சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஜித்தை மீட்க ஏன் ராணுவம் அழைக்கப்படவில்லை?.. ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் அதிரடி பதிலடி!

குழந்தை சுஜித் மீட்பு பணியில் ஏன் ராணுவத்தை பயன்படுத்தவில்லை என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுஜித்தை மீட்க ஏன் ராணுவம் அழைக்கப்படவில்லை? - முதல்வர் பதிலடி!-வீடியோ

    சென்னை: குழந்தை சுஜித் மீட்பு பணியில் ஏன் ராணுவத்தை பயன்படுத்தவில்லை என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

    ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்ததும், அவரின் மரணமும் தமிழகத்தை நிலை குலைய வைத்துள்ளது. இன்னும் மக்கள் அந்த துக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். இவரை மீட்கும் பணிகள் நான்கு நாட்களாக நடந்து, கடைசியில் தோல்வியில் முடிந்தது.

    வீரப்பன் வேட்டை.. அதிரடி விஜயக்குமாரின் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் பதவி முடிவுக்கு வந்தது!வீரப்பன் வேட்டை.. அதிரடி விஜயக்குமாரின் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் பதவி முடிவுக்கு வந்தது!

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த நிலையில் சுஜித் மரணம் தொடர்பாகவும், அது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கும் தமிழக முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதில், குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடிந்தவரை அரசு போராடியது. மணப்பாறையில் அமைச்சர்கள் 4 நாட்கள் தங்கி பணியாற்றினர்.

    கோபம்

    கோபம்

    சுஜித் விஷயத்தில் நான் கோபம் அடைவதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார்.நான் கோபம் அடையவில்லை.ராணுவ வீரர்களை மீட்பு பணிக்கு அழைக்க வேண்டியது இல்லை. ஸ்டாலின் கோரிக்கையில் நியாயம் இல்லை.

    என்ன பயிற்சி

    என்ன பயிற்சி

    பயிற்சி பெற்ற துணை ராணுவப்படை வீரர்கள் பேரிடர் மீட்பு படையில் இருக்கிறார்கள் .ராணுவத்திற்கு துப்பாக்கி வைத்து சுடத்தான் தெரியும், போர்வெல் பற்றி தெரியாது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரே துணை ராணுவப்படைதான்.

    ராணுவம் இருந்தது

    ராணுவம் இருந்தது

    ஸ்டாலின் அரசியல் காழ்புணர்ச்சியோடு செயல்படுவது வருத்தமளிக்கிறது. திமுக ஆட்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை ஏன் மீட்கவில்லை?. அப்போது ஏன் நீங்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    சுர்ஜித் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்; தேவையற்ற குழப்பத்தை கிளப்ப வேண்டாம். அரசை குறை சொல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார்.எதிர்க்கட்சிகள் அரசைக் குறைகூறுவது முறையல்ல, என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Why the Army not deployed in Sujith's rescue operation? TN CM explains the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X