Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஎஸ்இ, அரசு பள்ளி.. 2க்கும் ஒரே கல்வி கொள்கையை வைங்க.. ஏன் ஏழை பணக்காரன் பாகுபாடு.. பேரரசு கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு 40 சதவிகித தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழியை பேச மட்டும் தான் தெரிகிறதே தவிர, தமிழ் மொழியை எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை. இந்தி வந்தால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் ஏற்கனவே தமிழ் அழிந்துகொண்டு தான் வருகிறது. தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி விருப்ப மொழியாக இருப்பது வேதனையாக இருக்கிறது. அரசு பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஒரே கல்விக்கொள்கை இருக்க வேண்டும். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இருக்க கூடாது என்று பேரரசு கூறினார்.

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால், புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.

Perarasu Trilingual Policy Tamil

மும்மொழி கொள்கை

இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்காக (சமக்ர சிக்‌ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்குமாறு கேட்டு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்க முடியும் என்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இந்தி திணிப்பு விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது. இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வரும் நிலையில், பாஜக மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவான கருத்தை கூறி வருகிறது. இந்த நிலையில் தான் இது பற்றி இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் எழுத படிக்கவே தெரியவில்லை

பேரரசு கூறியதாவது:- மும்மொழி கொள்கை என்பதனை அரசு பள்ளிகளில் மட்டும் தான் குறி வைக்கிறாங்க. மற்ற பள்ளிகள் எல்லாம் பள்ளிகள் இல்லையா.. தனியார் பள்ளியாக இருக்கட்டும், சிபிஎஸ்இ ஆக இருக்கட்டும்.. எல்லா பள்ளிகளிலும் தமிழ் மொழியை முதலில் கட்டாயமாக கொண்டு வர வேண்டும். இன்றைக்கு 40 சதவிகித தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழியை பேச மட்டும் தான் தெரிகிறதே தவிர, தமிழ் மொழியை எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை.

இந்தி வந்தால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். இந்தியை எதிர்ப்போம்.. இந்தியை தார் வைத்து அழிப்போம் என்று சொல்வது எதற்கு. இந்தி வந்தால் தான் தமிழ் அழிய வேண்டுமா.. ஏற்கனவே இங்கு தமிழ் அழிந்துகொண்டு தான் வருகிறது. ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் குழந்தையை சேர்க்கின்றோம் என்றால், விருப்ப மொழியாக இந்தி இருக்கிறது, தெலுங்கு இருக்கிறது, மலையாளம் இருக்கிறது. வேறு மாநில மொழிகள்.

விருப்ப மொழியாக தமிழ் இருந்தால் எப்படி

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியே விருப்ப மொழியாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி விருப்ப மொழியாக இருப்பது வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் குரல் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் அழிந்துகொண்டு இருக்கு. ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தன் குழந்தையை சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கும் போது, விருப்ப மொழியாக தமிழும், இந்தியும் இருக்கிறது என்றால் அவர் இந்தியை தான் தேர்வு செய்வார்.

ஏனென்றால் தமிழ் வீட்டில் படித்துக்கொள்வான். இந்தி மொழியை படிக்கட்டும் என்று தான் பெற்றோர் நினைப்பர். ஆனால் அந்த மாணவனுக்கு தமிழ் பேச தெரியும். எழுதவோ, படிக்கவோ தெரியாமல் போய்விடும். இதற்கு யார் பொறுப்பு.. இந்திய படிக்கிறாங்க.. படிக்காமல் போறாங்க.. ஆனால் எல்லா பள்ளிகளிலும், அரசு பள்ளியாக இருக்கட்டும், தனியார் பள்ளியாக இருக்கட்டும்.. சிபிஎஸ்இயாக இருக்கட்டும் எல்லாத்திலும் தமிழ் மொழியை முதலில் கட்டாயம் என்று கொண்டு வாங்க..

சிபிஎஸ்இ, அரசு பள்ளி என பிரிவு ஏன்

தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் இருக்க வேண்டும். சமூக நீதி, சம தர்மம் எல்லாத்தையும் ஒன்றாக பார்ப்பேன் என்று சொல்வீங்க, மாணவர்களை மட்டும் ஏன் சிபிஎஸ்இ, அரசு பள்ளி என பிரித்து பார்ப்பீர்கள். கொள்கையை ஒன்றாக வையுங்கள். மும்மொழி கொள்கை வேண்டாம் என்றால் ஒத்துக்கொள்கிறோம். இருமொழி கொள்கை ஓகே இருக்கட்டும். ஆனால் அனைத்து பள்ளிகளிலும் ஒரே கல்வி கொள்கை இருக்கனும். சமூக நீதி என்றால் அது தான். சம தர்மம் என்றால் அது தான்.

கொள்கை என்றால் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். கொள்கை என்றால் ஏழைக்கு ஒன்று பணக்காரர்களுக்கு ஒன்று என இருக்கக் கூடாது. தனியார் பள்ளிக்கு ஒன்று அரசு பள்ளிக்கு ஒன்று என்று இருக்க கூடாது. எல்லாருக்கும் ஒன்னா வையுங்கள். இருமொழிக் கொள்கையோ, மும்மொழி கொள்கையோ இல்லை. எல்லாருக்கும் ஒரே மொழி கொள்கை இருக்கனும். இவ்வாறு பேரரசு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+