மசூருக்கு மாற்று.. ரேஷனில் கனடியன் மஞ்சள் பருப்பு வழங்குவது ஏன்? அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ரேஷனில் பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலை கொண்ட மசூர் பருப்பை வழங்காமல், அதிக விலை கொண்ட கனடியன் மஞ்சள் நிற பருப்பை கொள்முதல் செய்து வழங்குவது ஏன்? என 2 வாரங்களில் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத்திய - மாநில அரசு பங்களிப்பில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணை, துவரம் பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. கடைகளில் வாங்குவதை விட ரேஷனில் இந்த பொருட்களின் விலை மிகவும் குறைவாக உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் இதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் ரேஷனில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சிவப்பு நிறம் கொண்ட மசூர் பருப்பை வழங்க மத்திய உணவுத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் பொது விநியோக திட்டத்துக்கான இ-டெண்டரில் மசூர் பருப்பை சேர்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இததொரடர்பாக மசூர் பருப்பு மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‛‛மசூர் பருப்பை போல கேசரி பருப்பும் இருப்பதால் மசூர் பருப்பில் கலப்படம் செய்ய வாய்ப்பு இருப்பதாகக்கூறி மசூர் பருப்பை கொள்முதல் செய்யும் அறிவிப்பாணையை தமிழக அரசு கடந்த 2007ம் ஆண்டு திரும்பப்பெற்றது. பின்னர் மசூர் பருப்பின் சத்துக்களை கருத்தில் கொண்டு மீண்டும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கொள்முதல் பட்டியலில் மசூர் பருப்பு சேர்க்கப்பட்டது. ஆனால் கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு பிறப்பித்துள்ள இ-டெண்டர் அறிவிப்பில் மீண்டும் மசூர் பருப்பு இடம்பெறவில்லை.
இதுதொடர்பான வழக்கில் தமிழக அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு ஏற்கவில்லை. இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கனடியன் மஞ்சள் கலர் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய கடந்த மே மாதம் 27ம் தேதியன்று தமிழக அரசு டெண்டர் கோரியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கடந்த ஜூன் 13ல் கனடியன் மஞ்சள் நிற பருப்பை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு டெண்டர் வழங்கியுள்ளது.
மசூர் பருப்பைக் காட்டிலும் கனடியன் மஞ்சள் நிற பருப்பு விலை அதிகமானது. எனவே, ரேஷன்கடைகளில் முன்பு போல மசூர் பருப்பை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். கனடியன் மஞ்சள் நிற பருப்பை கொள்முதல் செய்ய தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர் மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "மசூர் பருப்பை விட துவரம் பருப்பையே பொதுமக்கள் அதிகமாக விரும்புகின்றனர். அதனால்தான் பொது விநியோக திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் மசூர் பருப்பை டெண்டரில் சேர்க்கவில்லை.அதேசமயம் மசூர் பருப்புக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் மசூர் பருப்பு கொள்முதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும்" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலை கொண்ட மசூர் பருப்பை வழங்காமல், அதிக விலை கொண்ட கனடியன் மஞ்சள் நிற பருப்பு எந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்தது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி! கடுமையாக வாதம் வைத்த போலீஸ்.. மனுதாரர் ட்விஸ்ட்! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications