அரிகொம்பன் யானை - பொய் வீடியோவை வெளியிட்டு டெலிட் செய்த தமிழ்நாடு வனத்துறை அதிகாரியால் சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரிகொம்பன் யானை புல்தரையில் படுத்து உறங்குவதாக வெளியிட்ட வீடியோ வேறு யானை தொடர்பானது என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியதால் அந்த வீடியோவை நீக்கி இருக்கிறார் தமிழ்நாடு வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு.

கேரளாவில் 10 பேரை மிதித்து கொன்றதால் அரிகொம்பன் யானை பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் கொண்டுவந்துவிடப்பட்டது. அங்கிருந்து இடம்பெயர்ந்த அரிகொம்பன், தமிழ்நாட்டின் கம்பம் பகுதிக்குள் நுழைந்தது. கம்பம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 1 வாரம் முகாமிட்டிருந்தது அரிகொம்பன் யானை. இதனால் கம்பம் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுருளி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யானை, களக்காடு அகத்தியர் மலை யானைகள் வனப்பகுதியில் கொண்டு போய்விடப்பட்டது. இந்த யானையின் நடமாட்டம் குறித்து தமிழ்நாடு வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு ஐஏஎஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பகிரப்பட்டது.

Why Tamilnadu Forest Officer remove Video of Arikomban?

இந்நிலையில் நேற்று அரிகொம்பன் உறங்கும் வீடியோ என தலைப்பிட்டு சுப்ரியா சாகு ஒரு வீடியோ வெளியிட்டார். நாமும் இந்த வீடியோவை வைத்து செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பழையது- அரிகொம்பன் யானை தொடர்பானது அல்ல என ஆதாரங்களுடன் நெட்டிசன்கள் வெளியிட்டனர். இதனால் அரிகொம்பன் உறங்குவதாக வெளியிட்ட ட்விட்டர் பதிவையே சுப்ரியா சாகு டெலிட் செய்துவிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அரிகொம்பன் யானை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. அரிகொம்பன் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது எனில் பழைய வீடியோவை ஏன் வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு வெளியிட வேண்டும் என்பது நெட்டிசன்கள் கேள்வி. அப்படியானால் அரிகொம்பன் யானை, தமிழ்நாடு வனத்துறை கண்காணிப்பில் இல்லாமல் எங்கே போனது என்பது இன்னொரு கேள்வி என்கின்றனர் நெட்டிசன்கள். இதனால் அரிகொம்பன் தொடர்பான குழப்பம் நீடிக்கிறது. தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள்தான் அரிகொம்பன் குறித்த உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+