தமிழ்நாட்டில் இப்படி நடந்ததே இல்லையே.. அப்படியே ஸ்டன் ஆகி நிற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் படை.. குழப்புதே!
சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்ல காவல்துறையில் பணியாற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் என பல்வேறு நிலைகளிலும் இடமாற்றம் நடந்தது. தேர்தல் ஆணையம் இந்த ட்ரான்ஸ்ஃபரை செய்திருந்தது. தேர்தல் முடிந்து நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது.
பொதுவாக, நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதும், தேர்தல் பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், மீண்டும் பழைய இடங்களுக்கே மாறுதல் செய்யப்படும் அல்லது அவர்கள் விரும்பும் பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதற்கு காவல் துறை அதிகாரிகள் தமிழக டிஜிபியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.'

அந்த வகையில், தங்களுக்கு தோதான இடங்களுக்கு இடமாறுதல் கேட்டு டி.எஸ்.பி.க்கள்., இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் டிஜிபியிடம் கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளனர். கடிதம் கொடுக்கப்பட்டு 1 மாதமாகியும் அவர்களுக்கு புதிய இடங்களில் போஸ்டிங் போடப்படவில்லை.
காரணம், போஸ்டிங்கிற்கு அப்ரூவல் தரவேண்டிய காவல்துறை போர்ட் கூடி முடிவெடுக்கவில்லையாம். அதாவது, இது போன்ற இடமாறுதல்களுக்கு ஒப்புதல் தருவதற்காக டி.ஜி.பி.,, அடிசனல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு ), அடிசனல் டி.ஜி.பி. ( நிர்வாகம்) ஆகிய மூன்று உயரதிகாரிகள் கொண்ட கமிட்டி இருக்கிறது. இந்த கமிட்டி கூடி ஆலோசித்து, காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அதற்கேற்ப இடமாறுதல்களை செய்வதற்கு அப்ரூவல் அளிப்பர். இந்த அப்ரூவல் இன்னும் கிடைக்கவில்லையாம். அதனாலே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த காவல்நிலைய அதிகாரிகளுக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. இதனால், தொலை தூரத்தில் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற புலம்பல்கள் காவல்துறையில் அதிகம் கேட்கிறது.
மற்ற அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில், தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பல்வேறு முக்கியமான அதிகாரிகள், ஆட்சியர்கள், ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அரசு துணை செயலாளர் அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரி கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ், ஈரோடு கூடுதல் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சாப்ரா, திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்த ஜோதி, கைவினைப்பொருட்கள் வளர்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அதிகாரிகள் மாற்றம்: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.
அதோடு இன்று தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஸ்டாலின் முடிவு: இந்த விவகாரத்தில் ஸ்டாலின் சுயமாக முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது இவர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை. அவராகவே தேர்வு செய்தவர்கள்தான் இவர்கள் எல்லோரும். இவர்களை கைப்பட டிக் அடித்து ஸ்டாலின் பணியிட மாற்றம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி இதுவரை தமிழக அரசியலில் பொதுவாக நடக்காத விஷயம் இன்று அதிகாரிகள் மாற்றத்தில் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications