Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பெரிய சிக்கல்.. அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்த பணிகள் வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.இதன் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கே.எஸ்.கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஊழல் புகாரில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஐகோர்ட் சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஊழல் புகாரில் சிக்கினால், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஏனெனில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் 'அனைத்து இந்தியப் பணிகள்' பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார். அவர்கள் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றினாலும், அவர்கள் மீது மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

Why the hesitation to take action against the IAS officers involved in corruption allegations HC

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை, மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை முறையே அவர்களின் கட்டுப்பாட்டு அதிகார அமைப்புகளாக உள்ளன. எனவே, அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, மத்திய அரசின் அனுமதி அவசியமாகிறது. எனவே தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்த பணிகள் வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு விமலாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.சுரேஷ் ஆஜராகி, 'இந்த ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவை மாநகராட்சி முன்னாள் துணை கமிஷனர் காந்திமதி மீது வழக்கை நடத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கே.எஸ்.கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கை நடத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த பின்பு தான் ஒப்புதல் கோரி மத்திய அரசுக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்' என வாதிட்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு நடத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டிய ஆவணத்தை தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் 19 மாதங்களுக்கு மேலாக தன் வசம் வைத்துள்ளார். முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான ஆவணங்கள் எல்லாம் வேகமாக நகரும்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிரான ஆவணங்கள் மட்டும் ஏன் இவ்வளவு மெதுவாக நகர்கிறது? தேர்தல் பிரசாரத்தின்போது, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் செய்த அமைச்சர்கள், அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவோம் என்று பேசுகின்றனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

100 ரூபாய் லஞ்சம் வாங்கும் தாசில்தார், ஆர்.டி.ஓ.க்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் போலீசார் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், பொதுத்துறை செயலாளர், விஜிலென்ஸ் கமிஷனர், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக தாமாக முன்வந்து சேர்க்கிறேன். அவர்கள் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கை விசாரிப்பதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற காலதாமதம் ஏன் ஏற்பட்டது? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை ஜனவரி 6-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்' என்று உத்தரவு பிறப்பித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+