்பட்டினம் 72.21%; திருப்பூர் 72.02%; திருவள்ளூர்- 71.87%; தேனி 71.74%; மயிலாடுதுறை 71.45%; ஈரோடு 71.42%; திண்டுக்கல் 71.37%; திருச்சி 71.20%; கோவை 71.17%; நீலகிரி 71.07%; தென்காசி 71.06%; வாக்குப்பதிவு நடந்தது

சிவகங்கை 71.05%; ராமநாதபுரம் 71.05% ; தூத்துக்குடி 70.93%; நெல்லை 70.46%; கன்னியாகுமரி 70.15%; தஞ்சாவூர் 69.82%; ஸ்ரீபெரும்புதூர் 69.79%; வடசென்னை 69.26%; மதுரை 68.98%; தென்சென்னை 67.82%; மத்திய சென்னை 67.35% வாக்குப்பதிவு நடந்தது.

5 காரணங்கள்: தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு மந்தமாக பின் வரும் 5 காரணங்கள் உள்ளன.

1. கடுமையான வெயில் காரணமாக பிற்பகலில் மக்கள் பலரும் வாக்களிக்க வரவே இல்லை.

2. விடுமுறை + மே விடுமுறை என்பதால் பலர் குடும்பத்தினர் சுற்றுலா சென்றுவிட்டனர். தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை.

3. தமிழ்நாடு ஏனோ இந்த முறை லோக்சபா தேர்தல் என்பதால் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் பிரச்சாரமே மந்தமாகத்தான் இருந்தது.

4. தேர்தல் ஆணையம் இன்னும் விழிப்புணர்வு பணிகளில் அதிகம் ஈடுபட்டு இருக்கலாம்.

5. பல இடங்களில் திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் பெரிதாக பூத் கமிட்டி போட்டு மாற்று கட்சியினரை வாக்களிக்க ஊக்குவிக்கவில்லை .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+